Published:Updated:

மெமரி சாம்பியன்ஸ்!

மெமரி சாம்பியன்ஸ்!

மெமரி சாம்பியன்ஸ்!

மெமரி சாம்பியன்ஸ்!

Published:Updated:

கான்பூர் ஐ.ஐ.டி. வளாகம்.ஆயிரக்கணக்கானோர் கண் இமைக்க மறந்து அந்தச் சிறுவன் கண்ணைக் கட்டிக்கொண்டு நிகழ்த் தும் சாகசத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கி றார்கள். பம்பரமாகச் சுழலும் அவனுடைய விரல்களில் ரூபிக் க்யூப்கள் ஓர் ஒழுங்குக்கு வருகின்றன. பலத்த கைத் தட்டல்களுக்கு  நடுவே நிகழ்ச்சியின் முடிவில் சிறுவன் பெர்னெட் ஒர்லாண்டோ பழைய உலகச் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கிறான். முறியடிக்கப்பட்ட முந்தைய சாதனைக்குச் சொந்தக்காரரும் அங்கேதான் இருக்கிறார். அவரும் கண்கள் பனிக்க மகிழ்ச்சி அடைகிறார். அவர் வேறு யாருமல்ல. ஜான்லூயிஸ்; சிறுவன் ஒர்லாண்டோவின் தந்தை!

மெமரி சாம்பியன்ஸ்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சியைச் சேர்ந்த ஜான் லூயிஸ் - பெர்னெட் ஒர்லாண்டோ, தந்தை-மகன்  இணையர், சர்வதேச மெமரி சாம்பியன்ஷிப் போட்டிகள் உலகின் எந்த மூலையில் நடந்தா லும் தவறாமல் பங்கேற்று சொல்லி அடிக்கும் கில்லிகள்.

மெமரி சாம்பியன்ஷிப் மட்டுமல்ல; நினைவுத் திறனை உரசிப் பார்க்கும் ரூபிக் க்யூப் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்த ஜோடிதான் டாப்.

இதில் அப்பா ஜான் லூயிஸ் சர்வதேச நினைவுத் திறன் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஒரே இந்தியர். 2003-ல் அந்தப் பட்டத்தை ஜான் லூயிஸ் வென்றபோது, அதுவரை உலகில் எட்டு பேர் மட்டுமே அந்தப் பெருமைக்குத் தகுதி பெற்று இருந்தார்கள். சர்வதேச நினைவுத் திறன் சாம்பியன்ஷிப்பை நான்கு முறையும் மென்டல் கால்குலேஷன் வேர்ல்டு சாம்பியன்ஷிப்பை இரு முறையும் ரூபிக் க்யூப் சர்வதேச சாம்பியன்ஷிப்பை ஐந்து முறையும் வென்று இருக்கிறார் மெமரி கிராண்ட் மாஸ்டர் ஜான் லூயிஸ்.

'ரொம்ப சுமாரான மாணவனாக, ஒரு விவசாயத் தந்தைக்கு மகனாக வளர்ந்தவன் நான். ஆர்வமும் பயிற்சியும் நம் பாரம்பரியத்தின் அடிப்படையில் இருந்து நான் கண்டு எடுத்த உத்திகளும்தான் இந்த ஞாபகத் திறனின் ரகசியம். பாடங்களைப் படிப்பதிலும் விஷயங் களை நினைவு வைத்துக்கொள்வதிலும் 'காட்சிப்படுத்தல்’ என்ற எளிய நுணுக்கத்தை மட்டுமே பயன்படுத்தி என்னை மெருகேற்றிக்கொண்டு இருக்கிறேன்.

மெமரி சாம்பியன்ஸ்!

அடிப்படையில் நான் ஒரு ஆசிரியர். 17 ஆண்டுகள் முதுநிலை வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றினேன். விளையாட்டுடன் கூடிய நினைவுத் திறன் பயிற்சியின் மூலம்  படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களைகூட என்னால் வெற்றி பெறவைக்க முடிந்த்து. 40 சதவிகிதம் என்ற அளவில்

மெமரி சாம்பியன்ஸ்!

இருந்த பள்ளித் தேர்ச்சியை 100 சதவிகிதம் ஆக்கியபோது, சக ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் எனது நினைவுத் திறனைப் பயன்படுத்தி, வேறு வழிகளில் சாதிக்க ஊக்குவித் தனர். ஆசிய அளவிலான நினைவுத் திறன் போட்டி சென்னையில் நடந்தபோது நண்பர் களுக்காக அதில் விளையாட்டாகக் கலந்து கொண்டபோது, அதில் எனக்கு முதல் பரிசுக் கிடைத்தது. அதேபோல, பள்ளி நிர்வாகமே விமான டிக்கெட் எடுத்து கொடுத்து சர்வதேசப் போட்டியில் பங்குகொள்ள லண்டன் அனுப் பியது' என்கிறார் ஜான் லூயிஸ்.

தாறுமாறாக வரிசையிலிருக்கும் ஒரு சீட்டுக்கட்டை சிறிது நேரம் கவனித்துவிட்டு இரண்டு நிமிடங்களில் வரிசைக் கிரமம் மாறாது சொல்ல வேண்டும்.  ஜான் லூயிஸ் 2 நிமிடங்களுக்குப் பதில் 96 வினாடிகளில் அதைச் சொல்லிப் புது சாதனை படைத்தார். இப்படி சர்வதேச மெமரி கிராண்ட் மாஸ்டரான ஜான் ஒருகட்டத்தில் போட்டியில் கலந்துகொள்வதற்கு பதிலாகப் பயிற்சியாளராக மாற வேண்டியிருந்தது. காரணம், புலியைவிட அதன் குட்டியின் பாய்ச்சல் அதிகமானதுதான். 'வீட்டில் போரடிக்கிறது என்று என்னோடு போட்டி நடக்கும் இடங் களுக்கு வழக்கமாக வருவான் ஓர்லண்டோ. ஆனால், அவனின் ரூபிக் க்யூபை கையாளும் வேகத்தை ஒரு முறை பார்த்து வியந்துபோனேன். அதுவரையிலான எனது சாதனைகளை மகனே முறியடிக்கத் தொடங்கியதும் கௌரவ பெருமிதத்தோடு பயிற்சியாளராக நிறுத்திக்கொண்டேன்' என்கிறார். பக்கத்தில் இருக்கும் ஓர்லண்டோ அப்பாவின் வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான் ஒரு சின்னப் புன்னகையோடு!

மெமரி சாம்பியன்ஸ்!
மெமரி சாம்பியன்ஸ்!

- எஸ்.சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism