Election bannerElection banner
Published:Updated:

கை கொடுக்கும் கை!

ஞா.அண்ணாமலை ராஜா

கை கொடுக்கும் கை!

என் விகடன் 21.9.11 இதழில் ’தண்ணீர் ஜே.சி.பி!’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம். கரூர் மாணவன் எஸ். அஜீத்குமார் 'தண்ணீரில் இயங் கும் மணல் அள்ளும் இயந்திர’ மாதிரியைக் கண்டுபிடித்தது தொடர்பான செய்தி அது. இந்தச் செய்தியைப் படித்த கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அஜீத்தின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு

கை கொடுக்கும் கை!

10 ஆயிரம் நிதி அளித்துள்ளார்.

''நான் 'என் விகடன்’ வாசகன். தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன். எல்லாப் பகுதியும் சூப்பரா இருக்கு. குறிப்பா மாண்புமிகு மாணவர் பகுதி. சின்ன வயசுல குடும்பக் கஷ்டத்தால வேலைக்குப் போக வேண்டிய சூழல். அதனால், 5-வது வரைதான் படிச்சேன். ராத்திரி எல்லாம் மெக்கானிக் செட்ல வேலை பார்த்தேன். இப்ப  எம்.எல்.ஏ-வாக இருக்கலாம். ஆனா, நான் திரும்ப பள்ளிக்கூடம் போய் படிக்க முடியாது. அதனாலதான், அஜீத் மாதிரியான மாணவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு'' என்கிறார் காமராஜ் எம்.எல்.ஏ.!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு