Published:Updated:

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

##~##

து ஒரு திருமண வீடு. நெற்றி நிறைய பட்டை, தூய வெள்ளாடையுடன் பரபரப்பாகப் பந்திப் பரிமாறிக்கொண்டு இருந்தவர்களிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்... ''ஏம்பா, நீங்க ஆண்டார்பந்திக்காராங்கதானே?'' சாம் பார் ஊற்றிக்கொண்டு இருந்தவர், ''ஆமாங்க'' என்று ஆமோதிக்கவும் பெரியவர் சொல்கிறார்... ''அதானே, பார்த்தேன்? இந்த ருசி வேற யாருக்கு வரும்?''

அப்படி என்ன ஆண்டார்பந்தியில் விசேஷம்?

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் இருக்கிற மருவத்தூரில் இருந்து சற்று உள்ளே அரசலாற்றின் தென்கரையில் இருக்கிறது ஆண்டார்பந்தி. இந்தக் கிராமத்தின் சைவ சமையல் காவிரி மாவட்டங்களைத் தாண்டியும்  பெயர் பெற்றது. சமையல்காரர்கள் நிரம்பிய ஊர். பிரசித்திப் பெற்ற ஆன்மிகத் தலமான திருவீழி மிழலையின் வரலாறோடுப் பிணைந்தது ஆண்டார்பந்தி வரலாறு. ''திருவீழிமிழலை இறைவனை வழிபட வந்த அப்பர் சாமி களோடு வந்து இருந்த அடியவர்களை ஆற்றின் இக்கரையில் தங்கவைத்தார் அப்பர். அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு தயாரித்து வழங்கப்பட்டது. அப்படி ஆண்டார்களுக்கு (அடியவர்களுக்கு) பந்தி வைத்த இடம்தான் ஆண்டார்பந்தி. அந்த அடியவர் கூட்டம்தான் தற்போதைய பட்டாரகர்கள்!'' என்று ஊரின் வரலாற்றைச் சொல்கிறார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான புலவர் சிவப்பிரகாசம்.

ஊரில் கீழத் தெரு, மேலத் தெரு என்று இரண்டே தெருக்கள்தான். மொத்தம் 120 வீடுகள். அத்தனை வீடுகளிலும் இருப்பவர்களும் ஒரே சாதியினர். ஆகையினால், எல்லோரும் மாமன் மச்சான்கள் அல்லது பங்காளிகள். தமிழ்ப் புலவர்கள் அதிகம் கொண்டதாக இருந்தாலும் கிட்டத்தட்ட 70 குடும்பங்கள் சமையல் தொழிலை நம்பியே இருக்கிறார்கள். சிவத்தொண்டர்களான இவர்கள் ஆரம்பக் காலங்களில் வீட்டில் இருந்து கட்டுசோறு கட்டிக்கொண்டுதான் சமையல் வேலைக்குப் போவார்கள். யார் வீட்டிலும் கை நனைக்க மாட்டார்களாம். காலப்போக்கில் இந்த வழக்கம் குறைந்துவிட்டது.

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

கணபதி, வாரியார், துரைசாமி, அருணாசலம் என்று புகழ்பெற்ற மாஸ்டர்கள் இருந்து இருக்கிறார்கள். இப்போது திருஞானம், குருசாமி, சுப்ரமணி, விஜயராகவன், நடராஜன், சரவணன் என்று 30-க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் இருக்கிறார்கள். 16 வயது நிரம்பிய இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும்கூட சமையல் உதவியாளராகப் போய் ஒரு நாளைக்கு

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

400 சம்பாதிக்கிறார்கள். பெரியவர்கள் குறைந்தபட்சம்  

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!
ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

1,500 சம்பாதிக்கிறார்கள். அதனால் யார் வீட்டிலும் கஷ்ட ஜீவனம் கிடையாது. வீட்டுக்குள் நுழைந்தால் எலுமிச்சம் பழ ரசம் பருகத் தருகிறார்கள். எல்லோர் வீட்டிலும் எலுமிச்சம் பழத் தோட்டம் இருக்கிறது. அதுவும் இவர்களுக்கு வருமானம் தருகிறது. சைவத்துக்கு இடையூறாக வந்துவிடுமோ என்ற ஐயத்தால் இன்னமும் யார் வீட்டிலும் ஆடோ, கோழியோ வளர்ப்பது இல்லை. மொத்தமாகசமையல் ஆர்டர் எடுத்து ஒரு இலைக்கு இவ்வளவு என்று  பேசிக்கொண்டும் சமைக்கிறார்கள்.

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

50-ல் இருந்து  

ஊர் முழுக்க நள மகாராஜாக்கள்!

150 வரை ரேட் பேசி அதற்குத் தகுந்தாற்போல் அயிட்டங்களை அதிகரித்துக் கொள்கிறார்கள். ''ரேட் அதிகமாக அதிகமாக அயிட்டங்கள்  மட்டும்தான் மாறுமே தவிர, சுவை மாறாது. 50 பேராக இருந்தாலும் 50 ஆயிரம் பேருக்குச் சமைத்தாலும் ருசியில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டோம். இதுதான் ஆண்டார்பந்திக்காரர்களின் கைப் பக்குவம்'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் திருஞானம் மாஸ்டர். நளபாக 'சக்கரவர்த்திகள்’தான்!

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன், வீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு