Published:Updated:

எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?

எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?

எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?

''கீழையூர், மேலையூர்னு ரெண்டு பிரிவுகளாகச் சொல்லப்பட்டாலும், ஒற்றுமையிலும் கட்டுப்பாட்டிலும் கண்ணந்தங்குடி ஒண்ணுதான்!' -  தன் ஊர் பற்றிப் பேசத் தொடங்கினார், தி.மு.க-வின் முன்னோடிகளில் ஒருவரான எல்.கணேசன்.

எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து 3 கி.மீ. உள்ளே வந்தா எங்க ஊருக்கு வந்துடலாம். தஞ்சை மாவட்டத்திலேயே கண்ணந்தங்குடியில்தான் முதன்முதலில் கிறிஸ்துவ மதம் பரவுச்சு. முதல் மாதா கோயிலும் பாதிரியார் பள்ளிக்கூடமும் இங்கேதான் கட்டப்பட்டன. கண்ணந்தங்குடியின் கல்வி முன்னேற்றத்துக்கு இதுதான் காரணம்.

மராத்திய மன்னர் துளஜாஜி, தனக்கு அடுத்து தன்னுடைய அண்ணன் மகன் அமர்சிங்கை அரியணையில் அமர்த்த விரும்பலை. அதனால், 10 வயது சிறுவனாக இருந்த சரபோஜியைத் தத்து எடுத்து வளர்த்தார். சரபோஜியின் உயிர்ப் பாதுகாப்பை எண்ணி, அவரை எங்க ஊர் பாதிரியார் ஸ்வார்ட்ஸ்கிட்ட ஒப்படைச்சார். சரபோஜி தலைமறைவு வாழ்க்கை நடத்தியது இங்கேதான். பின்னாடி அவர் அரசர் ஆனதும் எங்க ஊரைச் சேர்ந்தவங்கதான் அவரோட மெய்க்காப்பாளர்களாகவும் அரண்மனைச் சேவகர்களாகவும் ஆனாங்க. எங்க ஊரோட வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியமான பின்னணி.

எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?

மதம், சாதிக்கு அப்பாற்பட்ட எங்க ஊர் மக்களின் ஒற்றுமைக்கு ஒரு விஷயத்தை உதாரணமாச் சொல்லலாம். நல்லது, கெட்டதை முடிவு செய்றது ஒரே பஞ்சாயத்து அமைப்புதான். இச்சிமரம்கிறது எங்க ஊர் பஞ்சாயத்து கூடுற இடம். வாதியும் பிரதிவாதியும் நேருக்கு நேராகப் பேசிக்கொள்ளக் கூடாது. நடுவராக அமர்ந்து இருப்பவர்கிட்டதான் பிரச்னையைச் சொல்லணும். அவர் பிரதிவாதியிடம் கேட்பார். சுற்றி ஏழு கரைக்காரர்களும் அமர்ந்து இருப்பாங்க. நியாயம் எதுவோ அது ஜெயிக்கும்.

ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெயர் உண்டு. பெரும்பாலும் அது குஸ்தி வாத்தியார் சுவாமிநாதன், மணியார் வீராசாமி,  முனிசிபல் வெங்கடாச்சலம்னு அவங்கவங்க பார்க்கிற வேலையைவெச்சு ஆளுங்க பெயரா அமையும்.   காலப்போக்கில் அதுவே குஸ்தி வாத்தியார் வீடு,  மணியார் வீடு, முனிசிபல் வீடுனு குடும்பப் பெயரா மாறிடும்.

வைகாசி முதல் புதன்கிழமை அன்னைக்கு மலையேறி அம்மன் கோயில் திருவிழா நடக்கும். தஞ்சை மாவட்டத்திலேயே வேற எந்தக் கிராமத்திலும் இவ்வளவு சிறப்பா திருவிழா பார்க்க முடியாது. கீழையூர்-மேலையூர் மக்களை இணைப்பதே இந்தக் கோயில்தான். அதனால், எங்களுக்கு  இந்தத் திருவிழா அவ்வளவு முக்கியம்! கோயிலில் கிடா வெட்ட மாட்டோம். தேர் வரும் பாதையில் வகையறாக்கள் ஒண்ணுசேர்ந்து மது தோண்டிவெச்சு சாமி கும்பிட்டுவிட்டு, பிறகு அங்கேயே கிடா வெட்டுவார்கள். இதுபோல, ஊர் முழுக்கக் கிடாவெட்டு நடக்கும்.  எங்க ஊரைச் சேர்ந்தவங்க எங்கே இருந்தாலும் இந்தத் திருவிழாவுக்கு வந்துடுவாங்க.

எங்களோட எல்லா நல்லது கெட்டதுக்கும் பக்கத்து ஊரான ஒரத்தநாடு சந்தைக்குத்தான் போகணும். என்ன வாங்கப் போனாலும் தவறாம கொஞ்சம் கருவாட்டையும் வாங்கிக்கிட்டு வந்துடுவோம். ஒரு ரகசியம் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடிச்சது இந்தக் கருவாடு. அடிக்கடி அவருக்கு இங்கிருந்து பொட்டலம் போகும்.

எங்க ஊரோட நீர் ஆதாரம் சேத்தன் ஏரியும் சிங்கன் ஏரியும். அப்புறம் தெருவுக்குத் தெரு குளம் உண்டு. கோயிலுக்கு என்ன மதிப்பு உண்டோ அதே மதிப்பு எங்க ஊரு ஏரி, குளத்துக்கும் உண்டு.

செட்டியார் மளிகைக் கடை, அலமேலு அம்மாள் சாப்பாட்டுக் கடை... இது ரெண்டும்தான் எங்க ஊரோட கடைவீதி. வெளியே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்னா பெரும்பாலும் அது இந்தக் கடைகளுக்குப் போயிட்டு வர்றதாதான் இருக்கும். பரம்பரை பரம்பரையா நடத்தப்படுற கடைகள் இவை. அலமேலு அம்மாள் கடை  ஆப்பத்துக்கும் தோசைக்கும் ஏகக் கிராக்கியா இருக்கும். அறுவடைச் சமயங்களில் ஒரு கூடையில் வெச்சு சுண்டல், கடலை கொண்டுவந்து விற்பாங்க. எங்க ஊர் மண் வாசத்தோடு இதைச் சாப்பிடுற சுவை, தங்கத் தட்டில் வெச்சு கொடுக்கிற வேறு எதிலும் கிடைக்காது!''

எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?
எம்.ஜி.ஆர். ரகசியம் தெரியுமா?

- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்