சினிமா
Published:Updated:

உலகக் கோப்பை ஜெயிக்கப் போறோம்!

உலகக் கோப்பை ஜெயிக்கப் போறோம்!

##~##

பெரம்பலூர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி மாணவிகள் தமிழ்மணி, ஆர்த்தீஸ்வரி, கல்பனா, மைதிலி ராஜம், லலிதா, சாரதா... ஆறு பேரும் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைக்கும் சாதனைக்குச் சொந்தக்காரர்கள். பெங்களூருவில் நடை பெற்ற உள் அரங்க உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு இரண்டாவது பரிசைத் தட்டி வந்து இருக்கிறார்கள்.

 ''டெண்டுல்கர், டோனி விளையாடுற கிரிக்கெட்போலத்தான் இதுவும். ஆனா, அவங்க விளையாடுறது திறந்தவெளி அரங்கு. நாங்க ஆடுறது உள் அரங்கு.  மொத்தம் 16 ஓவர்.  ஒரு அணிக்கு எட்டுப் பேர். அவுட்டானாலும் விளையாடலாம். ஆனால், ஐந்து ரன் கழிஞ்சுடும். அவுட் ஆகிறது ஒரு விஷயம் இல்லைங்கிறதால், போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருக்காது. கடந்த 16 வருஷங்களா இன்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நடந்துட்டு இருக்கு. ஆனா, இந்த வருஷம்தான் இந்தியா இரண்டாம் இடம் அளவுக்கு முன்னேறி இருக்கு'' என்கிறார் கள் பெருமிதத்தோடு.

உலகக் கோப்பை ஜெயிக்கப் போறோம்!

''எல்லாருமே கிராமப் பின்னணியில் இருந்து வந்தவங்க. பொங்கல் விளையாட்டுப் போட்டியிலோ, திருவிழாப் போட்டியிலோ மட்டும்தான் இவங்க விளையாட்டு ஆர்வத்துக்கு மதிப்பு இருக்கும். மற்ற நேரங் கள்ல வெளியே விளையாட முடியாது. அப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவங்க, இன்னிக்கு இவ்வளவு பெரிய நிலைக்குப் போயிருக்காங்க. நிச்சயம் இது பெரிய விஷயம்'' என்கிறார் கல்லூரியின் உடற்கல்வித் துறைத் தலைவரும் கிரிக்கெட் பயிற்சியாளருமான மகா லட்சுமி.

''இந்த முறை தென் ஆப்பிரிக்கா எங்களை ஜெயிச்சு இருக்கலாம். ஆனா, அடுத்த உலகக் கோப்பை  நமக்குத்தான்!''

- மாணவிகளின் கோரஸ் குரலில் மிளிர்கின்றன நம்பிக்கையும் உறுதியும்!

- சி.ஆனந்தகுமார், படம்: எம்.ராமசாமி