Election bannerElection banner
Published:Updated:

அமுதுக்கும் தமிழென்று பேர் !

- எம்.ராமசாமி

##~##

ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வை.ராஜீயின் அடையாளம் வித்தி யாசமானது. காலையில் தலை மையாசிரியர், மாலையில் தமிழ் அர்ச்சகர். திருமணங்களோ, குட முழுக்கோ நடந்தால், அதில் தமிழ் புரோகிதர். இதில் குறிப்பிட வேண் டிய விஷயம் என்னவென்றால்,அர்ச்ச னைக்கோ, இவர் நடத்திவைக்கும் சுப காரியங்களுக்கோ ஒரு ரூபாய்கூட இவர் வாங்குவது இல்லை என்பதுதான்!

''சின்னவளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். தமிழர்களாகிய நாம் அந்நிய மொழி மோகத்தில் ஆட்பட்டுக்கிடக்கிறோம். நம் பெருமைக்குரிய மொழி வீழ்ந்துகிடக்கு. இந்த நிலை மாறணும்னா நாம் ஒவ்வொருத்தரும் நம்மால் ஆன ஏதோ ஒரு பணியை மொழிக்குச் செய்யணும். என்னோட பங்கு இது.

அமுதுக்கும் தமிழென்று பேர் !

என்னுடைய குருநாதர் கொ.மு.சிங்காரவேலன் தலைமையில் சோழ மண்டலத்திலேயே முதல் முறையா 1990-ல் ஜெயங்கொண்டத்தில் உள்ள காட்டுப் பழனியாண்டவர் கோயி லில் தமிழ் முறைப்படி தமிழில் குட முழுக்குச் செய்தோம். அங்கேயே மாலை நேரங்களில் தமிழ்ல அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சேன். அதில் தொடங்கி இது வரைக்கும் நூற்றுக்கணக்கான குடமுழுக்கு கள், திருமணங்கள் செஞ்சு வெச்சாச்சு. திருமணங்கள்லேயும் குடமுழுக்குகள் லேயும் புரோகிதர்கள் உச்சரிக்கும் சம்ஸ்கிருத மந்திரங்கள் எத்தனை பேருக் குப் புரியும்?  ஆனா, தமிழில் சொல்லும் போது ஆர்வமா கேட்குறாங்க. தேவார மும், திருவாசகமும் அவங்களைப் போய்ச் சேருது. மொழி மேல் அவங்களுக்கே ஓர் ஈடுபாடு வருது!'' என்று சொல்லும் இவருடைய பணியைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் 'சித்தாந்த  ரத்தினம்’ என்ற பட்டத்தையும் குமாரதேவர் திருமடம் 'திருமுறைச்செல்வர்’ பட்டமும் வழங்கி இருக்கின்றன!

அமுதுக்கும் தமிழென்று பேர் !
அமுதுக்கும் தமிழென்று பேர் !
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு