Published:Updated:

என் ஊர் !

தண்ணீர் தெரியாத தடாகம் !சி.சுரேஷ்,படங்கள்: கே.குணசீலன்

என் ஊர் !

தண்ணீர் தெரியாத தடாகம் !சி.சுரேஷ்,படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:

வடக்கூர்

##~##

''கோனூர் நாடு என அழைக்கப்படும் 18 கிராமங்களில் முதன்மையானது எங்கள் வடக்கூர்'' என்று தன் ஊரின் பெருமையைச் சொல்லத் தொடங்கினார் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரான துரை. பாலகிருஷ்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஊரை நான்கு திசைகளிலும் பிரித்து நீளும் நாலு ரோடு. அதன் பக்கத்திலேயே இரண்டு ஆல மரங்கள். இதுதான் எங்கள் ஊரின் மத்தியப் பகுதி. விழாக் களுக்காகவும் வசதிகளுக்காகவும் ஊர்க்காரர்களை ஆறு கரைக்காரர்களாகப் பிரித்து இருக்கிறார்கள். கரைக்கு ஒருவர்  நாட்டாமை. அவர்களுக்கு எல்லாம் சேர்த்து தலைமை நாட்டாமை ஒருவர். இப்படி எங்கள் ஊருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு.

தாமரை பூத்த தடாகமான எங்க ஊர் பெரியகுளத்தில் தண்ணீரே தெரியாத அளவுக்குத்   தாமரைப் பூ பூத்து இருக்கும். சுற்று வட்டார வியாபாரிகள் பூ, இலை பறிக்க இங்கே வருவார்கள். டயர், டியூப்களில் காற்று நிரப்பிக்கொண்டு தண்ணீரில் மிதந்து சென்று பூ, இலை பறிப்பார்கள்.

முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கும் எங்கள் ஊரில், பொங்கல்தான் எங்களுடைய மிக முக்கியமான கொண்டாட்டம். ஊரே ஒரே  நேரத்தில் பொங்கல் வைக்கும். பொங்கல் வைக்கப்போகிறார்கள் என்று தெரிவிக்க நீள பைப் குழாய்களில் வெடி மருந்தை நிரப்பி வெடிக்கச் செய்வார்கள். அவரவர் வீட்டு வாசலில் பொங்கல் பானைகளும் படையலும் அவ்வளவு அழகாக இருக்கும். மாட்டுப் பொங்கலும் விழாக் கோலம் பூண்டு இருக்கும். கரைக்காரர்கள் மாடுகளை ஒரு தற்காலிக அடைப்புக்குள்வைத்து பின் தெருவில் அழைத்துவருவோம்.

என் ஊர் !

சுற்றி உள்ள பதினெட்டு கிராமங்களுக்கும்

கோட்டைத் தெரு அய்யனார் கோயில் திருவிழா முக்கியமானது. பங்குனி மாதம் நடக்கும். குறைந்தது 2 ஆயிரம் ஆடுகள் வெட்டுவோம். தலைப் பகுதியை ஒரு  பிரிவினருக்கும் தொடைப் பகுதியை ஒரு பிரிவினருக்கும் கொடுக்க வேண்டும். அன்றைக்கு எங்கள் ஊரே கறிக் குழம்பு வாசத்தில் மணந்து மிதக்கும்.

தஞ்சாவூரில்  இருந்து ராமேஸ்வரம் செல்ல எங்கள் ஊர் வழிதான்  சுலபமான குறுக்கு வழி. அப் போது எல்லாம் மாட்டு வண்டிகளில்தானே யாத்திரை போவார்கள், வடக்கூர்  வந்ததும் சாவடியில் சின்ன இளைப்பாறுதல் நடக்கும்.

என் ஊர் !

கசவளநாடு கோயினூர் பள்ளிக்கூடம் எங்களுக்கு எல்லாம் கல்வி தந்த கூடம். செல்லம்பட்டி  'துரை திரையரங்கம்’  எங்கள் ஊரின் சந்தோஷ அரங்கம். அப்போது எல்லாம் படம் போடுவதற்கு முன்னால் நாகஸ்வர ஓசை ஒலிக்கும். அதுதான் படம் போடப் போகிறார்கள் என்பதைச் சுற்றுவட்டார மக்களுக்குத் தெரிவிக்கும்.

இப்போது  அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப் பில் இருக்கும்  துரை.கோவிந்தராஜன், எங்கள் ஊரில் பலருக்கு அரசியல் முன்னோடி. ஆரம்பக் காலத்தில் தி.மு.க-வில் வட்டச் செயலாளராக இருந்தபோது அவருடன் நானும் அரசியல் கூட்டங்களுக்குச் செல்வேன். அறிஞர் அண்ணா ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு உள்ளே வந்து  பேசி இருக்கிறார். எம்.ஜி.ஆர். பிரிந்தபோது துரை.கோவிந்தராஜன்  அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார். நாங்கள் போகவில்லை என்றா லும் எங்கள் முன்னோடியை மறக்கவில்லை.

என் ஊர் !

ஆரம்பத்தில் டி.வி.எஸ். கம்பெனி பஸ் ஒன்று மட்டும் இவ்வழியே சென்று வரும். புதுக்கோட்டைக்கும் சில்லத்தூருக்கும் போய் வரும்  பஸ்ஸுக்காக மணிக்கணக்காகக் காத்து இருப்போம். கடகட சத்தமும், மக்கள் கூட்டமும் மறக்கவே முடியாது. இன்றைக்கு அப்படி இல்லை. ஊர் நிறைய வளர்ந்து இருக்கிறது. நாங்களும்தான்!''