
எல்லோரையும்போல வினுஷாவுக்கும், தன் சிறு வயதில் சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு அரும்பியது. ஆனால், கனவை நிஜமாக்க எல்லோரையும் போல, வளரும் வரை அவள் காத்திருக்கவில்லை. தன் சின்னஞ்சிறு கைகளைக் கொண்டு எட்டு வயதிலேயே, கனவை நோக்கி வேகமாக பறக்கத் தொடங்கிவிட்டாள் குழந்தை வினுஷா!

இப்போது ஃபோர் சீசன் பேஸ்ட்ரி' என்ற குட்டி கேக் கடையின் பெரிய முதலாளி, நம்ம சுட்டி வினுஷாதான்! இந்தச் `சுட்டி தொழில் முனைவோர்' இப்போது நான்காம் வகுப்பு படிக்கிறாள். வினுஷாவிடம், `கப் கேக் எப்படி செய்வீங்க?' என்று கேட்டோம். ரெசிபியாகவே செய்து காண்பித்துவிட்டார் வினு! இதோ அந்தச் செய்முறை:
தேவையான பொருள்கள் :
மைதா - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
வெண்ணிலா மற்றும் அன்னாசி எசென்ஸ் - தலா அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - சிறிதளவு
எண்ணெய் - 100 மி.லி.
முட்டை - 2
உப்பு சேர்க்காத வெண்ணெய் - 100 கிராம்
ஐஸிங் சுகர் - 200 கிராம்

செய்முறை :
* பீட்டர் (Cake Beaters) மூலமாக முட்டை மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும்.
* வேறொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் எண்ணெய்யை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, நன்கு பீட் செய்ய வேண்டும்.
இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் வெண்ணிலா, அன்னாசி எசென்ஸைச் சேர்த்துக்கொள்ளவும். கிடைத்துள்ள கேக் கலவையை, கப் கேக் மோல்டில் வைத்து ஓவனில் 180 டிகிரியில் 10 - 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பிறகு வெளியே எடுத்துப் பார்த்தால், அசத்தலான கப் கேக் ரெடி!
பட்டர் க்ரீம் தயாரிக்க, உப்பு சேர்க்காத வெண்ணெயை நன்கு பீட் செய்துகொண்டால் போதுமானது. இடையிடையே, ஐஸிங் சுகர் மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். கலர் க்ரீம் வேண்டுமென்பவர்கள், பீட் செய்யும்போது ஃபுட் கலர் சேர்த்துக்கொள்ளவும்.

Also Read
கேக் இளவரசி வினுஷா!

`கப் கேக்' ரெசிபியை வீடியோ வடிவில் கீழே காணலாம்.