நமது உடல் ஆரோக்கியத்திற்கு, சத்துகள் நிரம்பிய உணவுகள் இன்றியமையாதவை. அதேநேரம் உணவுப் பொருள்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அவை நமது உடலுக்கு கேடு விளைவிக்கலாம். குறிப்பாக, இறைச்சி போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்தால், அந்த உணவுகளே நமக்கு நச்சுகளாக மாறி உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் நமது சமையல் முறையும் இன்று பெருமளவில் மாறிவிட்டது. விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த இல்லங்களை, இன்று மின்சார அடுப்புகள், மைக்ரோவேவ், ஏர்ஃப்ரையர்கள், எலக்ட்ரிக் குக்கர்கள் அலங்கரிக்கின்றன. மின்சார உபகரணங்கள், சமைக்கும் பணியை எளிமையாக்கி விட்டாலும், அவற்றால் சில பாதகங்களும் உள்ளன.

இந்த மின்சார சாதனங்கள் நமக்கு ஏற்படுத்தும் சில தீங்குகள் பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) சமீபத்திய ஆய்வில், அடுப்பு அல்லாத பிற சாதனங்களில் சமைத்த, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்டவர்களில் பலருக்கு நச்சுத்தன்மையால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
``இது தொடர்பாக, இன்டர்நெட் பேனல் சர்வேயில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், பதப்படுத்தப் பட்ட சிக்கன் சமைக்க, அடுப்பைத் தவிர வேறு உபகரணங் களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்; 29% பேர் மைக்ரோவேவ் பயன்படுத்தினார்கள்” என்று ஆய்வு கூறுகிறது.
அதெல்லாம் சரி, மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையர் பயன்படுத்தினால் என்ன பிரச்னை ஏற்படும்? இத்தகைய மின்சார சமையல் உபகரணங்களில் பெரும்பாலானவை, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வேக வைக்கக்கூடிய அளவுக்கு மின்சார வாட்ஸை கொண்டிருக்கவில்லை அல்லது இறைச்சி வேகக்கூடிய சரியான வெப்பநிலையில் ஏர் ஃப்ரையர் இருப்பதை உறுதி செய்யும் உணவு வெப்பமானியை அவர்கள் பயன் படுத்தவில்லை. இன்னும் சிலர், மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையரில் உணவைச் சமைப்பதாகவும், பரிந்துரைக்கப் பட்டதைவிடக் குறைந்த நேரத்துக்குள் சமைத்து முடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட சிக்கன், கெடாமல் இருக்க சிலவகை பொருள்கள் அதன்மேல் பூசப்பட்டிருக்கும். பதப்படுத்தப்பட்ட சிக்கனை மின்சாதனங்களில் சமைக்கும்போது, 165 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை எட்டினால்தான், அது உண்ணக்கூடிய நிலையை அடையும். ஆனால், ஏர் ஃப்ரையர் போன்றவற்றில் சமைக்கும்போது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி முழுமையாக வேகாத சூழல் உள்ளது. அதில் உள்ள பாக்டீரியா கிருமிகள் கொல்லப்படாமல் அப்படியே இருக்கும். இது உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.

இத்தகைய பிரச்னை நீண்ட காலமாக உள்ள நிலையில், இதற்கு தீர்வளிக்கும் விதமாக, சமையல் மின்சாதன தயாரிப்புகளில் அது குறித்த விவரங்களைக் கொண்ட லேபிள் ஒட்டி, உற்பத்தியாளர்கள் புதுப்பித்துள்ளனர். இதன் மூலம், அந்தச் சாதனங்களின் திறன் உள்ளிட்டவற்றை நுகர்வோர் எளிதில் அறிந்துகொண்டு சிக்கன் உள்ளிட்டவற்றை சமைப்பதில் எச்சரிக்கையாக இருக்கலாம்.
எனினும், இது நிரந்தர தீர்வு அல்ல என்பதால், நுகர்வோரின் பாதுகாப்பு கருதி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றை சமைக்கும் மின் உபகரணங்களின் தர மேம்பாடு குறித்து ஆலோசிக்க வேண்டுமென்று, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் களுக்கு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அழைப்பு விடுத்துள்ளது.