Published:Updated:

ஜப்பான் டு தஞ்சாவூர்! - நோரி இசை

ஜப்பான் டு தஞ்சாவூர்! - நோரி இசை

##~##

ஞ்சாவூரில் ஓர் இசை விழா! தவில் கலைஞர் தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜனின் வாசிப்பை மிகவும் ரசித்து கவனிக் கும் மக்கள், அவருடன் சேர்ந்து தவில் வாசிக்கும் அவருடைய சிஷ்யப் பிள்ளையை ஆச்சர்யத்து டன் பார்க்கிறார்கள்! அங்கு உள்ள பெண்கள் சிலர், அந்த இளைஞனைப் பார்த்து கிசுகிசுவெனத் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டு இருக்கின்றனர். இவை எதையும் கவனிக் காது குருவுக்கு ஈடுகொடுத்து வாசிக்க முயற்சிக்கும் அந்த இளைஞனின் பெயர், ஹிதநோரி!

இவர் ஒரு ஜப்பான்காரர்!

'உங்களுக்கு, எப்படி இந்தத் தாள வாத்தியத்தின் மீது ஆர்வம்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டோம்.

அட்டகாசமான தமிழில் பதில் சொல்ல ஆரம்பித்தார் 'சவுண்ட் பார்ட்டி’ ஹிதநோரி.

ஜப்பான் டு தஞ்சாவூர்! - நோரி இசை

''ஜப்பானில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இசைக் குழு நடத்தினேன். எங்கே இசை நிகழ்ச்சி நடந்தாலும் ஆர்வமாகப் போய்ப் பார்ப்பேன். அப்படி இந்தியக் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தப்ப... கடம் வித்வான் 'விக்கு’ விநாயக்ராமின் மகன் எனக்கு அறிமுகமானார். இந்திய இசையில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து, 'இந்தியாவுக்கு வந்து இந்தக் கலையைக் கற்றுக்கொள்’னு சொன்னார்.

சென்னை வந்தேன். ஆரம்பத்தில் தபேலாவும் கஞ்சிராவும்தான் கத்துக்கிட்டேன். ஒரு முறை கோவிந்தராஜன் சாரின் தவில் இசை நிகழ்ச்சிக்குப் போய் இருந்தேன். நிகழ்ச்சி முடியும்போது எனக்கான வாத்தியம் தவில்தான்னு தோணுச்சு. உடனே, கோவிந்தராஜன் சார்கிட்டேயே 'எனக் குத் தவில் கற்றுக்கொடுங்க’னு கேட்டேன். அவர் காட்டிய வழியில்தான் திருவையாறு இசைக் கல்லூரியில் படிப்பு போய்க்கிட்டு இருக்கு.

இந்திய இசையின் பல்வகையான பரிமாணங்களையும் அடுத்தடுத்து கத்துக்கணும். நான் இங்கே கத்துக்கிற கலையை, அடுத்து எங்க ஊருக்கு எடுத்துக்கிட்டுப்போகணும். ஜப்பானில் அதைப் பிரபலமாக்கணும். எதிர்காலத்தில் ஒரு இசைப் பள்ளி தொடங்கி, ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுத் தரணும்!'' என்கிறார் நோரி.

கடைசியில் கேட்டோம்:

''ஹிதநோரி என்றால் என்ன?''

''ரொம்பத் திறமையானவன்னு அர்த்தம்'' என்று அந்த ஜப்பானியர் சொன்னபோது, அவர் முகத்தில் மேளக் கச்சேரி!

ஜப்பான் டு தஞ்சாவூர்! - நோரி இசை
  • முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் புத்தக ஆர்வம், பலருக்கும் தெரிந்ததுதான். தஞ்சாவூரில் 'முரசு புத்தக நிலையம்’ என்று ஒரு புத்தகக் கடையை இவர் நடத்தி வருகிறார். திருவாசகத்தை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் பெற்ற இவர், 1,330 குறட்பாக்களில் எதைக் கேட்டாலும் சொல்லக் கூடியவர்!

- இரா.மங்கையர்கரசி
படம்: ந.வசந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு