Published:Updated:

எம்.ஜி.ஆர் ரகசியம்!

எம்.ஜி.ஆர் ரகசியம்!

எம்.ஜி.ஆர் ரகசியம்!

எம்.ஜி.ஆர் ரகசியம்!

Published:Updated:

'மலைக்கள்ளன்’ ஞாபகம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர்., பானுமதி ஓடி, ஆடி, பாடி நடித்த வெள்ளி விழா படம். அந்தப் படத்தின் கலை இயக்குநர் தேவசகாயத்தை அந்த நாட்களில் கொண்டாடாத பிரபலங்களே கிடையாது. கரூர்க் காரரான தேவசகாயம், இப்போது தன் சொந்த ஊரில்தான் இருக்கிறார்.

''சின்ன வயசுல இருந்தே எதாவது வரைஞ்சுகிட்டே இருப்பேன். என் நண்பன் ஒருத்தன், 'உனக்கு சினிமாவுல வாய்ப்பு கிடைக்கும். முயற்சி பண்ணு’ன்னான். நானும் என் ஓவியங்களை எல்லாம் எடுத்துக்கிட்டு, கோவை பட்சிராஜா ஸ்டுடியோவுக்குப் போய் வாய்ப்புக் கேட்டேன். உடனே கிடைச்சது. 1,000 படங்களுக்கு மேல வேலை பார்த்து இருக் கேன்.

எம்.ஜி.ஆர் ரகசியம்!

'மலைக்கள்ளன்’  படப்பிடிப்பு நடந்துட்டு இருந்த சமயம், எம்.ஜி.ஆர். அடிக்கடி நாங்க வரையறதைப் பார்க்க வந்துடுவாரு. யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் சொல்லவா? எம்.ஜி.ஆர். ஒரு நல்ல ஓவியர். பிரஷ்ஷை எடுத்தா அவ்வளவு அருமையா படம் போடுவார். ஆனா, 'இது ரொம்ப நுணுக்கமான வேலை; நமக்குச் சரிப் பட்டு வராது’னு சிரிப்பார்.

எவ்வளவோ ஓவியங்கள் வரைஞ்சு இருந் தாலும், எனக்குப் பேர் வாங்கிக்கொடுத்த ஓவியங்கள் மாட்டு வண்டி ஓவியங்களும் கோயில்களும்தான். குறிப்பா, வெளிநாட்டு  ஓவிய ரசிகர்கள்கிட்ட அந்த ஓவியங்களுக்குத் தனி மவுசு உண்டு.

மத்த படைப்பாளிகள் மாதிரி ஓவியர்கள் தங்களோட படைப்புகளை அவங்க கையிலயே வெச்சுக்குற வாய்ப்பு இல்லாதவங்க. ஆயிரக்கணக்கான படம் வரைஞ்ச நானும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. இப்ப என்கிட்ட நான் வரைஞ்ச ஓவியங்கள்ல ரெண்டுதான் இருக்கு. அதைப் பார்த்துக்கிட்டே கழியுது காலம்!'' என்று நெகிழ்கிறார் தேவசகாயம்.

நா.சிபிசக்கரவர்த்தி

இது நூலகம் இல்லை.... வீடு!

எம்.ஜி.ஆர் ரகசியம்!

நூலகங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கலாம். ஆனால், கரூர் மாவட்ட நூலகம் தனித்துவம் வாய்ந்தது. 1955-ல் இருந்து செயல்படும் இந்த நூலகத்தின் சிறப்புக்கு முக்கியக் காரணம், இங்கு தொடங்கப்பட்டு இருக்கும் 'வாசகர் முற்றம்’ அமைப்பு. மாதத்துக்கு இரண்டு பள்ளிகளின் மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துவந்து, அவர்களுக்கு நூலகப் பதிவேட்டில் கையெழுத்து இடுவது முதல் நூல்களில் குறிப்பெடுப்பது வரை சொல்லித் தருவது, மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் நூலகத்துக்கு ஒவ்வொரு துறை அறிஞர்களையும் அழைத்து சொற்பொழிவாற்றச் செய்வது, மாதம் இருமுறை சிறைக் கைதிகளின் மறுமலர்ச்சிக் காக ஓவிய, கவிதைப் போட்டிகள் நடத்து வது, கிராமங்கள்தோறும் நூலகப் பிரசாரப் பயணம் மேற்கொண்டு, புத்தக வாசிப்பின் முக்கியத் துவத்தை விளக்கி விழிப்பு உணர்வை உருவாக்குவது என்று இந்த 'வாசகர் முற்றம்’ மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஆக்க பூர்வமானவை.

