Published:Updated:

"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை!"

"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை!"

"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை!"

ரூரின் கலக்கல் ஹீரோ, லோக்கல் சேனலான 'வானவில்’லின் வீ.ஜே. செந்தில். 'பாடலும் செய்தியும்’, 'திரை அலசல்’,  'கலக்கல் மச்சி கலக்கல்’ என்று இவர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கரூரில் சூப்பர் டூப்பர் ஹிட்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''கடந்த கிறிஸ்துமஸ் அன்னைக்குத் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 8 மணி நேரம் நிகழ்ச்சி நடத்தினேன். புத்தாண்டு அன்னைக்கு 12 மணி நேரம் நிகழ்ச்சி நடத்தினேன். இப்படிப் புதுசுப் புதுசா ஏதாவது முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன்.

வருஷத்துக்கு நாலு முறைனு கடந்த 10 வருஷத்தில் இதுவரைக்கும் 40 முறைக்கு மேல் ரத்த தானம் செஞ்சுருக்கேன். உடல் தானம், கண் தானத்துக்கு எழுதிவெச்சிருக்கேன். ஒரு நாள் இதை நிகழ்ச்சியில் பகிர்ந்துகிட்டேன். தானம் அளிக்கிறதோட முக்கி யத்துவத்தைச் சொன்னேன். இதைக் கேட்டுட்டு கிட்டத்தட்ட 200 பேர் ரத்த தானம், கண் தானம்,  உடல் தானத்துக்கு தயாராக இருப்பதைப்  பகிர்ந்துகிட்டாங்க.

நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் நண்பர்களோட சேர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களைத் தேடிப் போயிடுவேன். எங்களால் முடிஞ்சதைச் செய்வோம்.

நான் நேரலை நிகழ்ச்சி நடத்தறப்ப அரை மணி நேரத்தில் குறைஞ்சது 100 அழைப்புகளாவது காத்திருப்பில் இருக்கும். காரணம், மக்கள் வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாளனா மட்டும் என்னைப் பார்க்கலை. அவங்க வீட்டுல ஒருத்தனாவே பார்க்கிறாங்க'' - உருகுகிறார் செந்தில்!

-ஞா.அண்ணாமலை ராஜா