Published:Updated:

நாலரை வயது சுட்டியின் இரண்டரை நிமிடச் சாதனை!

நாலரை வயது சுட்டியின் இரண்டரை நிமிடச் சாதனை!

'சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை!’ என்பதை நிரூபித்து இருக்கிறார் கரூர் ஸ்ரீசங்கரா வித்யாலயாவின் எல்.கே.ஜி. மாணவி இனியா. பார்ப்பவை, கேட்பவை, படிப்பவை... எதுவானாலும் அதை மனதில் அப்படியே பதியவைத்து காட்டாற்று வெள்ளமாகக்  கடகடவென்று ஒப்பிக்கிறார்.

நாலரை வயது சுட்டியின் இரண்டரை நிமிடச் சாதனை!
##~##
''இனியாவுக்கு இரண்டரை வயது இருக்கும்போது, முதன்முதலா தேசத் தலைவர்கள், உலக நாடுகளின் பெயர்கள், நாடுகளின் தேசியக்கொடிகள்னு சொல்லிக்கொடுத்தோம். அதை எல்லாம் ஆர்வமாக் கேட்டுக்கிட்டு அழகா ஒப்பிக்கவும் செஞ்சா.

இப்ப 200 நாடுகளோட தேசியக் கொடிகள், கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டின் 99 வகையான பூக்களின் பெயர்கள் எல்லாம் அவளுக்குச் சரளமாக வரும். வெறும் 2 நிமிடம் 34 நொடிகள்ல அத்தனை நாட்டின் கொடிகளை யும் சுட்டிக்காட்டி, பெயர்களையும் சொல்லிடுவா. பூக்கள் பெயரை வெறும் 1 நிமிடம் 2 நொடிகள்ல சொல்லிடுவா. இதை 5 நிமிடங்கள்ல சொன்னாலே சாதனைனு சொல்வாங்க. ஆனா, 3 நிமிடம் 36 நொடிகள்ல சொல்லிடுவா இனியா.

இதெல்லாம் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’-ஸில் சாதனைகளாகப் பதிவுசெய்யப்பட்டு இருக்கு. 'அமேசிங் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’லயும் இப்ப இனியா பெயரைச் சேர்த்து இருக்காங்க.

நாலரை வயது சுட்டியின் இரண்டரை நிமிடச் சாதனை!

மனப்பாடத் திறன் மட்டுமில்லை; யோகாவிலும் 10 ஆசனங்கள் பிரமாதமா செய்வா. 'செஸ்’ விளையாட்டிலும் கில்லி.

இதுக்கு எல்லாம் நான் செஞ்ச விஷயங்கள்... என்னோட வேலையை உதறிட்டு அவளோடு நேரத்தைச் செலவிட்டதும், அவளை அவ போக்குல விட்டதும்தான். குழந்தைகளை அவங்க போக்குக்கு விடணும். அவங்ககூட இருக்கும்போது நாமளும் அவங்க வயசுக்கு இறங்கிப் பழகணும். பெற்றோர் இப்படி நடந்துக்கிட்டாலே, எல்லாக் குழந்தைகளும் சாதிப்பாங்க!'' என்றார் இனியாவின் தாய் செல்வி.

இனியாவும் செல்வியும் இப்போது கின்னஸ் சாதனைக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்!

நாலரை வயது சுட்டியின் இரண்டரை நிமிடச் சாதனை!
  • 'இளம் சாதனையாளர்’, 'ஆற்றலரசி’ என்று ஏகப்பட்ட பட்டங்களை அள்ளி இருக்கிறாள் இனியா!
  • கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஈழத்தமிழ் ஆதரவாளர். இவர், தான் நடத்தும் பள்ளிகளில், படிப்பில் ஆர்வம் உள்ள இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்!

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு