##~##

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக இந்த முறை திருச்சியில் பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு தடை. ஆனால், சிலைக்கு அணிவிக்கப்படும் மாலைகள் தராத சிறப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகம் தந்துவிட்டது இரண்டு விருதுகளால்!

 பெரியார் பிறந்த நாளையட்டி, 'பெரி யாரும் உலகப் பகுத்தறிவாளர்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்குடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயர் ஆய்வு மையம் நடத்திய விழா பெரியாருக்குச் செலுத்தப்பட்ட மிகச் சிறப்பான அஞ்சலி.

அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக பெரியாரியல் அடிப்படையில் தொண்டாற்றி, தன் வாழ்வையே பெரியாரியத்துக்கு ஒப்ப டைத்துவிட்ட பெரியாரின் சீடரான அறிஞர் வே.ஆனைமுத்துவுக்கு, 'பெரியார் சிறப்பு விருது’ம் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

பெரியாருக்கு மரியாதை!

''எனக்குப் பல இடங்களில் கொடுத்த பரிசுகளை ஏற்க மறுத்து இருக்கிறேன். அரசாங்கம் கொடுத்த பரிசுகளைக்கூட நிராகரித்து இருக்கிறேன். சில இடங்களில் பரிசுகளைப் பெற்று, அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து இருக்கிறேன். இந்தப் பல்கலைக்கழகம் அரசு சார்ந்த அமைப்பாக இருந்தாலும், இந்த விருது அறிவு சார்ந்த அறிஞர்களால் கொடுக்கப்பட்டது என்பதால் ஏற்றுக்கொள்கிறேன். பெரியார் தொடர்பான பல நூல்களை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளேன். அதற் கான செலவுகளுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள் வேன்!'' என்றார் ஆனைமுத்து.

சாதி, சமூக, சமய, பாலின வேறு பாடு இன்றி சமூக நீதி பெற்று மக்கள் வாழ்வதற்காக 35 ஆண்டுகளாக பாடுபட்டுவரும் பெர்னாட் பாத்திமா நடேசனைச் சிறப்பிக்கும் வகையில் 'பெரியார் விருது’ அளித் தார்கள். பணி நிமித்தமாக அவர் அமெரிக்காவில் இருந்த காரணத்தால், விருதை யும்  

பெரியாருக்கு மரியாதை!

  50 ஆயிரம் பொற்கிழியையும் அவரது சார்பில் மகிமை என்பவர் பெற்றுக்கொண் டார்.  

பெரியாருக்கு மரியாதை!

''அரக்கோணம் அருகில் உள்ள பெருமூச்சி கிராமத்தில் கிராமப்புறக் கல்வி மேம்பாட்டு மையம் நடத்துகிறார். சுற்று வட்டாரத்தில் உள்ள 350 கிராமங்களைச் சேர்ந்த செங்கல் தொழிலாளர்கள், மாட்டு வண்டித் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்'' என்று  பெர்னாட் பாத்திமா நடேசனின் பணி களைப் பற்றி எடுத்துரைத்தார் மகிமை.

50 ஆண்டு காலமாக பெரியாரின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு நூல்களை எழுதிவரும் பசு.கவுதமனுக்கு, 'ஈ.வே.ராமசாமி என்கிற நான்’ என்ற நூல் தொகுதிக்காக 'பெரி யார் பரிசு’ம்  

பெரியாருக்கு மரியாதை!

  50 ஆயிரம் பொற்கிழியும்வழங்கப் பட்டன. ''பெரியாரை நிறுவன மையமாக ஆக்கி விட்டார்கள். அவரைத் தத்துவ மையம் ஆக்க  வேண்டும். இந்த உயர் ஆய்வு மையம் அந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார் ஆயிரம் கவுதமன் அர்த்தங்களோடு.

முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர். கலியமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். பரிசுகளை வழங்கிய துணைவேந்தர் மீனா, ''1999-ம் ஆண்டு முதல் பெரியார் உயர் ஆய்வு மையம் இயங்கி வருகிறது. விரைவில் பெரியார் தொடர்பான பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளைத் தொடங்க இருக்கிறோம். பெரியார் அருங்காட்சி யகம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெறு கின்றன'' என்றார் முத்தாய்ப்பாக!

- ஆர்.லோகநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு