Published:Updated:

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"

Published:Updated:
"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"

''சோழ மன்னன் ராஜராஜனின் பெரிய பாட்டி, சிவாலயம் கட்டி அகத்தீஸ்வரரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஊர் மேற்கிள்ளிமங்கலம். மங்கலம் என்றால், தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர்னு அர்த்தம். அப்படிப் பார்த்தா... மேற்கிள்ளி என்பவனுக்குப் பாத்தியப்பட்ட ஊராக இது இருந்திருக்கணும். மேற்கிள்ளிமங்கலம்தான் பின்னாளில் மக்கள் பேச்சு வழக்குல மேக்கிரிமங்கலமா மாறிடுச்சு!'' ஊர்க் கதை சொல்லத் தொடங்கினார் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி.

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"
##~##

''சைவமும் வைணவமும் சமமா செழிச்ச ஊர் இது. இந்தச் சின்ன ஊரில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலும் உண்டு; பெருமாள் கோயிலும் உண்டு. பத்து நாள் நடக்கும் மாரியம்மன், வடிவம்மன் கோயில் தீமிதித் திருவிழாக்கள்தான் ஊரின் பெரிய விசேஷம். அப்போ மூணு நாளும் நாடகம் நடக்கும். மதுரை, புதுக்கோட்டை, பொன்னமராவதினு ஊர் ஊராப் போய் பிரபல நாடக செட்டுகளைத் தேடிக் கூப்பிட்டு வந்து நாடகம் போடுவாங்க. அதனால், சுற்றுவட்டாரக் கிராமங்கள்ல நாடகத்துக்காகவே எங்க ஊர் பிரசித்தம். அதேபோல, எங்க பக்கத்து ஊர் தேரழுந்தூர்ல நடக்கும் கம்பசேர்வையும் ரொம்ப சிறப்பா இருக்கும். அதில்  ஆயிரக் கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்வாங்க. எல்லா ஊர்கள்லேர்ந்தும் மக்கள் சாப்பிட வருவாங்க. இல்லேன்னு சொல்லாம அவ்வளவு பேருக்கும் சாப்பாடு இருக்கும். சாயங்காலம் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு மறுநாள் காலையில்தான் மக்கள் ஊர் திரும்புவாங்க.

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"

ஒருபுறம் வீரசோழனாறு, மறுபுறம் அதன் உபநதி மஞ்சளாறுனு ரெண்டுக்கும் இடைப்பட்ட பூமியா மேக்கிரிமங்கலம் இருந்தாலும், தண்ணீர்ப் பிரச்னை பெரும் பிரச்னைதான். விவசாயம்தான் வாழ்க்கை. ஆனா, ஒரு போகச் சாகுபடிக்கே ரொம்பத் திணறிட்டு இருப்போம்.

ஊரில் எல்லா நிலமும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்குச் சொந்தம். இங்கே இருந்த அக்ரஹாரத்து மக்கள், கோயில் நிர்வாகத்துக்கிட்ட அந்த நிலங்களை வாங்கி, சம்சாரிகளுக்குக் குத்தகைக்குத் தருவாங்க. சாகுபடியில் பெரும் பகுதி குத்தகைக்கே போயிடும்கிறதால, உழைச்சும் பிரயோசனம் இல்லாம தவிச்சுட்டு இருப்பாங்க விவசாயிங்க. ஆனா, குத்தகைப் பங்கு ஒரு வருஷம் குறைஞ்

சிட்டா, நிலத்தை வெச்சிருக்கிற விவசாயிகள்கிட்டேர்ந்து  நிலத்தைப் பிடுங்கி, வேறு விவசாயிகள்ட்ட கொடுத்துடுவாங்க.

அப்போ எல்லாம் ஆற்றைக் கடக்க பாலமோ, படகோ கிடையாது. கால் சட் டையைக் கழற்றி தோள்ல போட்டுக்கிட்டு, புத்தகப் பையைத் தலையில் வெச்சுக்கிட்டுத் தான் கரையைக் கடப்போம். யாருக்கும் சுகமில்லாமப் போனா, கட்டில்ல வெச்சு  தூக்கிட்டுத்தான் ஆற்றைக் கடந்து குத்தாலத் துக்கு ஓடுவாங்க. நாவிதர் குடும்பத்துப் பெண்மணி ஒருத்தர் இருந்தார். அவர்தான் கிராமத்து மருத்துவச்சி. ஒரே ஒரு டீக்கடை. 'பிள்ளை கடை’னு சொல்வாங்க. காலையில மட்டும்தான் டீ.  

இது எல்லாம் எங்க தலைமுறை தலையெடுத்த பிறகுதான் மாறுச்சு. நானும் என் தோழர்கள் அருணாசலம், வெங்கடேசன், சோமு, கந்தசாமியும் ஒன்பதாம் வகுப்பு முடிச்சுட்டு ஊர்ல வெட்டியாச் சுத்துனோம். விவசாயிகளுக்காக, மக்களைத் திரட்டிப் போராட்டத்துல இறங்கினோம். குத்தகை தாரர்களோட உரிமைகளைச் சொல்லி, உடன்பாடு போட்டோம்.

எங்க ஊரில் நாங்க குத்தகை வாங்கும் முறைகளை ஒழுங்கு செய்றதைப் பார்த்துட்டு, திருவாவடு துறை மடத்துக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்குச் சாகுபடி செஞ்ச மாம்புளி, கரைகண்டம், சாத்தனூர், திருவாவடுதுறையைச் சேர்ந்தவங்களும் கூப்பிட்டார்கள். அங்கேயும் போய் ஒழுங்குப்படுத்திக்கொடுத்தோம். நான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆகி, 101 தொகுப்பு வீடுகளைக் கட்டி, கலைஞரை அழைச்சிட்டு வந்து திறப்பு விழா நடத்தினேன். ஊர்ல இருந்த 10 குளங்களையும் ஆளுக்கு ஒரு ரூபாய் கூலி கொடுத்து வெட்டித் தூர்வாரினேன். 10 கோயில்களையும் புனரமைச்சேன். பாய்ச்சல், வடிகால்களைச் சீரமைச்சேன். இப்போ எங்க ஊரில் முப்போகம் விளையுது. மந்திரி ஆனதுக்குப் பிறகு ஆஸ்பத்திரி, திருமண மண்டபம், பள்ளிக்கூடம், சாலை வசதினு எல்லா விதத்திலும் எங்க ஊரைத் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றினேன்.  இப்படி ஊரால் நான் வளர்ந்தேன், ஊரை நானும் வளர்த்தேன். எந்த ஊருக்குப் போனாலும் ஊர் ஞாபகத்துலேயே ஓடியாந்துடுவேன். செத்தாலும் மேக்கிரிமங்கலத்துலதான்பா என் கதையை முடிக்கணும்னு சொல்லி இருக்கேன்!''

"ஊரால் வளர்ந்தேன் ஊரை வளர்த்தேன்!"
  • ஊரில் கணவன் - மனைவி தகராறு தொடங்கி, எந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும் முதல் அழைப்பு இவருக்குத்தான். அசராமல் அவர்கள் வீட்டுக்கே சென்று பேசி, பிரச்னையைத் தீர்த்துவைப்பார்!
  • கருணாநிதி காலையில் தொலைபேசியில் இவரை அழைத்தால், பத்திரிகைச் செய்திகள் தொடர்பாகத்தான் பேசுவார். இதனால் தன்னுடைய ஊருக்குப் பத்திரிகைகள் வரும்வரை காத்திருக்கா மல், கும்பகோணத்துக்கு ஆள் அனுப்பி வாங்கி வரச் சொல்லி அதிகாலையிலேயே எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடுவது இவருடைய வழக்கம்!  
  • கோ.சி. மணியை அறிஞர் அண்ணா செல்லமாக அழைக்கும் பெயர் 'மேக்கிரிமங்கலத்துப் போக்கிரி!’

- கரு.முத்து
படங்கள்: கே.குணசீலன்