Published:Updated:

ஆம்பலாம்பட்டில் அறிக்கி ஸ்டோர்ஸ் !

க.ராஜீவ்காந்திபடங்கள்: ந.வசந்தகுமார்

ஆம்பலாம்பட்டில் அறிக்கி ஸ்டோர்ஸ் !

க.ராஜீவ்காந்திபடங்கள்: ந.வசந்தகுமார்

Published:Updated:
##~##

'களவாணி’   படத்தில் பார்வையிலேயே வில்லத்தனம் காட்டி மிரட்டிய திருமுருகனைச் சொந்த ஊரான ஆம்பலாப்பட்டில் தேடினால், மனிதர் ஒரு பெட்டிக் கடையில் அமர்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்!

'என்ன சார் 'அரவான்’ படத்துல நடிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம். ஆனா, பெட்டிக் கடையில வியாபாரம் பார்த்துட்டு இருக்கீங்க?'' என்று கேட்டதும் சுற்றிலும் இருந்த சில ஒயிட் அண்ட் ஒயிட்  'அறிக்கி’கள் முறைத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம்பலாம்பட்டில் அறிக்கி ஸ்டோர்ஸ் !

'அரவான் முடிஞ்சு ரிலீஸுக்கு வெயிட்டிங். அடுத்தது கோபிசந்த்கூட ஒரு தெலுங்குப் படம். கிடைச்ச கேப்புல இங்கே வந்தாச்சு. இது நம்ம மாமா கடைதான்'' என்று சிரித்தார் திருமுருகன்.

''இது என்ன உங்க யூனிஃபார்மா? ஆளாளுக்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைனு ஒரே களவாணிகளா இருக்கீங்களே?'

''அந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷனே  இவங்கதான். அத்தான், மாப்ள, மச்சான்னு  ஊர் முழுக்க சொந்தக்காரங்கதான்'' என்றவர் எதிரில் இருந்த ஆரம்பப் பள்ளியைக் காட்டி ''இதோ இந்த ஸ்கூல்தான் நான் படிச்சது. ஸ்கூலுக்கு முன்னாடி திரை கட்டி சினிமா போடுவாங்க. அங்கதான் மனசைத் தொலைச்சது. இதோ இந்த மாமாதான் அப்ப ஆபரேட்டர். அதனால, சின்ன வயசுல எங்க ஹீரோ இவர்தான். ஏன்னா, எங்க அப்பா சதாசிவம் ஆசிரியரா இருந்தாரு. நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்வாரே தவிர சினிமாவுக்கு எல்லாம் அழைச்சிட்டுப் போக மாட்டார். தீபாவளி, பொங்கல், பிறந்தநாள்னு வருஷத்துக்கு அஞ்சாறு படம்தான் பார்க்க முடியும். அப்பல்லாம் பாப்பாநாடு சாமி தியேட்டர்தான் எங்கக் கனவு மாளிகை.

சின்ன வயசுல இருந்தே கதை, கவிதைனு ஏதாவது எழுதிக்கிட்டு இருப்பேன். அப்பா நான் எழுதுற கதை, கவிதைலாம் வாசிச்சுட்டு நான் பெரிய எழுத்தாளன் ஆவேன்னு கனவு கண்டாரு. ஆனா, படிப்பு முடிஞ்சதும், நான் சினிமா இயக்குநராகப் போறேன்னு சொன்னதும் அவருக்கு அதிர்ச்சி. ஏன்னா, அதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க ஊர்ல இருந்து சினிமாவுக்குப் போனவங்க யாரும் ஜொலிக்கல. அதனால  நான் நூத்துக்கும் மேல விளம்பரப் படங்கள் இயக்குனப்பகூட ஊருக்குள்ள சொல்லிக்கலை. ஜெயிச்சுட்டு தான் சொல்லணும்னு வைராக்கியத்தோட இருந்தேன். 'கிரீடம்’ படத்துல அசோஸியேட் டைரக்டர் சான்ஸ் கிடைச்சது. அப்பலாம் நான் நடிப்பேன்னு எதிர்பார்க்கலை.

ஆம்பலாம்பட்டில் அறிக்கி ஸ்டோர்ஸ் !

ஒரே ஊர்ங்கிறதால நானும் பங்காளியும் (இயக்குநர் சற்குணம்) சான்ஸ் தேடும்போதே ஒரு விஷயம் சொல்லி வெச்சிகிட்டோம். நான் 'கிரீடம்’ பண்ணும்போதே பங்காளி 'களவாணி’ கதையைச் சொல்லி, இதுல நீயும் கோ டைரக்டர்னுட்டாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க... அந்த வில்லன் கேரக்டர்ல நடிக்க இருந்தது விமல் சார்தான்!

ஷூட்டிங் ஆரம்பிக்க போறப்ப விமல் ஹீரோவா 'பசங்க’ படத்துல நடிச்சு பேர் வாங்கிட்டாரு. அதனால, அவர்கிட்ட ஹீரோ கேரக்டரைக் கொடுத்துட்டு வில்லனுக்கு ஆள் தேடுனோம். அப்பதான் பங்காளி என்னைப் பார்த்து 'நீங்களே பண்ணுங்க’னாங்க. அப்புறம்தான் அந்த கேரக்டருக்காக ஹேர் ஸ்டைல் மாத்தி அதே மேனரிசத்தோட சுத்துனேன். 'களவாணி’க்காக வெச்ச இந்த முடியை எடுக்கலாம்னா வசந்தபாலன் சார் 'அரவான்’ படத்துக்கு இந்த ஹேர் ஸ்டைல் முக்கியம்னுட்டாரு. அப்படியே அலைஞ்சுட்டு இருக்கேன்!' வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் மிரட்டல் வில்லன் ! 

ஆம்பலாம்பட்டில் அறிக்கி ஸ்டோர்ஸ் !