Published:Updated:

"ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!"

குடந்தையில் ஒரு சாதனை நாயகன்

கும்பகோணம் கராத்தே மாஸ்டர் செந்திலின் சாகசங்கள் எல்லாமே மயிர்க் கூச்செறியும் ரகங்கள்தான்.

"ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!"
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''ஒன்பது வயசில் தொடங்குச்சு என் கராத்தே வாழ்க்கை. கராத்தே மாஸ்டர் திருவாரூர் செல்லப்பாண்டியன்தான் என் குரு. அப்பவே சின்னச் சின்ன சாகசங்கள் ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பேன். நாலு முறை கராத்தே பிளாக் பெல்ட் வாங் கிட்டேன். ஏதாவது பெருசா செய்யணும்கிற ஆர்வம் மட்டும் விடலை. அதுக்காக நெஞ்சில் பாறாங்கல்லை வெச்சு உடைக்கிறது, பற்களால் கயிறை கவ்வி வாகனங்களை இழுக்கிறதுனு வழக்கம்போல எல்லோரும் செய்யறதையே செய்யக் கூடாதுனு முடிவு பண்ணினேன்.
"ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!"

அதனால், கடப்பாரையைத் தொண்டையில் வெச்சுக்கிட்டு காரைத் தள்ளிட்டுப்போறது, கழுத்தில் சுருக்கு மாட்டிக்கிட்டு அந்தரத்தில் தொங்குறது, கொடி மரத்தில் கொடி ஏற்றுவதுபோல கழுத்தில் சுறுக்கு மாட்டிக்கிட்டு ஏறுவது, கத்திகளை நட்டு வெச்சு அது மேல படுத்திருப்பது, ஒருமணி நேரத்துக்கும் மேல் மண்ணுக்குள் புதைஞ்சி இருப்பதுனு புதுசு புதுசா இறங்கினேன். இது எல்லாமே புது முயற்சிகள்.

தேசிய அளவில் பல போட்டிகள்ல தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள், மாநில அளவில் 40 போட்டிகளுக்கு மேல் முதல் பரிசு, பல அமைப்புகளும் கொடுத்த சாகச விருதுகள், 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’னு  பல சாதனைகள் பண்ணியாச்சு.

போன வருஷம் 1.50 நிமிடங்கள் கழுத்தில் சுருக்கு மாட்டிக்கிட்டு கயிற்றில் தொங்கிய சாகசத்தை லிம்கா மற்றும் கின்னஸ் ரெக்கார்டில் பதிவுசெய்ய கடிதங்கள் அனுப்பி இருக்கேன். என்னோட இந்த சாகசங் களில் முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா,  ஜிம்னாஸ்டிக்,குங்ஃபூ, யோகா, தியானம், மூச்சுப் பயிற்சினு பல கலைகளை நான் கலந்து செய்வதுதான்.

உலக அளவிலான போட்டிகளில் கலந்துக்கறதுக்கும் தொடர்ந்து பயிற்சிகளைச் செய்வதற்கும் சரியான பொருளாதாரப் பக்கபலம் இல்லாததுதான் என் பெரிய குறை.  குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சொற்பத் தொகைதான் என் வருமானம். கடந்த 10 வருஷங்களா என் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கிறது எல்லாம் என்னோட நண்பர்களும் எம்.எல்.ஏ. அன்பழகனும்தான். சரியான உதவிகள் கிடைத்தால் சர்வ தேச அளவிலான போட்டிகளில் என்னால் கலந்துக்க முடியும்.

இப்ப என்னோட எண்ணம் எல்லாம் 60 டன் விமானத்தைக் கயிற்றால் கட்டி இழுக்கணும்கிறதில் இருக்கு. இதற்கான பயிற்சி களில்தான் இப்போ ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன்'' என்ற செந்திலின் கண்களில் மிளிர்கிறது தன்னம்பிக்கை.

"ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!"
"ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!"

-நீரை.மகேந்திரன்
படங்கள்: செ.சிவபாலன்