Published:Updated:

இழந்தது என்ன?

இழந்தது என்ன?

‘ஏதாவது பொருளைப் பறிகொடுத்துப் பரிதவித்த அனுபவம் இருக்கிறதா?’ என்று இவர்களிடம் கேட்டோம்.

ன்பில் பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவெறும்பூர்:

இழந்தது என்ன?
##~##

''பள்ளிக்கூடத்துல படிக்கும்போது பறிகொடுத்ததுதான் மறக்க முடியாதது. வீட்ல இருந்து ஃபீஸ் கட்டறதுக்காக 200  ரூபா வாங்கிட்டுப் போய் இருந்தேன். அப்ப அது பெரிய தொகை. பள்ளிக்கூடத்துக்கு பஸ்லதான் போவேன். பஸ்ஸைவிட்டு இறங்கிப் பள்ளிக்கூடம் போய்ப் பார்த்தா, பணம் அம்பேல். வீட்டுக்கு வந்தப்ப, அப்பாகிட்டே எப்படிச் சொல்றதுனு நடுங்கிக்கிட்டே வந்ததும், அப்புறம் அப்பாகிட்ட சொல்லி வாங்கின திட்டும் என்னைக்கும் மறக்க முடியாது!''

பானுமதி, வழக்கறிஞர், தென்னூர்: ''மிகப் பெரிய திருட்டு அது. ஒரு கேஸ் விஷயமா சென்னை போய் இருந்தேன். என்னோட கோட், கேஸ் ஃபைல், ரயில் டிக்கெட், லைசென்ஸ், பணம், கண்ணாடி எல்லாமே அந்த சூட்கேஸ்ல இருந்துச்சு. ரெஸ்ட் ரூம்ல வெச்சுட்டு, முகம் கழுவிட்டு வர்ற நேரத்துக்குள்ள காணோம். வக்கீல் டிரெஸ்கூட போடாமல் கோர்ட்டுக்குப் போய் ஜட்ஜ்கிட்ட நடந்ததைச் சொல்லி சமாளிச்சேன். பறிகொடுத்ததை மீட்க முடியலை. எல்லாத்தையும் புதுசா வாங்கி, சேர்க்க அந்தப் பாடுபட்டேன்!''

சாந்தி, வங்கி அதிகாரி, அண்ணா நகர்: ''என் மாமியார் வீட்டுக்கு பஸ்ல போனப்ப என் ஹேண்ட் பேக்கை எவனோ அடிச்சுட்டான். அதில் இருந்தது ஒரு ஓட்டை கால்குலேட்டேரும் என்னோட லாக்கர் சாவியும்தான். அடிச்சுட்டுப் போனவனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனா, லாக்கர் சாவி காணாமல்போனதில் எனக்கு ஏகப்பட்ட செலவு. பூட்டை உடைச்சு புது பூட்டு போட மும்பைல இருந்து ஆள் வரவழைச்சோம்!''

புண்ணியமூர்த்தி, மருத்துவர், மணச்சநல்லூர்: ''எங்க அக்காவோட கல்யாணத்துக்காக இலங்கையில ரயில்ல போனோம். எல்லாரும் தூங்குன நேரம் பாத்து எவனோ ஆக்ஸாபிளேடு போட்டு பூட்டை அறுத்து, பெட்டியைத் திறந்துட்டான். அதில் விலை மதிப்பு மிக்கதுனு சொல்ற மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லை. ஆனா, எங்க அக்காவோட கல்யாண டிரெஸ் அதில் இருந்துச்சு. அது தொலைஞ்சதுல அக்காவுக்கு ரொம்ப மனக்கஷ்டம். கல்யாணத்து அன்னைக்குப் பழைய உடையோட நின்னாங்க!''

ஆல்வின், தனியார் நிறுவன ஊழியர், மணப்பாறை: ''ஸ்கூல் முடிச்சுட்டு, காலேஜ்ல சேர்றதுக்கு இடையிலே கொஞ்ச நாள் கட்டட வேலைக்குப் போயிட்டு இருந்தேன். முதல் வாரம் வேலை முடிச்சுட்டு, ஒரு வாரச் சம்பளத்தை வாங்கிட்டு, வீட்டுக்குப் போய்ப் பார்த்தா பர்ஸைக் காணோம். துடிச்சுப் போயிட்டேன். ஒரு வார உழைப்பு... அதோட பர்ஸ் பயன்படுத்தறதையே விட்டுட்டேன்!''

ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக் , ர.அருண்பாண்டியன்

அடுத்த கட்டுரைக்கு