Election bannerElection banner
Published:Updated:

கீற்று கிராமம் !

கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

##~##

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் இருக்கிறது மூங்கில் தோட்டம். கீற்றுக்குப் பெயர் போன ஊர்!

சாலை முழுவதும் மட்டைகளும் கீற்றுகளுமாக  ஆக்ரமித்து இருக்கின்றன. நீரில் ஊறிய தென்னை மட்டைகளின் மணம் நாசியைத் துளைக்கிறது. சின்ன லாரிகளில் கீற்றுக்கள் ஏற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதைக் கடந்து உள்ளே வடக்குத் தெருவுக்குள் சென்றால், அந்தச் சிறிய தெரு முழுக்கப் பெண்களும் ஆண்களும் வரிசைகட்டி குத்தவைத்து அமர்ந்து பரபரவெனக் கீற்று முடைந்துகொண்டு இருக்கிறார்கள்.

''சீக்கிரம் பின்னுடி, சாயங்காலம் சினிமாவுக்குப் போகலாம்னு சொல்லிட்டு, கொட்டா கட்டப் போயிருக்கு எங்க வூட்டு ஆம்பளை.  100 கீத்து முடைஞ்சிட்டா போதும். இன்னிக்கு சந்தோஷமா வீட்டுக்குப் போய் சமைச்சு வெச்சுட்டு ஜாலியா சினிமாவுக்குப் போயிட்டு வந்துடுவேன்'' என்கிறார் சாந்தி.

கீற்று கிராமம் !

காலால் மட்டையை அழுத்திக்கொண்டு இரு கைகளாலும் பரபரவென முடைந்துகொண்டு இருக்கிறார் பானு. மட்டையைக் குளத்தில் கொண்டுபோய் ஊறவைப்பது, மறுநாள் காலை அதைக் குளத்தில் இருந்து கரையேற்றி இரண்டாகக் கிழித்துப்போடுவது, பிறகு முடைவது என்று கீற்று முடைதலின் எல்லா வேலைகளையும் ஆண்களைப் போலவே அநாயசமாகச் செய்கிறார் பானு.

பொதுவாக, பெண்கள் கீற்று முடைதலையும் ஆண்கள் மற்ற வேலைகளையும் பார்க்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் பாடுபட்டால் குறைந்தபட்சம்

கீற்று கிராமம் !

200  கிடைக்குமாம். சில வீடுகளில் மனைவி மட்டும் இதைச் செய்ய ஆண்கள் பந்தல் போடும் வேலைக்கோ, வீட்டுக்கூரை வேயவோ வெளியில் செல்கிறார்கள். அதில்

கீற்று கிராமம் !

350 கூலி கிடைக்குமாம். கீற்று முடைவதற்கு ஒரு கீற்றுக்கு

கீற்று கிராமம் !

2 கூலி கிடைக்கும் என்கிறார்கள்.

கீற்று கிராமம் !

கையில் காசு இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்கள் மட்டும் கீற்று முடைந்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கீற்று கிராமம் !

20,000 இருந்தால் அவர்கள் நேராக பொள்ளாச்சி சென்று அங்கு தென்னை மட்டைகளை மொத்தமாக வாங்கிவந்து, அதை ஆள்வைத்து முடைந்து சற்று அதிக லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் ஆகிவிட முடியும்!

''அங்க ஒரு மட்டை ஐம்பது காசுதான். அதில் கொறஞ்சது ரெண்டு கீத்து முதல் அதிகபட்சம் நாலு கீத்து வரைக்கும் எடுத்துட முடியும். அதேபோல, கீத்தை லாரியில அள்ளிப்போடும்போது முக்கா மட்டை, அரை மட்டைகளைக் கணக்கில் சேக்காம போட்டுக்குவோம். அங்கு உள்ள மொதலாளிங்க அதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதனால அதுலதான் கொஞ்சம் லாபம் நிக்கும். லாரி வாடகைதான் இப்ப கன்னாபின்னானு போயிடுச்சு. முன்னெல்லாம் மட்டையைச் சும்மாதான் அள்ளிக்கிட்டுப் போகச் சொன்னாங்க. இப்பதான் 50 காசுன்னு விலை வெச்சுக் கொடுக்குறாங்க'' என்கிறார் கீற்று உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர்.

நாலைந்து பேராகக் கூட்டுசேர்ந்து பொள்ளாச்சியில் லாரி பிடித்து மட்டைகள் வாங்கி ஏற்றிவருகிறார்கள். அது முடியாதவர்கள் இங்கு உள்ள தோப்புகளுக்குப் போய் தேங்காய் பறித்துகொடுத்துவிட்டு, அதற்கு கூலியாக மட்டைகளை வாங்கிவருகிறார்கள். இப்படி 80 குடும்பங்கள் கீற்று முடைதலையே முழு நேரத் தொழிலாகக்கொண்டு இருப்பதால், இங்கு எப்போதும் கீற்று கிடைக்கிறது.

கீற்று கிராமம் !

ஒரே நீள அகலம் உள்ளதாக இருக்கும் இந்தக் கீற்றைவைத்து கூரை வேயும்போது அது வேலையை எளிதாக்கும். கீற்றும் அதிகமாக வீணாகாது என்பது இங்கு கீற்று வாங்குகிறவர்களின் பாராட்டு. 100 கீற்று

கீற்று கிராமம் !

400  முதல்

கீற்று கிராமம் !

450 வரை விலை. தயாரான உடனேயே அதே இடத்தில் விற்றுவிடுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

இப்படி கீற்று முடையும் அத்தனை பேரும் கீற்றுக் கூரை வீட்டில்தான் இருக்கிறார்கள். பொழுது விடிந்ததில் இருந்து மாலை வரை இருபதுக்கும் மேற்பட்ட கந்துவட்டிக்காரர்கள் தெருவுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

''எல்லார் வீட்டுக் கூரையையும் நம்ம கீத்து அடைக்குது. ஆனா, இந்தச் சின்ன வயித்தை அடைக்க முடியலையே?'' என்கிறார்கள் வேதனை கலந்த சிரிப்புடன். நமக்குத்தான் சிரிக்க முடியவில்லை!    

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு