Published:Updated:

ஜில்லுனு ஒரு வெற்றிக் கதை !

சி.சுரேஷ்படங்கள்: கே.குணசீலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேராவூரணி என்றால் ஒரு காலத்தில் மொய் விருந்துதான் ஞாபகம் வரும்! இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது குளிர்பானப் பெட்டி.

ஊருக்கு ஊர் கடை வீதிகளிலும் பேருந்து நிலையங்களிலும் ஒரு செவ்வக வடிவ நீளப் பெட்டிக்குள் இருந்து ஃப்ரூட் மிக்சர், பாதாம்கீர், ரோஸ்மில்க், லெமன் என வகைவகையான குளிர்பானங்கள் வைத்து விற்பார்களே... அந்தப் பெட்டிகள் யாவும் பேராவூரணி மண்ணில் இருந்து புறப்பட்டவையே.

ஜில்லுனு ஒரு வெற்றிக் கதை !
##~##

இந்தக் குளிர்பானப் பெட்டி மாடலை முதன்முதலில் உருவாக்கியவரான பேராவூரணியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனைச் சந்தித்தோம். '1979-ல் இந்த கூல்டிரிங்ஸ் பெட்டியை உருவாக்கினேன். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது ஒருவர் ஃப்ரூட் சர்பத் போட்டுக் கொடுப்பார். நல்ல ருசியா இருக்கும். அவர் பழங்களை ஐஸ் கட்டியோடு போட்டுக் கொடுப்பார். அந்த ருசி இன்னமும் நாக்கில்  இருக்கு. அப்புறம் நான் பேராவூர ணியில் ஐஸ் கம்பெனி வெச்சிருந்தேன். நீங்க குச்சி ஐஸ், தேங்காய் ஐஸ், சேமியா ஐஸ் சாப்பிட்டு இருப்பீங்களே... அந்த மாதிரி ஐஸ் கம்பெனிதான். இதில் புதுசா ஃப்ரூட் போட்டு ஃப்ரூட் ஐஸ்னு தயாரிச்சு அனுப்பினேன். மக்களுக்குப் பிடிச்சுப்போச்சு. ஆனாலும் ஃப்ரூட் ஐஸ் கட்டியா இருந்தது. கூழ்போல ஜில்லுனு இருந்தா நல்லா இருக்குமேனுதான், ஐஸ் தயாரிக் கிற பெட்டியை மாத்தி செஞ்சேன்.

அந்தப் பெட்டிக்குள்ளே  நீளமான குழாய் வடிவ பாத்திரங்களை செஞ்சு அடுக்கினேன். வாழைப் பழம், அன்னாசி, ஆப்பிள் போட்டு நான் தயார் பண்ணிய ஃப்ரூட் மிக்சரை வெச்சு, பேராவூரணியில் முதன்முதலில் 'சூப்பர் கூல் டிரிங்ஸ் கடை’னு ஆரம்பிச்சேன்.

ஜில்லுனு ஒரு வெற்றிக் கதை !

அந்தக் காலத்திலேயே ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் கிளாஸ் வித்துச்சுனா பாருங்களேன். உடனே சென்னை, செங்கல்பட்டு, ஆவடி, திருநின்றவூர்னு ஒரே சமயத்தில் 30 கடைகளை தமிழகம் முழுவதும் திறந்தேன். எல்லாக் கடைகளுக்கும் ஒரே பெயர்... 'சூப்பர் கூல்டிரிங்ஸ்’! சென்னை சென்ட்ரல் பக்கத்தில் புல்லட் மணி என்பவருக்கு இந்தப் பெட்டி மாடல் சொல்லிக்கொடுத்து தயாரிச்சுத் தரச் சொன்னேன். இன்னைக்கு அந்தப் பகுதியில் பெட்டித் தயாரிப்பு, பெரிய தொழிலா நடந்து கிட்டு இருக்கு. இப்ப நிறையப் பேர் இதைச் செய்றாங்க. ஆனா, மாடல் இன்னைக்கும் நம்ம ளோடதுதான்'' என்றார் பாலசுப்பிரமணியன்.

ஜில்லுனு ஒரு வெற்றிக் கதை !
ஜில்லுனு ஒரு வெற்றிக் கதை !

பேராவூரணியில் இப்போது இந்தத் தொழிலில் முன்னணியில் இருக்கும் இன்னொரு தொழில் அதிபர் 'நீல்வின்ஸ் இந்தியா’ தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜேந்திரன். 'எங்க மக்களுக்கு அழகான வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்தது இந்தத் தொழில்தான். கன்னியாகுமரியில் இருந்து மகாராஷ்டிரா வரை கூல்டிரிங்ஸ் கடைகள் வைத்து கொடுத்து உள்ளோம். இந்தியா முழுவதும் இந்தத் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. பேராவூரணியில் மட்டும் ஆயிரம் குடும்பங்கள் வெளியூர்களுக்குப் போய் கூல்டிரிங்ஸ் கடை வைத்துள்ளனர்'' என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு