##~##

ரியலூர் - செந்துறை சாலையில் உள்ள சேதிகை அச்சகம் வண்ணங்களாலும் ஓவியங்களாலும் நிறைந்து வழிகிறது. ''நமக்கு அச்சகமும் இதுதான்; ஓவியக் கூடமும் இதுதான்!'' புன்னகையுடன் வரவேற்கிறார் பச்சைமுத்து.

 ''செந்துறைக்குப் பக்கத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சிதான் எங்க ஊர். அப்பா தில்லைக்கண்ணு சின்னச் சின்ன சந்தோஷங்களில் வாழ்க்கையைக் கடந்த ஒரு சாதாரண மனுஷன். வாய்ப்பு கிடைக்கும் போது தெருக்கூத்தில் வேஷம் கட்டுவார். அப்பா போடுற ராஜா வேஷம் முதல் கட்டியக்காரன்வேஷம் வரையில் ஆன எல்லா வேஷங்களுக்கும் முதல்ரசிகன் நான். அப்பா போட்ட வேஷங்களைப் பார்த்துதான் எனக்குள் கலை ஆர்வம் முளை விட்டிருக்கணும்!

ஓவியக் காதலன்!

நான் முதல்முதல்ல  வரைஞ்சது பெரியார் ஓவியம். அதைப் பார்த்த எங்க ஊர் தி.க. தோழர்  சிற்பி சர்வாதிகாரி, அன்று முதல் பெரியார் சம்பந்தமான எந்த விஷயமா இருந்தாலும் படம் வரைய என்னைத்தான் கூப்பிடுவார். ஏழாவது படிக்கும்போது ஒரு ஓவியப் போட்டியில் அம்பேத்கரை வரைஞ்சேன். என் ஆசிரியர் பூப்புடையான்பட்டி மாணிக்கம் சார் கொடுத்த குட்டி திருக்குறள் புத்தகம்தான் ஓவியத்துக்காக எனக்குக் கிடைச்ச முதல் பரிசு!

கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது குடும்பத்தில் ரொம்பக் கஷ்டம். அப்போ எல்லாம் அப்பாவுக்கு மாசம் 60 ரூபாய் கிடைச்சாலே பெரிய விஷயம். படிப்புச் செலவுக்குப் பணம்  பத்தா ததால, கும்பகோணம் விஜயலட்சுமி அச்சகத்தில் பகுதிநேர வேலைசெஞ் சேன். ஒருவழியா படிப்பு முடியும் போது கோட்டோவியம்தான் எனக் கான அடையாளமா உருவாகி இருந்தது!

ஓவியக் காதலன்!

சமூக அவலங்களைப் பேசுவதால் தான் என் ஓவியங்கள் பலரால் நேசிக்கப்படுவதாக நினைக்கிறேன். தேசியக் கண்காட்சியில் பங்கேற்ற போது பல்லி சகுனம்பற்றி ஒரு ஓவியம் வரைஞ்சிருந்தேன். கூட்ட மாக வாழும் எந்த இனமும் அதற் குத் தெரிஞ்ச மொழியில் பேசிக் கொள்வது வழக்கம். பல்லிகளும் அப்படித்தானே பேசுதுங்க? அவை எழுப்பும் ஒலியை எப்படி சகுனமாக நாம் சொல்லலாம்னு கேள்வி எழுப்பி, நிறைய பாராட்டுக்களைக் குவிச்ச ஓவியம் அது!  

ஓவியக் காதலன்!

குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந் தைக்குப் பால் கொடுத்துக்கொண்டு இருக்கும் தாயையும் பால் குடிக்கும் குழந்தையையும் ஸ்ட் ரெக்சரில் தூக்கிச் செல்வதுபோல ஒரு ஓவியம் வரைஞ்சிருந்தேன். அந்த ஓவியத்துக்கு மாநில அரசின் விருது கிடைச்சுது.

இந்த ரெண்டு ஓவியங்களும் என் மனசுக்கு நெருக்கமானவை.

ஓவியம்னா அதுல உயிர் இருக்கணும்.  கி.வீரமணி, நல்லகண்ணு, திருமாவளவன், ராம தாஸ்ல தொடங்கி  அரியலூருக்கு வந்த  கலெக்டர்கள் வரை எல்லார் கிட்டேயும் நான் அவங்களை வரைஞ்ச ஓவியம் இருக்கு. இதுவரை நான் எல்லா அரசியல் கட்சிகளுக் கும் வரைஞ்சு கொடுத்திருக்கேன். ஆனா, நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை.  இப்போ அப்துல் கலாமோட பல் வேறு முகபாவங்களையும் ஓவியமா வரைஞ் சுட்டு இருக்கேன். கலைஞரையும் ஜெயலலிதா வையும் ஓவியமாக்கி வெச்சிருக்கேன். நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் அவங்ககிட்ட கொடுப்பேன்!''

- நம்பிக்கையுடன் பேசுகிறார் பச்சைமுத்து!

- சி.ஆனந்தகுமார், படங்கள்: எம்.ராமசாமி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு