##~##

வராத்திரி வந்துவிட்டது. கொலு பொம்மைகளும் வந்துவிட்டன. இந்தக் கொலு பொம்மைகள் எல்லாம் எங்கு இருந்து வருகின்றன? எப்படித் தயார் ஆகின்றன?

 மயிலாடுதுறை 'மாயூரம் ஸ்ரீமுருகேசன் கைவண்ணக் கலைக் கூடம்’. வீடு முழுவதும் நிறைந்து இருக்கின்றன பொம்மைகள். தயாராகி இருக்கும் அத்தனை பொம்மைகளும் அச்சு அசலாக அப்படியே உண்மை உருவங்கள்போலவே இருக்கின்றன.

பிட்டுக்கு மண் சுமந்த கதை, ஆண்டாள் அழகர் திருமணம், தசாவதாரங்கள், சீதா கல்யாணம், ஐயப்பன் பிறப்பு, பக்த பிரகலாதன், பன்னிரு ஆழ்வார்கள், அறுபடை வீடுகள், கஜேந்திர மோட்சம், திருப்பாற் கடலில் பள்ளிகொண்ட ரெங்கநாதர்... இப்படி அறுபதுக்கும் மேற்பட்ட புராண கதைகளை பொம்மைகளாக்கி கண் முன்னேவைத்து இருக்கிறார்கள். வரலாற்று நிகழ்வுகளையும் விட்டுவைக்கவில்லை. காமராஜர், நேரு, காந்தி, அம்பேத்கர் என்று தேசிய தலைவர்கள் கம்பீரமாக நிற்கிறார்கள். குல்லா வியாபாரி குரங்கு கதை, பாட்டி வடை சுட்ட கதையும்கூட பொம்மையாகி நிற்கின்றன.

பொம்மை உண்மை!

பொம்மைகள்

பொம்மை உண்மை!

20  விலையில் இருந்து

பொம்மை உண்மை!

20 ஆயிரம் வரை விலை மதிப்பில் இருக்கின்றன.  

''களிமண் மற்றும் பேப்பர் கூழ் ஆகியவற்றால் பொம்மைகளைச் செய்கிறோம். கணிமண் பொம்மைகள் சூளையில் வைத்து சுடப்பட்டு வண்ணம் தீட்டப்படுகின்றன. அளவில் பெரிய பொம்மைகள் பேப்பர் கூழால் செய்யப் படுகின்றன. 98 வருடங்களுக்கு முன் எங்கள் தாத்தாவின் அப்பா காலத்தில் தொடங்கப்பட்ட தொழில் இது. ஜனாதிபதி ஜெயில் சிங், கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரின் கைகளால் எங்கள் குடும்பத்தினர் விருதுகள் வாங்கி இருக்கிறார்கள்!'' என்கிறார் ஆனந்த்குமார்.

பொம்மை உண்மை!

வருடம் முழுவதும் பொம்மைகள் செய் தாலும் விற்பனை செப்டம்பர் மாதத்தில் மட்டும்தானாம். அதுவரை முதலீடு செய்துவிட்டு காத்திருந்தால் செப்டம்பரில் லாபம் பார்க்கலாம். அப்போது கிடைக்கும் லாபத்தை வைத்துத்தான் வருடம் முழுவதும் போக்க வேண்டும். இப்போது கிருஷ்ணஜெயந்தி, கிறிஸ்துமஸ், விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களின் போதும் கொஞ்சம் வருமானம் கிடைக்கிறதாம்.

தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து இருக்கின்றன. பரபரவெனத் தயாராகிக்கொண்டு இருக்கின்றனர் கடவுளர்கள்!

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு