Published:Updated:

லால்குடியில் ஒரு ஜவஹர்'லால்’!

லால்குடியில் ஒரு ஜவஹர்'லால்’!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லால்குடி மற்றும் சுற்று வட்டார ஏரியாவில் குழந்தைகளுக்கு ரொம்பவும் செல்லமான நபர்... இளங்கோவன். 20 வருடங்களாக லால்குடியில் 'லால் டி.வி.’ நடத்திவருகிறார். லோக்கல் சேனல் என்றாலே வெறும் சினிமா மற்றும் பாடல்கள் என்பதை மாற்றி... கல்வி நிகழ்ச்சி, க்விஸ் என்று சுவாரஸ்யம் காட்டுபவர். குழந்தைகளுக்கு என, 'வீடு தேடிக் கல்வி தீபம்’ என்ற பெயரில் கேபிள் வழி சிறப்புக் கல்வி நிகழ்ச்சியை வழங்க, அதற்கு ஏரியா மாணவர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ்.

லால்குடியில் ஒரு ஜவஹர்'லால்’!
##~##

'டிப்ளமோ தாண்டிப் பெரிய படிப்பு படிக்காததோட ஏக்கமோ என்னவோ... குழந்தைகளோட படிப்பு விஷயத்தில் புதுமையா ஏதாவது செய்யணும்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நகரத்துக் குழந்தைகள் எக்கச்சக்கமா செலவு பண்ணி டியூஷன் போறதும், கிராமத்துக் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யறதுக்குக்கூட உதவ ஆள் இல்லாமத் தவிக்கிறதும் தெரிய வந்தது. உடனே, எனக்குத் தெரிந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள்கிட்ட பேசினேன். குழந்தைகள் கல்விக்காகவே மத்திய - மாநில அரசுகள் நிறைய கல்வி சி.டி-க்களை வெளியிட்டிருக்கிறதுன்னு தெரியவந்துச்சு. இது தவிர, சிறப்பான ஆசிரியர்கள் சிலரைவைத்து கல்வி சி.டிக்களை உருவாக்கினோம்.

அந்த சி.டி-க்களை தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்ப ஆரம்பிச்சோம். அந்தச் சமயத்தில்தான் அதிகாரிங்க 'தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி’யை வீடு வீடாகக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதனால எங்க வேலை ஈஸியா முடிஞ்சிருச்சு. நாங்க ஒளிபரப்பின 'வீடு தேடி வரும் டியூஷன்!’ நிகழ்ச்சிக்கு, நல்ல வரவேற்பு. வெறுமனே போதனையா பாடங்களை தந்தா குழந்தைகளுக்கு வெறுப்பு வந்துடும். அதனால க்விஸ் நிகழ்ச்சிகளை அவங்களை வெச்சே தயாரிச்சோம். இப்போ லால்குடி அரிமா சங்கத்தின் சார்பா மாணவர்களுக்குப் புத்தகங்களையே பரிசாகத் தர்றாங்க. எங்க ஊர்ப் பிள்ளைங்க கல்வியில் சிறந்தவர்களாக விளங்க  என்னால் முடிந்த சின்ன உதவி இது!''- புன்னகை முத்துக்களை உதிர்க்கிறார் இளங்கோவன்.  

- எஸ்.சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு