புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சாலையில் செல்வோரை எல்லாம் ஒரு கணம் நின்று பார்த்துச் செல்லவைக்கிறது, அங்கு இருக்கும் பொம்மைச் சிற்பங்கள்.  

சிமென்ட்டிலே சிலை வண்ணம்!
##~##

வியாபாரத்தை ஆண் ஒருவர் கவனித்துக்கொண்டு இருக்க, துணிப்படுதாவையே வீடாகச் செய்து, அதனுள் ஒரு பெண் பொம்மையைச் செய்துகொண்டு இருந்தார். அவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.

''என்னோட பெயர் மோகன். நான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவன். எங்கள் குலத்தொழிலே பொம்மைகள் செய்வதுதான். வெள்ளை சிமென்ட்டால்தான் இந்தப் பொம்மைகளைச் செய்கிறோம். எல்லாமே அச்சுதான். வெள்ளை சிமென்ட் வாங்கி கரைச்சு அச்சுல ஊத்துவோம். அப்புறம் நல்லா வெயில்ல காயவைப்போம். நான்கு நாட்கள் காய்ஞ்சதும் பொம்மைகளுக்கு வாட்டர் கலர் அடிச்சு திரும்பவும் காயவைப்போம். அப்போ மழை பெய்ஞ்சாத்தான் சிரமம். லேசா தண்ணி பட்டாலும் நமுத்துப் போயிடும். அப்புறம் பெயின்ட் பண்ண முடியாது. சாதாரணமா ஒரு நாளைக்கு 20 பொம்மைகள் செய்வோம். ஒரு பொம்மையை 50 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரைக்கும் விற்போம். எனக்கு நான்கு குழந்தைகள். எல்லாருமே இந்தப் பொம்மைத் தொழிலை நம்பித்தான் இருக்கிறோம். ஒருநாளைக்கு அதிகபட்சம் 300 ரூபாய் வரை கிடைக்கும். எங்க குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப முடியவில்லை. வெளி மாநிலங்களுக்கு தொழிலுக்காகப் போகும் போது, குழந்தைகளைத் தனியாக விட்டுட்டுப் போக மனசு இல்லை. என்ன செய்ய... எல்லாமே கடவுள் கொடுத்த வரம்!''- விரக்தியாகச் சிரிக்கிறார் மோகன்.

- வீ.மாணிக்கவாசகம்
படங்கள் பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு