Published:Updated:

அண்ணாவின் மாமியார் வீடு!

அண்ணாவின் மாமியார் வீடு!

அண்ணாவின் மாமியார் வீடு!

அண்ணாவின் மாமியார் வீடு!

Published:Updated:
அண்ணாவின் மாமியார் வீடு!

''மணலால் ஆன பாறைகள் நிறைந்த பகுதி இது. மணற்பாறை என்பதுதான் காலப்போக்கில் மணப் பாறை என்றாகிவிட்டது!'' - தன் சொந்த ஊரான மணப்பாறை நினைவு களில் கரையத் தொடங்கினார் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா.

அண்ணாவின் மாமியார் வீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''தமிழகத்தின் மையப் பகுதி எங் கள் மணப்பாறை. பண்டைக் காலத் தில் சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியாக இது இருந்து இருக்கிறது. இப்போதைய அமைப்பின்படியும் அந்தப் பெருமை உண்டு. இங்கே இருக்கும் ஓர் எல்லைக் கல்லின் ஒருபுறம் கன்னியாகுமரி 222 மைல்கள் என்றும் மறுபுறம் சென்னை 222 மைல்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வானம் பார்த்த பூமி இது. பருத்தி, மிளகாய், கடலை... இவைதான் நீண்ட காலமாக எங்கள் வாழ்வாதாரமாக இருந்தன. நீராதாரம் குறைவு என்பதால், எங்கள் மக்களி டம் இருந்து வறுமை அழிக்க முடியாததாக இருந்தது. ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் மாற்றி அமைக்கும் விஷயங்கள் இருக்கும் அல்லவா? அப்படி எங்கள் ஊரின் வரலாற்றைப் புரட்டிப்போட்டது தியாகேசர் நூற்பாலை. புதுக்கோட்டை சமஸ்தான ராஜா தன் ஊரில் உருவாக்க ஆசைப்பட்ட ஆலை இது. ஆனால், அங்கே ரயில் பாதை அமைந்ததால், அந்த ஆலையை அவருடைய அமைச்சர் கலிஃபுல்லா இங்கே கொண்டுவந்தார். வறுமையில் உழன்றுவந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றியது அந்த ஆலைதான். செவ்வாலூரின் கீழ் இருந்த என் ஊர் தனித்து நிமிர்ந்தது அதற்குப் பின்தான்.

தமிழ் உணர்வும் இன உணர்வும் ததும்பும் ஊர் எங்கள் மணப்பாறை. எங்கள் ஊர் மக்களிடம் தமிழை வளர்த்ததில் மணவை தமிழ் மன்றத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்கு கால் பதிக்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்போது எல்லாம் விழா நாட்கள் என்றால், அடிக்கடி அண்ணாவின் குரல் இங்கு ஒலிக்கும். அடிக்கடி வருவதால் அண்ணாவே, ''மணப்பாறை எனக்கு மாமியார்  வீடு!'' என்று சொல்வார்.

அண்ணாவின் மாமியார் வீடு!

மணப்பாறையின் மிகப் பெரிய அடையாளங்கள் மாடுகளும் முறுக்கும்தான். எங்கள் ஊர் மாடுகளின் வலுவும் எங்கள் ஊர் முறுக்குகளின் சுவையும் வேறு எதனோடும் ஒப்பிட முடியாதது. மாடுகளைப் பூட்டிக்கொண்டு பாயும் வில் வண்டியை உலகத்துக்குத் தந்தவர்களும் எங்கள் ஊரார்தான். எங்கள் ஊர் மாட்டுச் சந்தை அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. பொன்னணியாறும் மாமுண்டியாறும் எங்கள் ஊரின் நீராதாரங்கள். மாடுகளின் சிறப்புக்கும் முறுக்குகளின் சிறப்புக்கும் இந்த ஆறுகளின் நீர்வாகுதான் முக்கியக் காரணம். ஒருவகையான  உப்பு ருசி இந்தத் தண்ணீரில் கலந்து இருக்கும்!

அண்ணாவின் மாமியார் வீடு!

இந்த ஊரில் வாழ்ந்த இரண்டு பெருமகனாரின் கதையைப் பதிவு செய்யாவிட்டால் மணவையின்  கதை முடிவுறாது. மணவை தமிழ்ச் சங்கத்தை எடுத்து நடத்தியவர் மணவைப் பெரியார் என அறியப்பட்ட காசிநாதன். அவருக்கு மகன்போல விளங்கியவர், அவருடைய தோழர் பழனிச்சாமி. திடீர் என உடல் நலக் குறைவால் பழனிச்சாமி மரணம் அடைய, அந்த அதிர்ச்சியிலேயே காசி நாதன் அய்யாவும் அன்றே உயிர் நீத்தார். இருவ ரும் ஒரே பாடையில்  கொண்டுசெல்லப்பட்ட அந்த நாள் எங்கள் ஊருக்கே துக்க நாள்.

சிறந்த தேசப் பக்தரான பொன்னையா பாரதி எங்கள் ஊர்க்காரர். அவருடைய அழைப்பை ஏற்று காந்தியடிகளே 1946-ல் எங்கள் ஊருக்குப் பேச வந்தார். அழகர்சாமி,பெரி யசாமி - துரைராஜ் சகோதரர்கள் சுயமரியாதை இயக்கத் தளகர்த்தர்களாகத் திகழ்ந்தவர்கள். 1938-ல் பெரியார் அமைத்த மொழிப் போர் படையை மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரோடு இணைந்து முன்னெடுத்த திருமலைசாமி எங்கள் ஊர்க்காரர்!

நீண்ட காலமாகவே எங்கள் ஊரில் பெரும் பாலான திருமணங்கள் புரோகிதர்களால்அல்லா மல் ஊர்த் தலைவர்களால் நடத்திவைக்கப்படும் மரபு உண்டு. ஊருக்கும் ஊர்ப் பெரியவர்களுக்கும் இந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தரும் மதிப்புக்கு ஓர் அடையாளம் இது!''

அண்ணாவின் மாமியார் வீடு!
அண்ணாவின் மாமியார் வீடு!

பூ.கொ.சரவணன்
படங்கள்: ந.வசந்தகுமார், ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism