தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

சத்துகளின் சங்கமம்: பச்சைப்பயற்று கஞ்சி - எள் துவையல்

பச்சைப்பயற்று கஞ்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பச்சைப்பயற்று கஞ்சி

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பிகளை இணைப்பிதழில் காண்க!

இளவரசி வெற்றிவேந்தன், படம்: வி.தேவி பூங்குழலி

தேவை: புழுங்கல் அரிசி - ஒரு கப் பச்சைப்பயறு - கால் கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 6 - 8 (தோலுரிக்கவும்) பூண்டு - 3 பல் சீரகம் - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு.

துவையல் செய்ய: எள் - கால் கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 2 பல் புளி கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயற்றை வறுத்து அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அரிசி, பச்சைப்பயறு, மஞ்சள்தூள், உப்புடன் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். குக்கரில் நான்கு விசில்விட்டு இறக்கவும். எள் துவையல் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் நன்றாக வறுத்து, தண்ணீர் தெளித்து அரைத்துக்கொள்ளவும். பச்சைப்பயற்று கஞ்சியும், எள் துவையலும் சத்து நிறைந்தது. அதோடு மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

சத்துகளின் சங்கமம்: பச்சைப்பயற்று கஞ்சி - எள் துவையல்

பச்சைப்பயறு நமது பாரம்பர்ய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பச்சைப்பயற்றைக்கொண்டு, இட்லி, சப்பாத்தி, ஊத்தப்பம் குருமா, சூப், சாண்ட்விச், லட்டு என வகை வகையான, ருசிமிக்க ரெசிப்பிகளை இந்த இதழ் 32 பக்க இணைப்பில் வழங்கி அசத்துகிறார் சமையற்கலைஞர் இளவரசி வெற்றிவேந்தன்.