Published:Updated:

இது சமையற்கலைக்கான ஒலிம்பிக் போட்டி!

SICA  சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...
பிரீமியம் ஸ்டோரி
SICA சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...

இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள்!

இது சமையற்கலைக்கான ஒலிம்பிக் போட்டி!

இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள்!

Published:Updated:
SICA  சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...
பிரீமியம் ஸ்டோரி
SICA சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...
ழுபதுக்கு மேற்பட்ட நாடுகளுடனும், இரண்டா யிரத்துக்கு மேற்பட்ட போட்டியாளர்களுடனும் ஜெர்மனியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இன்டர்நேஷனல் கலினரி ஒலிம்பிக்ஸ்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் போலவே, சமையற் கலைக்காக நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் இது. 1896-ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்த ஒலிம்பிக்ஸின் வெள்ளி விழாக் கொண்டாட்டப் போட்டிகள் 2020 பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடைபெற்றன. இதில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை... நான்கு. இந்த நான்கு பதக்கங்களுக்கும் சொந்தக்காரர் சென்னை யைச் சேர்ந்த 16 வயது யஷ்வந்த் குமார் உமாசங்கர். இந்த முறை இந்தியாவிலிருந்து கலினரி ஒலிம்பிக்ஸுக்குச் சென்றவர் இவர் மட்டுமே!

யஷ்வந்த் குமார்
யஷ்வந்த் குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனி ஒருவனாகச் சென்று இந்தியாவுக்காக நான்கு வெள்ளிப் பதக்கங்களை அள்ளிவந்த யஷ்வந்த் குமாருக்கு SICA (South India Chef’s Association) சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், தான் வென்ற பதங்கங்களுடனும் தான் செய்த படைப்புகளுடனும் கலந்துகொண்ட யஷ்வந்த் குமாரிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இது நான் கலந்துக்கிட்ட ரெண்டாவது கலினரி ஒலிம்பிக்ஸ். 2016-ல் நடந்த போட்டியில் முதன் முறையா , சமையற்கலைஞரான என் அப்பா உமாசங்கர் தனபால்கூட சேர்ந்து கலந்துக்கிட்டேன். அந்த வருஷம் அப்பா இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் ஜெயிச்சாங்க. அப்பாதான் என் குரு. ஒன்பது வயசுலேருந்தே அவர்கிட்ட சமையற்கலையையும், வெஜிடபிள் கார்விங்கையும் கத்துக்கிட்டு வர்றேன். இந்த வருஷம் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அப்பாவும் நானும் சேர்ந்து போகத்தான் முதல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனா, கொஞ்சம் பணப்பிரச்னை. ரெண்டு பேருல யாராவது ஒருத்தர்தான் போக முடியும் என்கிற நிலை. அப்போ, ‘நீ கலந்துக்கிட்டு ஜெயிச்சிட்டு வா’ன்னு சொன்னாரு. அவர் தான் எப்பவும் என் எனர்ஜி பூஸ்டர்.

சமையற்கலை
சமையற்கலை

சமையற்கலையிலேயும் கார்விங் செய்றதுலேயும் ஆர்வம் இருந்ததால, நான் பத்தாம் வகுப்பை இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூல்லதான் முடிச்சேன். அதனால பப்ளிக் எக்ஸாம் முன்னாடியே முடிஞ்சிருச்சு. ஒலிம்பிக் போட்டிக்குப் போறதுக்கு முன்னாடி நிறைய பயிற்சி செஞ்சேன்.

2020 கலினரி ஒலிம்பிக்ஸ் போட்டியில் அமெரிக்கா, சீனான்னு பல நாடுகள்ல இருந்தும் கலந்துக்கிட்டாங்க. பெரும்பாலும் 35 வயசுக்கு மேல உள்ளவங்க.

SICA  சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...
SICA சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...

இந்த ஒலிம்பிக்ஸ்ல 14 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தன. அதுல நான் மூணு போட்டிகள்ல கலந்துக்கிட்டேன். முதல்ல நான் கலந்துக்கிட்டது லைவ் கார்விங் (Live Carving). இதுக்கு மூணு மணிநேரம் கொடுத்தாங்க. லைவ் கார்விங் என்பது காய்கறி, பழங்களைச் செதுக்கி சிற்பம் செய்யறது. அவங்க கொடுக்குற மூணு மணி நேரத்துக்குள்ள லைவ்வா கார்விங் செஞ்சு காட்டணும்.

சமையற்கலை
சமையற்கலை

அடுத்த போட்டி வெஜிடபிள் அண்டு ஃபுரூட்ஸ் கார்விங் (Carving Fruits and Vegetable). அவங்க சொல்ற விதிமுறைகளைப் பின்பற்றி நாம தங்கியிருக்கிற இடத்துல யிருந்தே கார்விங் செஞ்சி எடுத்து வரணும்.

அடுத்தது பாஸ்ட்ரி ஆர்ட்டிஸ்டிக் (Pastry Artistic). கேக்குகள் மேல வைக்குற பூக்கள் போன்ற சிற்பங்களை சர்க்கரை (Sugar) மூலமா செய்யுறது. பாஸ்ட்ரி ஆர்ட்டிஸ்டிக் பிரிவில ரெண்டு போட்டியில பங்கெடுத்தேன். நான் கலந்துகொண்ட நான்கு போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கங்கள் வாங்கினேன்.

சமையற்கலை
சமையற்கலை

இந்தப் போட்டிகள் நடந்தப்போ, ஜெர்மனியில வெப்பநிலை மைனஸ்ல இருந்தது. கார்விங் செய்யும்போது கையெல்லாம் நடுங்க ஆரம்பிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் சமாளிச்சேன். எனக்கு சமையலில் ஆர்வம் இருந்தாலும் இந்த ஒலிம்பிக் போட்டியில சமையல் பிரிவுகளில் என்னால கலந்துக்க முடியல. அதெல்லாம் டீம் வொர்க்கா இருந்ததுதான் காரணம். ஒவ்வொரு நாட்டுல இருந்தும் மூன்று அல்லது நான்கு பேரா சேர்ந்து கலந்துக்கிட்டாங்க. இந்தியாவுலேருந்து நான் மட்டுமே போனதனால என்னால கலந்துக்க முடியல.

சமையற்கலை
சமையற்கலை

நம்ம நாட்டுல திறமை இருக்கிற சமையற் கலைஞர்கள் நிறைய பேர் இருந்தும் யாரும் இந்த ஒலிம்பிக் போட்டியில கலந்துக்க முன் வராததுக்குக் காரணம் இதற்கான செலவுதான். மற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து உதவித் தொகை கிடைக்கிற மாதிரி சமையலுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கிறவங் களுக்குக் கிடைக்கிறதில்ல. சரியான உதவிகள் கிடைச்சா விளையாட்டுப் போட்டிகளில் கிடைக்கிற மாதிரி கலினரி ஒலிம்பிக் போட்டிகளிலேயும் நிறைய பதங்கங்கள் கிடைக்கும். இன்னொரு பக்கம், பெற்றோர்களும் சமையற்கலையில் ஆர்வமிருக்கிற தங்களோட குழந்தைகளை அதில் ஈடுபட ஊக்கப்படுத்தணும்.

என் அடுத்த லட்சியம், சமையற்கலை மற்றும் கார்விங் கலைக்கு நடக்கிற உலகக்கோப்பை போட்டியில வெற்றி பெறணும். இந்தக் கலைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லணும்!”