Published:Updated:

களவாணிக்கு கால்கட்டு!

களவாணிக்கு கால்கட்டு!

##~##

'களவாணி’ இயக்குநர் சற்குணத்துக்கு கல்யாணம்!

•  உறவுக்காரப் பெண் சரண்யாதான் மணமகள். 'களவாணி’ படம் முழுவதையும் படம் பிடித்த சொந்த ஊரான ஆம்பலாபட்டு கிராமத்திலேயே உற்றார் உறவினர் சூழ, கால்கட்டு போட்டுக்கொண்டார் சற்குணம்!

•  விருந்தினர்களை வாசலில் இருந்து ஓடியாடி வரவேற்றுக்கொண்டு இருந்தார் விமல். ''நம்ம வீட்டுக் கல்யாணம்ல!'' என்று உரிமையை வெளிப்படுத்திக்கொண்டார்!

•  கிராமத்து திருமணச் சடங்குகளின்போது  களைத்துப் போன சற்குணத்துக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்து குளிர்வித்துக்கொண்டு இருந்தது 'களவாணி’ வில்லன் திருமுருகன்!

களவாணிக்கு கால்கட்டு!

•  'குருநாதர் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால் தான் கட்டுவேன்’ என்று அடம்பிடித்து,  பாக்யராஜை வரவழைத்துவிட்டார் சற்குணம். மேடையில் பாக்யராஜ் கண்களில் நெகிழ்ச்சிப் பரவசம்!

•  சிக்கன், மட்டன், மீன் என வகைவகையான  அசைவ விருந்து கல்யாண ஸ்பெஷல்!

•  'வாகைச் சூட வா’ ஹீரோயின் இனியா, தன்னுடைய சகோதரியுடன் வந்திருந்தார். பாப்பாக்களையே ரவுண்ட் கட்டிய வண்ணம் இருந்தது இளசுகள் பட்டாளம்!

களவாணிக்கு கால்கட்டு!

•  ''பொண்ணைப் பக்கத்துல நெருங்கி உட்காரச் சொல்லுங்க...'' என்று போட்டோகிராஃபர் குரல் கொடுக்கும்போது எல்லாம், ''அப்படியே எடுப்பா. பொண்ணு வெட்கப்படுதுல்லா!'' என்று குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார் உள்ளுர் பெருசு ஒருவர்!

களவாணிக்கு கால்கட்டு!

•  ''மாப்பிளை சார் மனைவியைப் பத்தி நாலு வார்த்தை சொல்லுங்க!'' என்று கேட்டேன்  சற்குணத்திடம். ''நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகுதான் நாங்க பேசவே ஆரம்பிச்சோம். நல்ல பொண்ணு. இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்காங்க மேடம்!'' -என்று 'அடக்கஒடுக்கமாக’ பதில் வந்தது 'கணவன்’ சற்குணத்திடம் இருந்து!

- சி. சுரேஷ் , படங்கள்: கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு