Published:Updated:

அமெரிக்கா டு தேனூர்

வழிகாட்டுகிறார் திண்ணனூர் சிவாஜி

அமெரிக்கா டு தேனூர்

வழிகாட்டுகிறார் திண்ணனூர் சிவாஜி

Published:Updated:
##~##

மாதம் நான்கு லட்ச ரூபாய் சம்பளத்தில் அமெரிக்காவில் பார்த்துவந்த சாஃப்ட்வேர் பணியை உதறிவிட்டு, கிராமத்தை நோக்கி வந்திருக்கிறார் செந்தில்குமார். சாலை மற்றும் கல்வி, சுகாதார வசதிகளில் பின்தங்கி இருக்கும் பெரம் பலூர் மாவட்ட எல்லையோரக் கிராமமான தேனூரில் அமைந்திருக்கிறது இவருடைய 'பயிர் அறக்கட்டளை’!

 அறக்கட்டளைக்கு நான் சென்றிருந்த சமயம்... பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கொண்டு இருந்த ஒரு பெண், ''சார் வெளியே போயிருக்கார். கொஞ்ச நேரம் காத்திருங்க'' என்று சொல்லிவிட்டு பாடத்தைத் தொடர்ந்தார். இன்னொருபுறம்... ஆன்-லைன் மூலம் ஒருவர் பாடங்களை நடத்திக்கொண்டு இருப்பது கம்ப்யூட்டர் திரையில் விரிய... மாணவர்கள் அவரிடம் தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து, தெளிந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்கா டு தேனூர்

''ம்மா... குழந்தைக்கு ரெண்டு நாளா இருமல். சளியும் இருக்குது''- பெண்மணி ஒருவர் குழந் தையுடன் அங்கு இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தைத் தேடி வர... பெண் மருத்துவர் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்று பரிசோ தித்து மருந்து கொடுத்து அனுப்பினார்.    

ஆச்சர்யத்துடன் கவனித்துக்கொண்டு இருக்கும்போதே... அங்கு வந்து சேர்ந்த  செந்தில் குமார், மையத்தின் கதை சொல்லத் தொடங்கினார்.

''எனக்குச் சொந்த ஊர்திண்ண னூர். ஆனா, சின்ன வயசுலேயே திருச்சியில செட்டில் ஆகிட்டோம். காந்தி, விவேகானந்தர் சிந்தனைகள்ல ரொம்ப ஈடுபாடுகொண்ட நான், இந்த மக்க ளுக்காக எதாவது செய்யணும்னு முடிவு எடுத்தேன். அதுக்காக குடும்பத்தை அப்படியே விட்டுட முடியாதே? குறைஞ்சது 10 வருஷமா வது வேலை செஞ்சு, குடும்பத்துக்கு கொடுத் துட்டு, அதுக்குப் பிறகு சேவையில இறங்கணும்னு திட்டம் வகுத்திருந்தேன். 1995-ல் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு, ஐ.பி.எம்-ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் 99-ம் ஆண்டு யு.எஸ்-ல வேலை கிடைச்சு போனேன். 2007 வரைக்கும் அங்கே வேலை பார்த்தேன்.  யு.எஸ்-ல இருக்கும்போதே... கிராமத்துக்கு சேவை செய்யுற என்னோட திட்டத்தை, கூட வேலை பார்க்குற நண்பர்கள்கிட்ட சொன்னேன். ரொம்பவே உற்சாகப்படுத்தி னவங்க, நாங் களும் பொருளா தாரரீதியா உதவி பண்றோம்னு சொன் னாங்க. அதன்படி 2007-ல் வேலையை விட்டேன்.

அமெரிக்கா டு தேனூர்

எந்த ஊர்ல திட்டத்தை ஆரம்பிக்குறதுன்னு யோசிச்சப்ப, என்னோட பெரியப்பா தன்னோட ஊரான தேனூர்ல ஆரம்பிக்கச் சொன்னாரு. அதுக்காக தன்னோட ஆறரை ஏக்கர் நிலத் தையும் எழுதிவெச்சாரு. சுகாதாரம் மற்றும் கல்வி விஷயங்களைக் கையில எடுத்துகிட்டு செயல்பட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல இருந்து இப்பவரைக்கும் கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க.

தேனூர், தொட்டியம்பட்டி பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கோம். தினமும் காலையில் இட்லி, கேழ் வரகு கூழ், உப்புமா இப்படி எதாவது கொடுப் போம். கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருக்குறதைத் தெரிஞ்சுகிட்டு, எங்க அமைப்பு சார்பில் 11 ஆசிரியர்களை நியமிச்சு இருக்கோம். கிராமத்துக் குழந்தைகள் ஆங்கிலம் கத்துக்குறதுல ரொம்பவே

அமெரிக்கா டு தேனூர்

பின்தங்கி இருக்காங்க. அதனால, அந்தப் பள்ளிக் குழந்தைகளை எங்க மையத்துக்கு அழைச்சுகிட்டு வந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகள்ல இருக்குற என் நண்பர்கள் மூலமா ஆன்-லைன் மூலமா பாடங்கள் நடத்துறோம். அது தவிர சின்ன அளவில் மையத்திலேயே பள்ளிக்கூடம் நடத்துறோம்.

சத்துமாவு தயாரிக்குறது, டெய்லரிங், மண் புழு உரம், கால்நடைப் பண்ணைனு பல்வேறு பணிகளையும் செய்யறோம்'' என்று திட்டங்களை விவரித்துக்கொண்டே செல்கிறார் செந்தில் குமார்.

கனவுகள் மெய்ப்படட்டும்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism