ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த்: மூட்டுவலிக்கு மருந்தாகும் தரைப்பசலை

தரைப்பசலை
பிரீமியம் ஸ்டோரி
News
தரைப்பசலை

ஹெல்த்

தரைப்பசலைக்கீரை பல நோய்களுக்கு மருந்து. இதை தினமும் உணவில் சேர்த்துவந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

  • தரைப்பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தச்சோகையிலிருந்து விடுபடலாம். ரத்த அழுத்தம், இதயநோய், உடல்பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 ஹெல்த்: மூட்டுவலிக்கு மருந்தாகும் தரைப்பசலை
  • கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாகக்கொண்டது என்பதால், இந்தக் கீரை, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

  • வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே அதிகம் உள்ளதால் சுவாசக்கோளாறுகள், சிறுநீரகப்பாதைத் தொற்று போன்றவற்றிலிருந்தும் காக்கும்.

 ஹெல்த்: மூட்டுவலிக்கு மருந்தாகும் தரைப்பசலை
  • நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்து. செரிமான மண்டலம் சீராகச் செயல்படும்.

  • மக்னீசியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளும்.

  • ஃபோலேட் அதிகமாக இருப்பதால், தரைப்பசலைக்கீரையை உணவில் சேர்ப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

  • ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இளமைத் தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

  • வைட்டமின் கே வளமாக இருப்பதால், எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும். மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்

  • இந்தக் கீரையில் ஃபோலிக் அமிலம் நிறைந்திருக்கிறது. கர்ப்பிணிகள் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகள் நல்ல மூளை வளர்ச்சியுடன் இருப்பார்கள். தாய்ப்பாலும் நன்றாகச் சுரக்கும்.