Published:Updated:

தஞ்சாவூரான்

தஞ்சாவூரான்

தஞ்சாவூரான்

தஞ்சாவூரான்

Published:Updated:
தஞ்சாவூரான்
##~##

பரவாக்கோட்டை காமன் பண்டிகை!

சாயந்திரமே, தெருவுல இருக்கிற 'தொழில் அதிபர்கள்’ (பெட்டிக்கடைக்காரர்கள், என்று பொருள் கொள்க!) மற்றும் 'பெருந்தனக்காரர்கள்’ அளிக்கும் அஞ்சு பத்தை வெச்சுக்கிட்டு, பொட்டுக் கடலையும் நாட்டுச் சக்கரையும் வாங்கிவெச்சு இருப்பாங்க. ஒரு 7, 8 மணி ஆனவுடனே மெயின் கூத்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு 'பாட்டுக்காரர்’ இருப்பார். அவருக்கு 'ஆனத’ பாத்துக்கிட்டா (செல பேரு வெத்தலை பாக்கு, செல பேரு 'தண்ணி மிண்ணி’ கேட்பாங்க!), அவரு ஸ்பாட்டுக்கு வந்துடுவாரு.

பாட்டுக்காரர் சிக்னல் கொடுத்த உடனே, ரெண்டு விடலப் பசங்களை செலெக்ட் பண்ணுவாங்க. ஒருத்தன் ரதி, இன்னொருத்தன் 'மம்முதன்’ (மன்மதன்). ரெண்டு பேரும் ரெண்டு குழுவுக்குப் பிரதிநிதி.

தஞ்சாவூரான்

ரெண்டு குழுவும் எதிரும் புதிருமா நிக்கும். பாட்டுக்காரர் நடுவாந்திரமா நிப்பார். ரெண்டு குழுவுல இருந்தும் ஒரு 'பலசாலி’ கையில் நீளத் துண்டோட இருப்பாரு. துண்டை அந்தந்த எளவட்டத்தோட இடுப்புல சுத்தி ரெண்டு முனையையும் பலசாலி கையிலவெச்சு இருப்பாரு. பாட்டுக்காரரு நல்லாக் குரல் எடுத்துப் பாடும்போது, மம்முதன் அப்பிடியே ரதி பக்கம் வருவாரு. உடனே பலசாலி, துண்டை ஒரு இழு இழுத்து மம்முதனைக் 'கட்டுப் படுத்துவாரு’! அதே மாதிரி, ரதி பக்கமும் நடக்கும்.

பாட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு (இல்ல, பாட்டுக்காரருக்கு 'சரக்கு’ தீந்த பிறகு!), போட்டுவெச்ச பந்தலப் பிரிச்சுப்போடுவாங்க. எல்லாத்தையும் கூட்டிக் குமிச்சுத் தீ வெச்சுருவாங்க. அப்படியே சைடுல, பொட்டுக்கடலை விநியோகம் நடக்கும். தீ அணைஞ்ச உடனே எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்க!

கிராமத்து டிக்ஷ்னரி!

தஞ்சாவூரான்

வெள்ளனமே - காலையில் சீக்கிரமா
எம்ப்ளது - எண்பது
ங்கொப்புரான - உன் அப்பன் மேல் ஆணை
வெரசா - விரைவாக
மருவதடி - மறுபடி
வம்பட்டி - மண்வெட்டி
கலாணி - களவாணி
ரவைக்கு - ராத்திரிக்கு
வெஞ்சனம் - சாப்பாட்டுக்கு 'தொட்டுக்’கொள்ள

போதைக்குக் காரணம் பூச்சிதானோ..?

80-களில் தமிழகத்தில் கள்ளுக் கடைகளுக்கு அனுமதி அளித்து இருந்த காலம். என் அப்பாவும் இன்னோர் உறவின ரும் சேர்ந்து கள்ளுக் கடைவைத்து இருந்தார்கள்.

தஞ்சாவூரான்

நாடாவி (மரம் ஏறுபவர்), மரங்களைத் தேர்வு பண்ணி 'பாளை’ சீவிவிட்டுக் கட்டிவிடுவார். சில நாட்கள் கழித்துதான் பாளை நுனி சீவி அதில் பானையைக் கட்டுவார். அடுத்தநாள் ஒரு சுரைக் குடுவையுடன் மேலே ஏறி, ஒவ்வொரு பானையி லும் வடிந்து இருக்கும் கள்ளைக் குடுவையில் சேகரித்துக் கொண்டு இறங்குவார். குடுவையில் பார்த்தால், ஊர்ப்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும். (ஒரு வேளை போதைக்கு இது தான் காரணமோ?). பூச்சி, தும்பட்டைகள் வடிகட்டப்பட்டு இன்னொரு பெரிய பானையில் 'கள்’ சேகரிக்கப்படும். இப்ப டியே ஒரு 40, 50 மரங்கள் ஏறி, 'கள்’ இறக்குவார். நமக்கு ஒரு மாமரம்கூட ஒழுங்கா ஏறத் தெரியாது! பானையின் உள்புறத்தில் சுண்ணாம்புத் தடவினால் அதில் கிடைப்பது பதநீர். அவ்வளவு சுவையாக இருக்கும். நோ மயக்கம்!

ரோட்டில் விழுந்துகிடக்கும் சர்வேயர்கள்!

தின்ம வயதில் இருக்கும்போது, பொங்கல் வந்தாலே நமக்கு ஒரு தனி உற்சாகம்தான். பொங்கலுக்கு முதல்நாள் வரிசை கிழமை (போகினு எல்லாம் சொல்றது இல்லை). சகோதரி வீடுகள், அப்பாவோட சகோதரிகள் (அத்தைகள்) வீடுகளுக்குச் சீர் வரிசை கொண்டுபோறதுதான் முக்கிய நி

தஞ்சாவூரான்

கழ்வு இன்னிக்கு. செம ஜாலியா இருக்கும். ஏன்னா... வரிசை கொண்டு போனா, புதுச் சட்டை, காசு கிடைக்கும். நாம பாக்குற பெரிய தொகையே பொங்கலின் போதுதான். இன்னிக்குத்தான் நிறையப் பேரு, தன்னோட தண்ணி அடிக்கும் கெப்பாசிட்டியைச் சோதிச்சுப் பாப்பாங்க. நிறையச் சண்டைகளும் நடக்கும். ரோட்டுல நிறைய சர்வேயர்கள் விழுந்துகிடப்பாங்க. புதுக் குடிகாரர்கள் முளைப்பாங்க. பொங்கல் அன்னிக்கு (பெரும்பொங் கல்னும் இதைச் சொல்லுவோம்) மதியம் வரை, பெருசா ஒண்ணும் நமக்கு வேலை இருக்காது. அன்னிக்குப் பொங்க சோறு மேல வரும் பாருங்க, ஒரு கோவம்... போற எடத்துல எல்லாம் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துனா? சாயந்திரமானா அவங்கவங்க மாடுகளுக்கு அவங்கவங்க கட்சி பெயின்ட் கொம்புல ஏறிடும். எங்க வீட்டுல ஒவ்வோர் அண்ணனும் ஒரு கட்சி, அப்பா ஒரு கட்சி (கிட்டத்தட்ட எல்லாக் கட்சியிலயும் இருந்திருக்காரு), ஒவ்வொருத்தருக்கும் பிடிச்ச மாட்டு ஜோடிகளுக்கு  பெயின்ட் அடிச்சு விடுவாங்க!