என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

முதல்வருக்கு ஓர் ஓவியம்!

முதல்வருக்கு ஓர் ஓவியம்!

ரூர், முத்துராஜாபுரத்தைச் சேர்ந்த ஓவியர் வசந்த கணேசன் மணல், வைக்கோல், கோலப்பொடி, ஜிகினா, நவதானியம், உல்லன் நூல் என எல்லாவற்றையுமே தூரிகையாகவும் ஓவியத் திரையாகவும் மாற்றிவிடுகிறார்.

முதல்வருக்கு ஓர் ஓவியம்!
##~##
''அஞ்சாவது படிக்கும்போதே ஓவியத்தில் ஆர்வம். ஓவியப் பயிற்சி எடுத்துக்கிட்டு நிறையப் படங்கள் வரைய ஆரம்பிச்சேன். எல்லோர் மாதிரியும் வெறும் தாளில் மட்டும் ஓவியங்கள் வரையறதை விட்டுட்டு வித்தியாசமா எதாவது முயற்சி செய்யலாமேனு தோணுச்சு. முதல்ல மணல், அப்புறம் வைக்கோல்னு முயற்சி பண்ணினேன். இப்ப அது உல்லன் நூல் வரை வந்திருக்கு.

உல்லன் நூலில் முதல்ல விநாயகர் படங்களைச் சின்ன அளவில் வரைஞ்சேன். பார்த்தவங்க எல்லாம் ஆர்வத்தோடு வாங்கிட்டுப் போனாங்க. இப்ப மூணு மாசமா உழைச்சு நம்ம முதல்வரோட படத்தைப் பெரிய அளவில் வரைஞ்சுருக்கேன். உல்லன் நூல்ல வரையறது கொஞ்சம் சள்ளைப் பிடிச்ச வேலை. கழுத்தைக் குனிஞ்சுக்கிட்டே மெனக்கெடணும். முதல்வர் படத்தை வரைஞ்சப்பகூட கழுத்து சுளுக்கி ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தேன். ஆனா, எல்லாக் கஷ்டத்தையும் ஒரு பாராட்டு தீர்த்துடும்.

முதல்வர்கிட்ட இந்த ஓவியத்தைக் கொடுக்கணும். இன்னும் நிறைய வடிவங்கள்ல ஓவிய முயற்சிகள்ல ஈடுபடணும்''

- உற்சாகமாகப் பேசுகிறார் வசந்த கணேசன்.

-ஞா.அண்ணாமலைராஜா