Published:Updated:

துறையூரில் அன்னைக்கு ஓர் ஆலயம்!

துறையூரில் அன்னைக்கு ஓர் ஆலயம்!

##~##

'அன்னை ஓர் ஆலயம்’ என்பதுவெறுமனே வார்த்தை அல்ல; வாழ்க்கை என்பதை நிரூபித்து இருக்கிறார் சுரேஷ்குமார். திருச்சி மாவட்டம், துறையூரில் வசிக்கும் இவர், 'தனபாக்கியம் அம்மாள் நினைவு துறையூர் நந்தவனம்’ என்ற பெயரில் தனது அன்னைக்கு ஆலயமே எழுப்பியிருக்கிறார். 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்பரந்து விரிந்திருக்கிறது இந்தக் கோயில்!

 கல் வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபத்தில் வெண்கலத்தால் ஆன ஆளுயரச் சிலையாகப் புன்னகையுடன் காட்சி தருகிறார் தனபாக்கியம் அம்மாள். சிலைக்கு முன் 64 அடி உயரத்தில் தாய்மையைப் போற்றும் நினைவுத் தூண். அதன் உச்சியில் ஒரு தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதுபோன்ற சிலை. சுரேஷின் தாயார் தனபாக்கியம் அம்மாள் இறந்தபோது, அவருக்கு வயது 64. அதனை நினைவூட்டுவதுபோல், 64 அடி உயரத்தில் தூண் நிறுவப்பட்டுள்ளது. '''பாட்ஷா’ திரைப்படத்தில், 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ’னு ஒரு பாட்டில் வரும். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை? அதனால், எட்டு அடிகொண்ட எட்டு கற்கள் மூலம் அந்தத் தூண் அமைக்கப்பட்டுள்ளது'' என்று சொல்லும் சுரேஷ்குமார், அவரது தாயாரின் அஸ்தியையும் சிலைக்கு முன் 64 அடி ஆழத்தில் துளையிட்டு கரைத்து இருக்கிறார்.

துறையூரில் அன்னைக்கு ஓர் ஆலயம்!

இடது பக்கத்தில் தியான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சுவற்றில் மாட்டுவதற்காக தனபாக்கியம் அம்மாளின் உருவம் 64 விதங்களில் வரையப்பட்டு உள்ளது. நவதானியத்தில், கூழாங்கற்களில், கன்னியாகுமரியில் வாங்கப்பட்ட முக்கடல் மண்ணில், நியூஸ் பேப்பர் கட்டிங்கில், ரப்பர் ஸ்டாம்பு அச்சில் என விதவிதமாக வரையப் பட்டு இருக்கிறது.  

வலதுபுறம் ஒரு மேடையும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு ஏதுவாக இடமும் இருக்கிறது. இங்கு அறு பதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இடத்தை இலவசமாகக் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம் சுரேஷ்குமார். அருகிலேயே சுடுகாடு இருப்பதால், முன்பகுதி அங்கு வருபவர்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு குளிப்பதற்காக குளியல் அறைகள், ஈமக்காரியங்களைச் செய்வதற்கான இடம்  ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

''இந்த மண்டபத்தை எந்தக் காலத்திலும், வணிக நோக்கமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனது காலத்துக்குப் பிறகும் இதைத் தொடர வேண்டும் என்பதைச் சாசனமாக எழுதிவைக்க இருக்கி றேன். பக்கத்தில் இருக்கும் எனது இடத்தை ஏதேனும் செல்போன் நிறுவனத்துக்கு டவர் அமைக்க வாடகைக்குவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பராமரிப்புக்குச் செலவிட திட்டமிட்டு இருக்கிறேன்'' என்று சொல்லும் சுரேஷ்குமார் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

துறையூரில் அன்னைக்கு ஓர் ஆலயம்!

''கோயில் கட்டும் அளவுக்கு உங்க அம்மா அப்படி என்ன ஸ்பெஷல்?'' என்று கேள்வி எழுப்பினால், ''ஒவ்வொருத்தனுக்கும் அவனோட அம்மா ரொம்பவே ஸ்பெஷல்தான். உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு தாயும் போற்றப்பட வேண்டியவள். பத்து மாதம் கருவைச் சுமந்து பெற்றெடுப்பது என்பது

துறையூரில் அன்னைக்கு ஓர் ஆலயம்!

சாதா ரண காரியமா? அந்தத் தாய்க்காக என்னால் ஆன ஒரு சிறிய நன்றிக் கடன்!'' என்று நெகிழும் சுரேஷ்குமார், ''இந்தக் கோயிலைப் பார்க்கும் பலரும் எத்தனை லட்சம் செலவாச்சு என்று பணம் பற்றியே பேசுகின்றனர். இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. மனம் சம்பந்தப்பட்ட விஷயம்'' என்கிறார்.

நூற்றில் ஒரு வார்த்தை!

-ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்  

அடுத்த கட்டுரைக்கு