Published:Updated:

"500 குடும்பங்களுக்கு நான் தாய் மாமன்!"

"500 குடும்பங்களுக்கு நான் தாய் மாமன்!"

''காதலிக்கிறது பெரிய விஷயம் இல்லீங்க... அந்தக் காதல் கைகூடறப்பதான் அதுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்குது. காதலிச்ச பொண்ணையோ, பையனையோ கல்யாணம் பண்றதுக்குக் காதல் ஜோடிகள் படற பாடு இருக்கே... அப்பப்பா, அதைக் கிட்டே இருந்துபார்த்தாத்தான் தெரியும்'' என்கிறார் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன். திருத்துறைப்பூண்டியில் வழக்கறிஞராக இருக்கும் செல்லப்பாண்டியன், இதுவரை 500 காதல் ஜோடிகளுக்கு மேல் திருமணம் செய்துவைத்திருக்கிறார். தலைவன், இந்த வட்டாரத்தின் காதல் காவலன்!  

"500 குடும்பங்களுக்கு நான் தாய் மாமன்!"
##~##

''கல்லூரியில் என்னுடைய ஜூனியர் மாணவர் அர்ச்சுனன் ஒரு பெண்ணைக்காதலித்தான். நண்பர்கள் உதவியுடன் வக்கில் பொற்சொழியனை வைத்து அர்ச்சுனனுக்கு திருமணம் செய்து வைத்தேன். நான் செய்து வைத்த முதல் காதல் திருமணம் இதுதான். அதன் பிறகு இதுமாதிரி காதல் திருமணங்களை நடத்திவைப்பது சகஜமாகிவிட்டது. ஒருகட்டத்தில் இதனால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க நமக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டுமே என்று, டிகிரி முடித்து 10 வருடங்கள் கழிந்த பின்பு, விடாப்பிடியாக பி.எல். படித்தேன். பின்னர் தைரியமாக நானே முன்னின்று திருமணங்களை நடத்திவைக்கத் தொடங்கினேன்.

இப்போது வீட்டைவிட்டு வெளியேறும் காதல் ஜோடிகள் பாதுகாப்புத் தேடி காவல் நிலையங்களுக்கும், கமிஷனர் அலுவலகத்துக்கும் படையெடுக்கிறார்கள். அங்கும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பது கேள்விக்குறி தான். இதனால்தான் நான் களமிறங்கினேன். காதலர்களுக்குத்  திருமணம் செய்துவைத்து, அவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும் கொடுத்துவருகிறேன்.

முதலில் காதலர்களிடம் பேசி, அவர்களுடைய மன நிலையைத் தெரிந்துகொள்வேன். அவர்கள் எந்த அள வுக்குக் காதலில் உறுதியாக இருக்கிறார்கள் என்று அறிந்தபின்னரே களத்தில் இறங்குவேன். பெரும்பா லும் இரு தரப்புப் பெரிய வர்களிடமும் பேசி, சுமுக மான சூழலில் திருமணம் நடத்திவைக்கவே விரும்பு கிறேன். சில நேரங்களில் பெற்றோர் தகராறில் இறங்கும்போது, காதலர் கள் விருப்பப்படி சேர்த்து வைத்துவிடுவேன். அந்தச் சந்தர்ப்பங்களில்

பெற்றோர் மனம் உடைந்து திரும்பும்போது, மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும்.  ஆனாலும், காதலர்களைச் சேர்த்துவைப்பதன் மூலம் வரதட்சணை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சமுதாய மாற்றம் இவை அனைத்தும் சாத்தியம் என்பதால், வேறுவழி இல்லை. நிறைய பெற்றோர்கள் அந்த நேரத்தில் கோபத்தில் கடுமையாகத் திட்டத்தான் செய்வாகள். சிலர் சாபம் கூட விடுவார்கள். அடுத்த ஒரு வருடத்தில் கைக்குழந்தையோடு போய் நிற்கும்போது, அதே பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.  

"500 குடும்பங்களுக்கு நான் தாய் மாமன்!"

நான் திருமணம் செய்துவைக்கும் காதலர் கள் எல்லோருமே எனக்குச் சொந்தங்களாகி விட்டார்கள். அந்த காதல் குடும்பங்களுக்கு நான்தான் தாய்மாமன். பல குழந்தைகளுக்கு என் மடியில் உட்காரவைத்து காது குத்தி இருக்கிறார்கள். ஒருமுறை திருவாரூரில் மருத்துவமனையில் இருந்து அதிகாலை போன். எடுத்தால், நான் சேர்த்துவைத்த ஒரு ஜோடிக்குக் குழந்தை பிறந்ததும்,எனக்குத் தான் முதலில் சொல்கிறார்களாம். திருமணத் துக்குப் பின் அவர்களுக்குள் சில சமயங் களில் ஏற்படும் மனஸ்தாபங்களையும் கருத்து வேறுபாடுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கின்றனர். நல்ல நண்பனாக ஆலோசனைகள் வழங்குகிறேன்.

திருமணத்துக்குப் பிறகு அன்றாட வாழ்க்கையில் காதல் தம்பதியர் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். இதையும் மீறி அவர்கள் வெற்றிகரமாகக் குடும்பம் நடத்துவதில்தான் இருக்கிறது காதலின் வெற்றி!'' என்கிறார் இந்தத் 'தாய்மாமன்’

நிஜம்தானே!

"500 குடும்பங்களுக்கு நான் தாய் மாமன்!"
"500 குடும்பங்களுக்கு நான் தாய் மாமன்!"

- நீரை.மகேந்திரன்
படம்: செ.சிவபாலன்

அடுத்த கட்டுரைக்கு