Published:Updated:

2012 கனவுகள்... கற்பனைகள்... ஆசைகள்

2012 கனவுகள்... கற்பனைகள்... ஆசைகள்

##~##

''புது வருஷம் பிறந்தாச்சு. ஆளாளுக்கு ஒரு முடிவு எடுப்பாங்க. புதுசா சில விஷயங்கள் செய்ய ஆசைப்படுவாங்க. நாங்களும் அப்படித்தான். எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து புத்தாண்டு முடிவுகள், ஆசைகள்னு ஒரு பெரிய பட்டியலே வெச்சு இருக்கோம்'' - ஆர்வமாய்ப் பேச ஆரம்பித்தார் காரைக்கால் கல்லூரி மாணவி வித்யா. ஒவ்வொருவருக்குமான புத்தாண்டு ஸ்பெஷல்குறித்துத்தான் இந்த அரட்டை.

 ''இந்த வருஷம் என்னோட இலக்கு வாழ்க்கையைக் கொண்டாடுறதுதான். ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியா ஊர் சுத்தறது அதில் முக்கியமான அசைன்மென்ட்'' என்றார் தரணி.

''நல்ல லட்சியம்!'' என்று கிண்டலடித்த பவித்ரா, ''எனக்குப் பெரிய பெரிய ஆசை யெல்லாம் கிடையாது. சமைக்கக் கத்துக்கணும். இதுதான் என்னோட ஆசை'' என்றார் அப்பாவியாக.

''நானும் பவித்ரா மாதிரிதன். பெரிசா ஆசைப்படலை. ஜஸ்ட் இந்த வருஷத்தில் ஆல் இந்தியா டூர் போகணும். முடிஞ்சா அமெரிக்கா போகணும். ஐ லவ் நியூயார்க்'' என்று கற்பனை விமானம் ஏறிப் பறந்தார் நிஷா.

2012 கனவுகள்... கற்பனைகள்... ஆசைகள்

''இருக்கிற எல்லா நான்வெஜ் ஐட்டமும் சாப்பிடணும். ஜாலியா பைக்ல ஊர் சுத்தணும். ஒரு நாளாவது காலையில 12 மணி வரைக்கும் நல்லாத் தூங்கணும்'' என்று அர்ச்சனா சொல்ல, பவித்ராவும் பிருந்தாவும் ''12 மணிங்கிறது காலையிலேயா? முதல்ல உன் கடிகாரத்தை உடைக்கணும்'' என்று கலாய்த்தனர்.

''எப்படியாவது இந்த வருஷம்  காலைல 5  மணிக்கு எல்லாம் எழுந்து கோலம் போடணும்'' என்று ப்ரியா சொல்லி முடிக்கும் முன்பே ''10 புள்ளி கோலமா, எட்டுப் புள்ளி கோலமாடி?'' என்று கோரஸ் கேள்விகள் எழுந்தன.

தரணிக்கும் நித்யாவுக்கும் சிம்புவை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் புத்தாண்டுக் கனவாம்!

''எப்பவும் என்னைச் சுத்தி இருக்கிறவங்களை நான் சந்தோஷப்படுத்தணும். என்னால யாரும் கஷ்டப்படக் கூடாதுனு  முடிவு எடுத்து இருக்கேன்'' - இது பூர்ணிமாவின் புத்தாண்டு சபதம்.

பிருந்தா, ''இதுவரை நான் காலேஜுக்கு சரியான நேரத்துக்குப் போனதே இல்லை. இந்த வருஷத்தில் இருந்து 9 மணிக்கு வகுப்புன்னா, 8.45 மணிக்கு எல்லாம் காலேஜுக்குக் கிளம்பணும். நல்லாப் படிக்கணும்...'' என்று அடுக்கிக்கொண்டேபோக ''ஓ... ஓஓஓ'' என சவுண்டு கிளம்பியது.

அனிதா, சிந்து, வான்மதி. மூவருக்கும் ஒரே சிந்தனை. ''ஒரு மழைநாளில் பீச் ரோட்டில் பைக் ஓட்ட வேண்டும்'' என்பதுதான் அந்த ஜில் சிந்தனை.வடநாட்டு மாணவியான பனிதா, ''இந்த வருஷம் எப்படியும் தமிழ் கத்துக்குது'' என்று சொல்ல... 'செம்மொழியான தமிழ் மொழியாள்’ பாடினர் தமிழ் மாணவிகள்.

மா.சங்கீதா, படங்கள்: ந.வசந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு