Published:Updated:

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

Published:Updated:
பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

லக்கிய மேடைகள், கம்பன் கழகங்கள், கோயில்கள், பள்ளி - கல்லூரிகள் எனப் பல மேடைகள் ஏறிச் சொற்பொழிவு ஆற்றுபவரும், 'தகப்பன்சாமி’, 'கோடரிக்காம்பில் பூக்கள்’, 'சாதனைகள் சாத்தியமே’ ஆகிய நூல்களை எழுதியவருமான கவிஞர் சுமதிஸ்ரீ, தன்னுடைய சொந்த ஊரான திருச்சி குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''நான் பிறந்து வளர்ந்த திருச்சியைச் சுற்றியும் வயலூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம், வெக்காளி அம்மன் கோயில், மலைக்கோட்டைனு புகழ்பெற்ற பல கோயில்கள் இருக்கு. இங்கே இருக்கும் தாயுமானவ சுவாமி கோயிலின் தனிச் சிறப்பு என்னான்னா, இந்தக் கோயில்ல இருக்கிற நந்தி, துவார பாலகர்கள், சுற்றுகளில் உள்ள தெய்வங்கள் எல்லாம் கிழக்குப் பார்த்து இருக்க, மூலவர் மட்டும் மேற்குப் பார்த்த மாதிரி இருப்பார். இதுக்கு ஒரு காரணக் கதை இருக்கு.

சாரமா முனிவர் சிவனுக்காக நாகலோகத்தில் இருந்து செவ்வந்திப் பூ பறிச்சுட்டு வந்தாராம். அப்ப உறையூரை ஆட்சி செய்த பராந்தகச் சோழன், அந்தப் பூவை தன்னோட மனைவிக்கு வேணும்னு பறிச்சுக்கிட்டாராம். சாரமா முனிவர் சிவபெரு மான்கிட்ட முறையிட, மேற்கில் இருக்கிற உறையூரைத் திரும்பிப் பார்த்து மண் மழை பெய்விச்சாராம் சிவன். அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் மூலவர் மேற்குப் பார்த்தவாறு இருக்கிறாரு.

பழைய காவிரி ஆற்றுப் பாலம்தான் திருச்சி மக்களில் பெரும்பான்மையோரின் நடைபயிற்சிக் களம். ஆள் நடமாட்டம் இல்லாத மதிய நேரங்களில் காதலர்களின் நடமாட்டமும் இருக்கும். வெள்ளக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி யின் அழகை, முழு நிலவொளியில் ஆற்றுப் பாலத்தில் இருந்து ரசிக்கும் அழகு இருக்கிறதே... அது ஒரு கவிதை!

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

கல்லணை இருக்கிற இந்த ஊர்லதான் சொல்லணை கட்டிய வாலி, சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் எல்லாம் பிறந்தாங்க. செவிகளில் கருத்துத் தேன் பாய்ச்சிய பேராசிரியர் ராதாகிருஷ்ணன், சத்யசீலன், அறிவொளி, திருச்சி சிவா போன்ற பேச்சுலக ஜாம்பவான்களுக்கும் திருச்சிதான் சொந்த ஊர்.

தரமான கல்வியைக் கொடுக்கக் கூடிய, கல்வி நிறுவனங்கள் திருச்சியில் அதிகமா  இருக்குன்னு சொன்னா அது மிகையில்லை. இந்தியாவிலேயே இசை மற்றும் நடனத்துக்கு இருக்கிற ஒரே பல்கலைக்கழகமான 'கலைக் காவிரி’ திருச்சியிலதான் இருக்கு. இன்னைக்கு நான் தமிழ்ல இருக்கிற எல்லாத் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றம் பேசி இருக்கேன். இருந்தாலும்கூட நான் 10-ம் வகுப்பு மாணவியா இருந்தப்ப முதல்முதலா என் பேச்சை வானொலியில் ஒலிபரப்பியது கலைக் காவிரிதான்.

எட்டாவது வரைக்கும் திருச்சி மேலப்புதூர்ல இருந்த ஜூலியானால் நடுநிலைப் பள்ளியில படிச்சேன். அங்கே தலைமை ஆசிரியரா இருந்த அருட்சகோதரி எத்திலின் என்பவர்தான் எனக்குள் இருக்கிற பேச்சு ஆற்றலை வெளிக்கொண்டுவந்தாங்க. வாரம் ஒரு தலைப்புக் கொடுத்து, என்னை பிரேயர்ல பேசச் சொல்வாங்க. அப்படி அவங்க கொடுத்த பயிற்சிதான் இன்னைக்கு என்னை ஒரு பேச்சாளரா உருவாக்கி இருக்குது.

திருச்சியைப் பற்றிப் பேசினாலே எனக்குள்ள மகிழ்ச்சிப் பெருகிடும். ஏன்னா, திருச்சி நான் பிறந்த ஊர் மட்டும் இல்லை. என்னை உருவாக்கிய ஊர். கடந்த ஏழு வருஷமா பணி நிமித்தமா நான் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்தாலும், திருச்சியில் வாழ்ந்த அனுபவமே தனி. காலத்துக்கும் மறக்க முடியாத ஊர் என்றால் அது திருச்சிதான்!''

பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு!

- கி.ச.திலீபன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism