Published:Updated:

காவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு!

காவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு!

காவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு!

காவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு!

Published:Updated:
##~##

திருச்சியில் கேமரா வைத்தால் கோடிகளை அள்ளலாம் என்பது கோலிவுட்டின் கோல்டன் சென்டிமென்ட். 'திருடா திருடி’, 'ஈரம்’, 'மலைக்கோட்டை’ என, நீளும் ஷூட்டிங் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்... 'எங்கேயும் எப்போதும்’!

 ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதி... வெயிலில் கண்ணைப் பறிக்கின்றன ஃபோகஸ் லைட்டுகள். ''ரெடி... டேக்... ஆக்ஷன்...'' எனக் குரல் கேட்கும் ஸ்பாட்டைச் சுற்றி மக்கள் தலைகள் முண்டியடிக்கின்றன. எட்டிப் பார்த்தால்... மீன் மாதிரி இருக்கும் பெண்ணே கையில் மீன்தொட்டியுடன் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்க... கறுத்த, தடித்த வாலிபர் ஒருவர், எதிரே நின்று உருகி உருகி வசனம் பேசிக்கொண்டு இருந்தார். 'ஏண்டி... இவரா ஹீரோ?' கூட்டத்தில் இருந்து ஒரு பெண் டென்ஷனாகக் கேட்க... ''இவருதான் டைரக்டரு... சீன் சொல்லிட்டு இருக்காரு' என்ற பதிலைக் கேட்ட பின்னரே நிம்மதி அடைகிறார் அந்தப் பெண்.

காவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு!

'படம் பேரு 'மன்னார் வளைகுடா’. கதாநாயகனா நம்ம கஞ்சா கருப்பு நடிக்கி றாரு. அவருக்கு ஜோடி காவேரி. இப்ப நடிச்ச ரெண்டு பேரும் இன்னொரு ஹீரோ, ஹீரோ யின். பொண்ணு பேரு... ஸாரி, ஹீரோயின் பேரு அமி (கரெக்ட்தான்... பொண்ணு தமிழ் நாடு இல்லை). பையன் பேரு ஜெஸ்ஸி... ஆஸ்திரேலியாக்காரர்' என்று தகவல் சொல்கிறார்கள் யூனிட் ஆட்கள்.

நடித்த களைப்போடு ஷோபாவில் ஹாயாகப் படுத்து இருந்த ஹீரோ சார் (கஞ்சா கருப்புதான்) கண்களைக் கசக்கிக்கொண்டு, 'வாங்கண்ணே... உட்காருங்க' என்று வரவேற்கிறார். ''என்ன சார்... ஃபுல் காமெடிப் படமா?'' என்றால், 'இல்லீங்க... இது தமிழக மீனவர்கள் படுற அவஸ்தையையும் விளைநிலங்கள் பிளாட்டு களா மாறி வர்ற வேதனையையும் ஒண்ணா சொல்ற படம். படத்தோட 'கிளைமாக்ஸ்’ ரொம்ப வெயிட்டா இருக்கும். இந்தப் படத் துல நான் ஹீரோ இல்லை; கதை நாயகன். எட்டுப் பேர் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறாங்க. டைரக்டர் தனசேகரன், ராமேஸ்வரத்துக்காரரு.  அதனால் மீனவர்களோட வலியை கரெக்ட்டாச் சொல்லி இருக்காரு. 'வைகாசி பொறந்தாச்சு’ பட ஹீரோயின் காவேரிதான் நமக்கு ஜோடி' எனச் சொல்லிவிட்டு, சிரிக்கிறார். (இதுக் குப் பேருதான் வெட்கப்படுறதோ?)

''படத்துல ரொமான்ஸ் இல்லையா?'' என்று கொக்கி போட்டால், மீண்டும் பலமான சிரிப்பு (அதே வெட்கம்). 'ரொமான்ஸ் பண்ற வயசா இது? ஆனா, கதைக்குத் தேவையான விஷயத்தைப் பண்ணி இருக்கோம். இந்தப் படம் வெளி வந்த பின்னாடி ஆஸ்திரேலியா பையன் ஜெஸ்ஸிக்கும் நம்ம காவேரிக்கும் பெரிய பட வாய்ப்புகள் எல்லாம் வரும். ஏன்னா, ஜெஸ்ஸி அவ்ளோ சூப்பரா, என்னைவிட நல்லா நடிக்கிறான். முழு நீளக் காமெடிப் படம் இல்லைன்னாலும், காமெடியும் படத்துல இருக்கு'' என்று பேசிக்கொண்டே போக... ஹீரோயின் பக்கம் அப்பீட்    ஆனோம்.  

காவேரி என்றால் திருச்சி மக்கள்பலருக் கும் தெரிவது இல்லை. 'தங்கம்’ சீரியலின் 'இளவஞ்சி’

காவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு!

என்றால் கற்பூரம் போலப் பற்றிக்கொள்கிறார்கள். 'வணக்கம் மேடம். உங்க சீரியல்னா விரும்பிப் பார்ப்போம். பார்த்துட்டுதான் வீட்ல சாப்பாடே’ என மாமிகளும், மாமாக்களும் 'செல்ஃப் இன்ட்ரோ’ கொடுத்துவிட்டு இளவஞ்சி யுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார் கள்.

''ரொம்பப் பெரிய கேப்புக்குப் பிறகு மறுபடியும் சினிமா?'' என்று கேட்டால், அமர்க்களமாகப் பதில் வருகிறது.

''கேப்புனு சொல்ல முடியாது. சினிமா, என்னோட பிறந்த வீடு மாதிரி. சீரியல், புகுந்த வீடு. ரெண்டுமே நம்ம குடும்பம் தானே? வெள்ளித்திரை, சின்னத்திரை ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லை''

தியேட்டர்கள் மட்டுமே பொழுதுபோக்கு என்று இருந்த திருச்சி மக்களுக்கு, இப்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டுகளும் பெரிய பொழுதுபோக்குதான்!  

ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்