என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

கரு.முத்து

யிலாடுதுறை 'அறிவக’த்தின் உள்ளே நுழையும்போதே வணக்கம் போட்டு வரவேற்கிறான் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து இருக்கும் லோகேஷ். அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் ''வாங்க வாங்க போட்டோ எடுக்க வந்தீங்களா? என்னை எடுங்க'' என்று வரவேற்பையும் வேண்டுகோளையும் ஒருசேர வைக்கிறான் ஜெமினி. இல்லத்தின் தலைவர் ஞானசம்பந்தமும் இல்லத் தலைவி கலாவதியும் சிரித்துக் கொண்டே ''உங்களை வரவேற்ற இவர்கள் இருவருமே மனவளர்ச்சி குன்றியவர்கள் தான்'' என்று சொல்கிறார்கள். அதிர்ச்சியு டன் அவர்களைத் திரும்பவும் ஒரு முறை பார்க்கிறோம்.

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

##~##''இங்கே உள்ள 159 குழந்தைகளும் இப்படிதான். உடல் நலக் குறைபாட்டோடு மன நலக் குறைபாடும் உள்ள குழந்தைகள். இங்க அவங்க வரும்போது பிறழ்ந்த மன நிலையில்தான் வருவாங்க. ஆனா, அவங் களை இங்கே பார்த்துக்குற விதமும் கொடுக்கும் பயிற்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அவங்களை மாத்திடும். தமிழ்நாடு முழுக்க உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அனுப்பிவைக்கப்பட்ட குழந்தைகளில் குறைபாடு உள்ள குழந்தைனு தெரிஞ்சா இங்கே அனுப்பிவெச்சுடுவாங்க. அது பிறந்து இரண்டு நாள் ஆன குழந்தையாக இருந்தாலும் சரி; பத்து வயது குழந்தையாக இருந்தாலும் சரி; நாங்க ஏத்துக்குறோம்'' என்கிறார் கலாவதி.

குழந்தைகளைக் குளிப்பாட்ட, உணவூட்ட, தூங்கவைக்க என்று பராமரிக்கவும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் கொடுக்கவும் 37 'தாய்’கள் வேலை பார்க்கிறார்கள். குழந்தைகள் தெளிவாகப் பார்க்க, கை - கால்களை நகர்த்த, பேச, சாப்பிட என்று அனைத்துப் பயிற்சிகளும் அளிப்பது இவர்களே. இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாதவர்கள்!

அதிகபட்சம் 18 வயது வரைதான் இங்கு குழந்தைகளை வைத்திருக்க முடியும். அதற்கு மேல் அவர்களை மற்ற இல்லங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.இங்கு உள்ள குழந்தைகளைப் பராமரிக்க மாதம் ஒன்றுக்கு

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

750 அரசாங்கம் தருகிறது. ஆனால்,

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

1,500 வரை அவர்களுக்குச் செலவு ஆகிறது. இப்படிக் கூடுதலாகச் செலவாகும் தொகையை நன்கொடைகள் மூலம் பெறுகிறார்கள்.

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

''மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இனம் கண்டுகொண்டால் தயவுசெஞ்சு அவங்களை ஒதுக்கிடாதீங்க. உங்களால் முடியாத நிலையில, எங்ககிட்ட கொண்டுவாங்க. நாங்க அவங்களைக் கவனிச்சிக்கிறோம்!'' என்கிறார் ஞானசம்பந்தம்.

விடுதியை நிர்வகிப்பவர்களுக்கு ஏன் காப்பாளர் என்ற பெயர் வந்தது என்பது இப்போது புரிகிறது! 

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!
அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

படங்கள்: கே.குணசீலன்