Published:Updated:

இது நமக்கு 124-வது தேர்தல்!

திருச்சி இடைத்தேர்தலில் தேர்தல் மன்னன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களை எல்லாம் முந்திக்கொண்டு முதல் ஆளாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார், மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் போன்ற பெரிய மீசைகொண்ட அவரிடம் பேசினால், ஒரு குழந்தை போல உற்சாகமாகிறார்.

 ''வீரப்பன் சந்தனக் கடத்தல் மன்னன்னா... நான் தேர்தல் மன்னன். இது வரைக்கும் 123 முறை தேர்தல்ல போட்டி போட்டு இருக்கேன். இது 124-வது தடவை!''- மீசை முறுக்கி சிரிக்கும் பத்மராஜன், மேட்டூரில் டயர் ரீட்ரேடிங் கம்பெனி நடத்துகிறார்.  

இது நமக்கு 124-வது தேர்தல்!

''முதன்முதலில் 1988-ம் ஆண்டு மேட்டூரில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது எல்லோரும் என்னை ஏளனமாப் பார்த்தாங்க. 'நீயெல்லாம் தேர்தல்ல போட்டியிட்டு என்ன சாதிக்கப் போற? இது வீண் வேலை’னு கேலி செஞ்சாங்க. அரசியல் கட்சிகளை எதிர்த்து போட்டி யிட்டு ஜெயிக்க முடியாதுனு எனக்கும் நல்லாத் தெரியும். ஆனால், ஒரு குடிமகனுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட உரிமை இருக்குதே! அதை மக்களுக்கு உணர்த்தத்தான் தொடர்ந்து போட்டியிட ஆரம்பிச்சேன்'' என்று சொல்லும் பத்மராஜன்... ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர் தல், ராஜ்ய சபா தேர்தல் என்று எதையும் விட்டு வைத்தது இல்லை. பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் என்று மாநிலம் தாண்டியும் போட்டியிட்டு அசத்தி இருக் கிறார்.

''1996-ல் ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் நரசிம் மராவை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செஞ்சேன். மனு தாக்கல் செஞ்சுட்டு வெளியே வந்தா... நாலஞ்சு பேர் ஒரு ஜீப்பில் வந்து என்னைக் கடத்திட்டு போயிட் டாங்க. ஒரு மலைப் பிரதேசத்தில் நாலஞ்சு நாட்கள் வெச்சிருந்தாங்க. அவங்க பேசின தெலுங்கு எனக்கு வெளங்கலை. நான் பேசின தமிழ் அவங்களுக்குப் புரியலை. அப்புறம் ஒரு வழியா கையில் வெச்சிருந்த பணம், போட்டு இருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்துட்டு தப்பிச்சு வந்தேன். அதுக்குப் பின்னாடிதான் முன்னைவிட வேகமா அதிக தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற் பட்டுச்சு'' என்று சொல்லும் பத்மராஜனின் ஆசை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பது.

''2003-ல எனது சாதனை லிம்கா புத்தகத்தில் இடம் பெற்று இருக்குது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறணும்கிறது என்னோட தீராத ஆசை. கூடிய விரைவில் அது நடக்கும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

இது நமக்கு 124-வது தேர்தல்!

''இதுவரைக்கும் டெபாசிட் தொகையா மட்டும் 12 லட்சம் ரூபாயை விட்டுருக்கேன். கடந்த இடைத்தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டப்ப 6 ஆயிரத்து 273 வாக்குகள் வாங்கினேன். தொகுதியில் மூன்றாவது இட மும் கிடைச்சது. இதுதான் நான் இது வரைக் கும் வாங்கின ஓட்டுகளிலேயே அதிகம். 96-ம் ஆண்டு மயிலாப்பூரில் போட்டியிட்டப்ப வெறும் எட்டு ஓட்டுகள்தான் கிடைச்சது. அதுதான் நான் குறைச்சலா வாங்கின ஓட்டு'' என்று புள்ளி விவரத்தை அள்ளித் தெளிப்பவர், அப்படியே பக்கத்து டீக்கடைக்குச் செல்கிறார்.  

இது நமக்கு 124-வது தேர்தல்!

''சார்... நான்தான் தேர்தல் மன்னன். இந்த முறை உங்க தொகுதியில போட்டிப் போட றேன். எனக்கு மறக்காம ஓட்டுப் போட்டுடுங்க''- என்று கேன்வாஸைத் தொடங் கினார்.

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு