Published:Updated:

தரங்கம்பாடி கலாம்கள்!

தரங்கம்பாடி கலாம்கள்!

ரங்கம்பாடியில் அந்தத் தொழிற்கூடத்தில் நுழைந்தஉடனேயே 'மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; முயற்சிகள் நின்றாலும் மரணம்தான்’ என்ற அப்துல் கலாமின் வார்த்தைகள் நம்மை வரவேற்கின்றன.

தரங்கம்பாடி கலாம்கள்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்கு பார்த்தாலும் மாணவர்கள்  கூட்டமாக ஏதாவதுஒரு புதிய கருவியை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சத்தீஸ் கர் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஒரு குழுவினர், தங்களுக்கு என்ன மாதிரியான தொழில்நுட்பம் தேவை என்பதை மூன்று  சகோதரர்களிடம் கலந்து ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள். தொழிற்கூடத்தில் தயாரான கருவிகள், வரிசை கட்டி நிற்கின் றன.  அதில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸோடு இருந்தஒரு சைக்கிளைக் காட்டி,  ''அது என்ன?'' என்று கேட்டோம்.

''இந்த சைக்கிளைச் சுற்றவிட்டு அதன் மூலம் கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் இயக்க முடியும். ட்ரில் கருவிகொண்டு துளை போட முடியும். தேங்காய்த் துருவ முடி யும். மோட்டாரை இயக்கி தண்ணீர் இறைக்க முடியும். இப்படி, 10 வேலைகளை இந்த  சைக்கிள் மூலம் செய்யமுடியும். அதே நேரத்தில் இந்த சைக்கிள் மூலம் 40 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யவும் முடியும்''என்று நம்முடைய முதல் பந்தையே சிக்ச ருக்கு எகிற அடித்தார்கள்  பால சுந்தரம், ஜெயராஜ், முரளி சகோதரர்கள்.

இந்த சைக்கிளுக்காக, முரளிக்கு இளம் விஞ்ஞானி பட்டம் கொடுத்து இருக்கிறதாம் நேரு இளையோர் மையம். கல்லூரி மாணவர்களுக்காக இப்படி புதுப்புது ஐடியாக்களை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது இந்த மூவர் குழு. மூவருமே பொறியியல் படித்திருந்தாலும், வேலைக்குச் செல்லவில்லை. தங்கள் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒட்டுமொத்த சிந்தனை. அப்படி மாண வர்களுக்காக இதுவரை 500-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.   அவற்றில் சிலவற்றைப் பற்றிச் சொன்னார்கள்.

தரங்கம்பாடி கலாம்கள்!

''வீட்டில் கேஸ் லீக்கானால் ஆட்டோமேட்டிக்காக சிலிண்டர் வால்வு மூடிவிடும் வகையில்சென் சார்வைத்து ஒரு புராஜெக்ட்செய்து கொடுத்தோம்.  டூவீலரில் போகும் போது செல்போன் ரிங் அடித்தால் அதை உணர்ந்துகொண்டு, தானா கவே இடதுபக்க இண்டிகேட்டர் எரியும். அதில் இருந்து 10 விநாடி களுக்குள் வண்டியை நிறுத்தா விட்டால் வண்டி இன்ஜினின் வேகம் குறைய ஆரம்பித்துவிடும். செல்போனை அணைத்தால் அல்லது பேசிவிட்டு துண்டித்தால் மட்டுமே திரும்ப ஓடும். இப்படி ஒரு புராஜெக்ட்!

மாற்றுத்திறனாளிகளும் டூவீலர் ஓட்டும் வகையில் கியர் மற்றும் பிரேக்கைக் கைகளால் இயக்கச் செய்யும் தொழில்நுட்பம், டீசல் இன்ஜினில் பெரும் பிரச்னையாக இருக்கும்புகை யைக் குறைக்கும் தொழில்நுட்பம், டீசல், பெட் ரோல் ஆகியவற்றால்  இயங்கும் அத்தனை மோட் டார்களையும் அவற்றில் பாதியும் மீதிக்கு தண்ணீ ரையும் ஊற்றி இயங்கவைக்கும் தொழில்நுட்பம், சூரிய ஒளியில் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள், வெறும் காற்றைக் கொண்டே சைக்கிளை மிதிக்காமல் இயக்கும் தொழில்நுட்பம், சிறிய அளவிலான காற்றாலை மின்சார உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், கேஸ் அடுப்பைத் தண்ணீரைக் கொண்டு இயக் கும் தொழில்நுட்பம் என்று எண்ணற்ற தொழில் நுட்பங்களை உருவாக்கி இருக்கிறோம். இவை அனைத்துமே பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சாதனைகளாகப் பதிவுசெய்யப்பட்டு இருக்கின் றன'' என்று பெருமையோடு சொன்னார் ஜெய ராஜ்.

தற்போது இவர்கள் கண்டுபிடித்து இருக்கும் 'சின்ன’ மோட்டார் சைக்கிள்தான் இவர்களை மிகவும் பிரபலமானவர்களாக ஆக்கியிருக்கிறது. சிறிய சைக்கிளின் ஹாண்டில் பார், ஃபிரேம் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த சின்ன பைக்கைத் தயார்செய்து இருக்கிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பவர் ஸ்பிரே யரின் இன்ஜினை இதற்குப் பொருத்தி இருக்கி றார்கள். இன்ஜினில் இருந்து பெல்ட் மூலம் சக்கரம் உருண்டு, வண்டி ஓடுகிறது. இந்த மோட் டார் சைக்கிள் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லுமாம்.  

இதை அடுத்து இன்னும் பல திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். ஏரி போன்ற பெரிய நீர் பரப்பின் மீது கிடைக்கும் சூடான காற்றைப் பயன்படுத்தி தண்ணீரைக் கொதிக்கவைக்கப் பயன்படுத்துதல், தற்போதைய எல்லாஎரிபொருள் களுக்கும் மாற்றாக, மீத்தேன் வாயுவைப் பயன் படுத்துவது, இரு சக்கர வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையைத் திரும்பவும் எரிபொரு ளாகப் பயன்படுத்துவது, ஒரே நிமிடத்தில் சோறு வேகவைப்பது போன்ற திட்டங்கள்இவர் களிடம் ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன.

''எங்கள் அடுத்த இலக்கு நானோ கார் மாதிரியான சின்ன கார். இரண்டுபேர் மட்டுமே அமர்ந்து செல்லும் ஒரு காரை சில எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெறும் 30 ஆயிரம் ரூபாயில் தயார் செய்யப் போகிறோம். சத்தீஸ்கர் மாநில மாணவர்கள் இதை உருவாக்கச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி மாணவர்கள் தங்கள் மனதில் எந்தத் திட்டத்தோடு வந்தாலும் அவர்களின் கனவுகளை நனவாக்கிக் கொடுப்பதுதான் எங்கள் லட்சியம். இந்தக் கண்டுபிடிப்புகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பாராட்டுகிறதே தவிர, அதனை முறைப்படி பதிவுசெய்து எங்களை ஆராய்ச்சியாளர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதுதான் எங்கள் வேதனை. ஆனால், டாக்டர் அப்துல் கலாம் அவர்களே எங்களின் கண்டுபிடிப்புப்பற்றி ஒரு முறை பேசினார். அதுதான் எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்'' என்கிறார்கள்.

வானம் வசப்படட்டும் சகோதரர்களே!

தரங்கம்பாடி கலாம்கள்!
தரங்கம்பாடி கலாம்கள்!

- கரு.முத்து
படங்கள்: கே.குணசீலன்