Published:Updated:

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

Published:Updated:
##~##

'அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்’ என்ற பெயரில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா! விழாவை நடத்தியது தமிழ் அமைப்போ, எழுத்தாளர்கள் அமைப்போ அல்ல; ஒரு மெட்ரிக் பள்ளி. அதுவும் மாணவர்கள் முன்னிலையில்தான் விழா. சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில்தான் இப்படி ஓர் ஆச்சர்ய நிகழ்வு!

''இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, அதுபற்றி மாணவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். எல்லா சமூகங்களிலும் எழுத்தாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் பெரும் முக்கியத்துவம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில்தான் யாராலுமே அவர்கள் கண்டுகொள்ளப்படுவது இல்லை என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. அப்போது, ராஜம்கிருஷ்ணனுக்கு உதவ முடிவு எடுத்தோம். அன்றைக்குத் தோன்றிய விதைதான் இந்த நிகழ்ச்சி. அறிஞர்களைப் போற்ற வேண்டும்; அவர்களை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது!'' என்று நிகழ்ச்சிக்கான முன்கதை சொன்னார் பள்ளியின் முதல்வரான துளசிதாசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

மாணவர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே விருது வழங்கும் வைபவம் தொடங்கியது. பாமா, மனுஷ்ய புத்திரன், யூமா வாசுகி ஆகியோருக்குப் 'படைப்பூக்க விருது’!

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வை அதன் வலியோடு பதிவு செய்தவர் பாமா. அவருடைய முதல் நாவலான 'கருக்கு’ பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்புரையாற்றிய பாமா, ''ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வின் விளிம்பு நிலையில் இருந்து மையத்துக்கு வர வேண்டும் என்ற கனவின் வெளிப்பாடுதான் எனது எழுத்து. நாங்களும் மனிதர்கள்தான் என்று ஓங்கிச் சொல்ல எனக்குப் பயன்பட்ட ஆயுதம் எழுத்து. மாணவர்களாகிய நீங்கள் சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை உணர வேண்டும். மாற்றத்துக்கு முயற்சி செய்ய வேண்டும்!'' என்று உணர்வு பொங்கச் சொன்னதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்கள் மாணவர்கள்.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

'உயிர்மை’ இதழின் ஆசிரியரான மனுஷ்யபுத்திரன், ''குழந்தைகளிடம் இருந்து எது கிடைத்தாலும், அது மதிப்பு மிக்கதாகிறது. இத்தனைக் குழந்தைகளின் கரகோஷத்துக்கு இடையே கிடைத்த இந்த விருதை பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி!'' என்று உருகினார்.  

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

ஓவியம், கவிதை, சிறுகதை, நாவல் மொழி பெயர்ப்பு என பல தளங்களில் இயங்குபவர் யூமா வாசுகி.  ''கலை இலக்கியத்தோடு ஒன்றி உரையாடினால்தான் நல்ல மனிதர்களாக வர முடியும்!'' என்று மாணவர்களுக்கு நல்வழி காட்டினார்.

பிரபஞ்சனுக்கு 'தமிழ் இலக்கிய விருது’. தன் பாணியில் கதை சொல்லி கல்வியின் பெருமையையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் உணர்த்தினார்.

எழுத்தாளரும் ஓவியருமான மனோகர் தேவதாஸுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளித்தார்கள். 'ரெட்டினிடிஸ் பிக்மெண்டோசா’ என்ற கண் நோயினால் பாதிக்கப்பட்ட மனோ கர் தேவதாஸ், கொஞ்சம் கொஞ்ச மாகப் பார்வையை இழந்து, முற்றிலுமாகப் பறிகொடுத்தவர். எனினும், இன்றளவும் தன்னுடைய ஓவியப் பணியைத் தொடர்கிறார்.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை!

''மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை; அதையும் தாண்டி வாழ்க்கையில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வாழ்வை ரசியுங்கள். மழைக் காலத்தில் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்போது வயல்கள் பச்சைப் பசேல் என்று இருப்பதை மலைக் கோட்டை மேல் இருந்து பார்ப்பது எத்தனை அழகு தெரியுமா?'' என்று அவர் சிலாகித்தபோது, அவருடைய கண்களில் புரண்ட நீரைப் பார்த்து மாணவர்கள் கண்களிலும் அருவி.

பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற வந்த நடிகர் சிவகுமார், ''ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித் திறமை இருக்கும். எனக்கு ஓவியம். இன்னிக்கு நான் மேடையில் நிக்குறதுக்குக் காரணம் அதுதான். அதுபோல, உங்களோட தனித் திறமையை நீங்கள் அடையாளம் காணுங்கள். அதன் வழியில் செல்லுங்கள்!'' என்று வாழ்த்தினார் முத்தாய்ப்பாக.

-ஆர்.லோகநாதன்,    படங்கள்: என்.ஜி.மணிகண்டன்