எம்.ஜி.ஆர் ரகசியம்!

மூன்று லட்சத்தில் இருக்கைகள்,

எம்.ஜி.ஆர் ரகசியம்!

75 ஆயிரத்தில் எல்.சி.டி. புரொஜெக்டர் எனத் தங்கள் நன்கொடைகளால் நூலகக் கட்டமைப்பை அற்புதமாக மாற்றி இருக் கிறார்கள் இங்குள்ள வாசகர்கள்.

''முதலில் நூலகத்துக்கு வரும் வாசகர் களின் எண்ணிக்கை வெறும் இரண்டு இலக்கத்தில் மட்டுமே இருந்தது. அது மிகுந்த வேதனையைத் தந்ததால் கரூர் 'தீபம்’ சங்கர் போன்ற எங்கள் நூலகத்தின் நீண்ட நாள் வாசகர்களின் துணையோடு இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

இப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. தவிர, நூலகத்தைத் தங்கள் வீடுபோல நினைத்துப் போற்றுகிறார்கள் எங்கள் வாசகர்கள்'' என்கிறார் இந்த அழகிய மாற்றங்களுக்கு அடித்தளம் இட்டவரான நூலகர் சிவக்குமார்!

-ஞா.அண்ணாமலை ராஜா

கரூர் சர்வர் சுந்தரம்!

எம்.ஜி.ஆர் ரகசியம்!

ரூர் உதயம் ஹோட்டல் சர்வர் எல்.சாமி நாதன் ஒரு நடமாடும் சினிமா என்சைக்ளோ பீடியா. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை சகலமும் சாருக்கு அத்துபடி.

''சினிமா நம்ம ரத்தத்துல ஊறினதுங்க.பொதுவா, சினிமாவுக்குப் போனாதான் பலர் வீட்டுல திட்டுவாங்க. ஆனா, எங்க அப்பா சினிமாவுக்குப் போகலைனா திட்டுவார்.  அப்பாவே அப்படின்னா, நான்? 1980-ல் தொடங்கி 1986 வரை மட்டுமே தொடர்ந்து தினம் ஒரு படம்னு ரெண்டாயிரம் படங்கள் வரை பார்த்தேன். அப்புறம் சினிமா செய்திகள் எல்லாம் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சதும் பல தகவல்களும் மனசுல பதிஞ்சுபோச்சு.

'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு முதலில் வைத்த பெயர் 'உலகம் சுற்றும் தமிழன்’. இந்தப் படத்துக்குதான் டிக்கெட் புக்கிங் அறிவித்த  ஒரே நாளில் 32 நாளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வேறு எந்த மொழியிலும் நடிக்காமல், தமிழில் மட்டும் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த். 700-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் பிரேம் நசீர்.

இப்படிப் பல நூறு தகவல்கள் நமக்கு அத்துப் படி. இதை எல்லாம் பயன்படுத்திக்க வேணாமா? 'தெரிந்த சினிமா... தெரியாத தகவல்கள்’னு  உள்ளூர் தொலைக்காட்சிகள்ல நிகழ்ச்சி தொகுக்க ஆரம்பிச்சேன். ஹிட்டோ ஹிட். நமக்கும் சினிமா கனவு உண்டு. சீக்கிரமே ஒரு நல்ல கதையுடன் பெரிய ஸ்டாரோட படத்தை இயக்குவேன். படம் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க சார்!''

- சாமிநாதன் கண்களில் கனவுப் பட்டறை வெளிச்சம்!

-ஞா.அண்ணாமலை ராஜா