Election bannerElection banner
Published:Updated:

தைலராஜா. எம்.பி.பி.எஸ்

தைலராஜா. எம்.பி.பி.எஸ்

##~##

சீர்காழி அருகில் உள்ள புத்தூர் கிராமம். மரப் பட்டைகளும் வேர்களும் காய்களும் இலைகளும் தொங்கும் நாட்டு மருந்துக் கொட்டகை. வாசலில் கைக்குழந்தையுடன் பாசிமணி கோத்துக்கொண்டு இருக்கிறார்கள் இரண்டு பெண்கள். நான்கைந்து ஆண்கள் உள் அறையில் டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். மின்விசிறி சுழன்றுகொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் அது தற்காலிகக் கொட்டகைதான். நம் மைப் பார்த்ததும் வெளியே வருகிறார்  வைத்தியர் வெங்கடேசன்!

 ''என்ன பிரச்னை உடம்புக்கு? நாடி பார்த்துடலாமா? சாப்பிட்டு வந்தீங்களா? சாப்பிடாம வந்தீங்களா?'' என்றவரிடம்  நாம் வந்த விவரம் சொன்னோம். உடனே தன்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

''நாங்க திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அருமூர்த்தி கிராமத் தைச் சேர்ந்தவங்க. எங்க ஊர்ல உள்ள 60 குடும்பங்கள் இந்த நாட்டு வைத்தியத்தில் ஈடுபட்டு இருக்கோம். தாத்தா, மகன், பேரன்னு  வழிவழியாக வைத்தியம்தான் தொழில். ஆம்பளைங்க வைத்தியம் பார்ப்போம். பொம்பளைங்க மணி கோப்பாங்க.

தைலராஜா. எம்.பி.பி.எஸ்

ஒரு ஊருக்குப் போனதும் நோட்டீஸ் அடிச்சு ஊருக்கே கொடுப்போம். ஒரு ஆம்பளை எப்போதும் குடிசையில் இருப்பார். மத்தவங்க வண்டியில் போய் அக்கம் பக்கம் இருக்கிற கிராமங்கள்ல நோட்டீஸ் கொடுத்துட்டு, வைத்தியமும் பார்த்துட்டு வருவாங்க. எங்ககிட்ட ஒரு தைலம் இருக்கு. நாள்பட்ட எந்த வலியையும் அது போக்கிடும். கிராமங்கள்ல நாள்பட்ட வலியோட அவஸ்தைப்படுறவங்களுக்கு அந்தத் தைலத்தைத் தருவோம். அது கொடுக்கிற நம்பிக்கையிலதான் மக்கள் எங்ககிட்ட வருவாங்க.

வர்றவங்களுக்கு மொதல்ல நாடி பிடிச்சுப் பார்ப்போம். நாடி பார்க்க 10 ரூபா. உடம்பில் என்ன பிரச்னையோ அதை நாடி சொல்லிடும். வாதம், பித்தம், கபம், சூட்சுமம்... இதில் எது உடம்பில் கூடுதலாவோ, குறைச்சலாவோ இருக்கோ அதைவெச்சுதான் வியாதியை முடிவுசெய்வோம். வியாதிக்கு ஏத்த மாதிரி மருந்தை பஸ்பமாவோ, லேகியமாவோ, மாத்திரையாவோ, தைலமாவோ கொடுப்போம். 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபா வரைக்கும் மருந்து உண்டு.

தைலராஜா. எம்.பி.பி.எஸ்

சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான், சிறியா நங்கை, நந்தியாவட்டை, ஆவாரம்பூனு 250 வகையான மூலிகைங்க, 30 வகை வேருங்க, 10 வகை மரப்பட்டைங்க எங்ககிட்ட இருக்கு. முன்னாடி எல்லாம் காட்டுக்குப் போய்ட்டு வருவோம். இப்போ காட்டு இலாகா ஆபீஸருங்க தொந்தரவால் நாட்டு மருந்துக் கடைகளில்தான் மூலிகை வாங்குறோம்.

இப்போ புதுசு புதுசா வியாதிங்க வருது. காரணம், மனுஷன் சாப்பிடுற சாப்பாடுஅப்படி. தொந்தி பெருக்குது, மயிரு கொட்டுது, கை கால் சூம்புது... பாதி ஆளுங்க ஆரோக்கியம் இல்லா மத்தான் அலையுறாங்க. இதுக்கெல்லாம் தீர்வு பழையபடி ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை  போட்டு, இலைதழைகளைப் போட்டு உழவு செஞ்ச பழைய முறைக்கு நாம திரும்பறதுதான். ஆனா, நாங்க சொல்லியா மக்கள் கேட்கப் போறாங்க? ஏழை சொல் அம்பலம் ஏறுமா?''

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு