இனி எல்லாம் சுகமே!

புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை... வாக்கிங் செல்ல சாலையோர நடைபாதை, பூங்காவுக்கு வந்தவர்களை, 'நடந்தால் வியாதிகள் ஓடும்’, 'எடுப்பான தோற்றத்துக்கு மிடுக்கான நடை’ போன்ற வாசகங்கள் தாங்கிய அட்டைகளைப் பிடித்தபடி 'டாக்டர் விகடன்’ சார்பாகக் கல்லூரி மாணவர்கள் வரவேற்றனர். தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டு, புதிய பஸ்டாண்டு, ஜங்ஷன், கும்பகோணம் பஸ் நிலையம் எனப் பல இடங்களில் டாக்டர் விகடன் சார்பில் கொடுக்கப்பட்ட புது வருட வாழ்த்து அட்டைகள் மற்றும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (பி.எம்.ஐ.) கணக்கிடும் அட்டைகளை இன்முகத்தோடு வாங்கிக்கொண்டவர்கள், ''இதுல ஏன், டாக்டர் விகடனின் சந்தா விவரம்பற்றிக் குறிப்பிடவில்லை? சந்தா செலுத்த எந்த நம்பருக்கு போன் பண்ணணும்?'' என்று ஆர்வமாகக் கேள்வி எழுப்பினார்கள் (சந்தா விவரங்களுக்கு: 044- 28411679 ).

திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் ஷாப்பிங் செய்ய வந்திருந்த திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் புது வருட வாழ்த்து அட்டை, பி.எம்.ஐ. அட்டை வழங்கப்பட்டது. ''நாங்க ஏற்கெனவே டாக்டர் விகடன் புத்தகம் படிச்சுட்டோம். எங்களுக்குத் தெரியாத பல புதுத் தகவல்களை வாசிச்சு தெரிஞ்சுக்கிட்டோம். எங்களைப் போலவே டாக்டர் விகடனும் மக்களை வாக்கிங் போகச் சொல்லி அட்வைஸ் செய்வது ரொம்பச் சரியானது'' என்றனர் கோரஸாக.

அத்தனை பேரும் முடிவுசெய்து வாக்கிங் கிளம்பிவிட்டால், இனி எல்லாம் சுகம்தான்!

- அ.சாதிக்பாட்ஷா,
படம்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு