Published:Updated:

காளையை அடக்காத காளைகள்!

காளையை அடக்காத காளைகள்!

காளையை அடக்காத காளைகள்!

காளையை அடக்காத காளைகள்!

Published:Updated:

துரைக்கு அலங்காநல்லூர் என்றால், திருச்சிக்கு சூரியூர். இந்த வருஷமும் விசேஷங்களுக்குப் பஞ்சம் இல்லை. முக்கியமாக இந்த ஆண்டு முதல் முறையாக உயிர் பலியோ, உடல் உறுப்பு சேதாரங்களோ இல்லாமல் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்ததில் சூரியூர்க்காரர்களுக்கு ஏக சந்தோஷம். சூரியூர் ஜல்லிக்கட்டின் சூடான சில துளிகள் இங்கே...

காளையை அடக்காத காளைகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 231 காளைகளும் 101 மாடுபிடி வீரர்களும் ஆல்கஹால் சோதனைக்குப் பிறகே களம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். மது அருந்தி இருந்த மாடுபிடி வீரர்களுக்கும் மது 'ஊற்றிவிடப்பட்டு இருந்த’ மாடுகளுக்கும்  தயவு தாட்சண்யம் இன்றி அனுமதி மறுக்கப்பட்டது.

மாடுபிடி வீரர்கள் 101 பேர் என்று பெயர்தான். அவர்களில் 10 பேர் மட்டுமே ஆரம்பத்தில் மாடுகளை அடக்குவதில் ஆர்வம் காட்டினர்.  காளைகள் பின்னாலேயே ஓடிக்கொண்டு இருந்த மற்ற வீரர்களைப் பார்த்து, 'இலவச டிஷர்ட் வாங்குறதுக்காக வந்தீங்களா?’னு பார்வையாளர்கள் கிண்டல் அடிக்க அதன் பிறகே சில வீரர்கள் ரோஷம் வந்து மாடுகளை அடக்க முயற்சித்தனர்.  

கலெக்டர், டி.ஐ.ஜி. இவர்களுடன் திருச்சி எம்.பி-யும் பார்வையாளராகக் கலந்து கொண்டார். ஜல்லிக்கட்டு உற்சாகத்தைக் கூட்டும் விதமாகக் காளையை அடக்கும்காளையர் களுக்குத் தலா

காளையை அடக்காத காளைகள்!

500  தனது சொந்தப் பணத்தில் இருந்து பரிசாக அளிப்பதாக திடீரென அறிவித் தார் எம்.பி. ஆனாலும், ஒரு வீரர்கூட அவரிடம் இருந்து கரன்ஸியைப் பரிசாகப் பெறவில்லை.

வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில காளைகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காளையை அடக்குபவருக்குத் தனிப்பட்ட முறையில்

காளையை அடக்காத காளைகள்!

3,000 பரிசுத் தொகை தருவதாக அறிவித்தனர். அந்தத் தொகையையும் ஒருவர்கூட பெறவில்லை.

காளையை அடக்காத காளைகள்!

ஜல்லிக்கட்டு முழுவதையும் பிராணிகள் நலச் சங்கத்தினர் வீடியோவில் பதிவுசெய்தனர். இதனால் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் உயர் நீதிமன்றத்தின் கட்டளைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் அதீத அக்கறை காட்டினர்.

மேட்டுக்குடி என்கிற ஊரில் இருந்து வந்து இருந்த ஒரு காளை மட்டும், மைதானத்தில் 20 நிமிடம் நின்று நிதானித்து ஜல்லிக்கட்டு வீரர்களுடன் 'கபடி’ விளையாடியது. அந்த மாட்டின் சீறலைக் கண்டு வீரர்கள் ஒருவர்கூட அருகில் நெருங்கவில்லை. அந்த மாடு வெளியேறினால்தான் அடுத்த மாடு களத்துக்கு வர முடியும் என்பதால் மாட்டின் உரிமையாளரை அழைத்து அந்தக் காளையை அழைத்துச் செல்லும்படி விழா ஏற் பாட்டாளர்கள் கட்டளையிட்டனர். உரிமையாளர் வந்து கூப்பிட்டாலும் அந்தச் சீறல் காளை கட்டுப்படாமல் நீண்ட நேரம் போக்கு காட்டியது.

காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசு கொடுப்பதற்காகப் பெரிய அண்டாக்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. ஒரு வீரர்கூட காளையை அடக்காததால், அண்டாக்கள் போணி ஆகவில்லை. மாடுகளை அடக்க முயன்றவர்கள் பேசின்களோடு கிளம்பினர்.

காளையை அடக்காத காளைகள்!

''அண்டா, குண்டா, தங்கக் காசு, பணம் இதுக்குப் பதிலா வேற எதையாவது தந்தா மாட்டை அடக்குவாங்களோ'' என்று கமென்ட் அடித்த ஒருவருக்கு, ''சரக்கைக்  கொடுங்க'' என்று ரெகமண்ட் செய்தார் ஒரு பெரியவர்.

காளையை அடக்காத காளைகள்!

5 லட்ச டெபாஸிட், பார்வையாளர் கேலரி அமைத்தல், தடுப்பு வேலிகள் போடுதல், மாடு பிடிவீரர்களுக்கு உடைகள் என லட்சக் கணக்கில் பணம் செலவு செய்தும் இந்தநிகழ்ச்சி யின் உற்சாகம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு 'காணாமல் போனாலும் ஆச்சர்யம் இல்லை’ என்றனர் ஜல்லிக்கட்டு ரசிகர்கள்!  

-அ.சாதிக்பாட்சா
படங்கள்: 'பிரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism