Published:Updated:

திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!

திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!

'புவி மெச்ச மணந்திடும்
பச்சைக் கிளியிடம் 
பிச்சைக் கேட்கலாமோ?’

##~##

-இப்படிக் கவிதை நயமாக வரதட்சணை என்னும் சமூக நோயைச் சாடும் பல வாசகங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பூங்கா, ஓய்விடம், வாகன நிறுத்துமிடம், உணவகம் என எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன!

இந்தக் கல்லூரியில் இயங்கிவரும் 'கைக்கூலி கைவிட்டோர் கழகம்’ (வரதட்சணையைக் கைக்கூலி என்றே அழைக்கின்றனர்) என்ற அமைப்பு, வரதட்சணையை ஒழிப்பதிலும் எதிர்ப்பதிலும் தீவிரம் காட்டுகிறது.

''என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளைவிட இந்த அமைப்பு எங்கள் கல்லூரியில் வலிமையானது. வாரம்தோறும் விடுதிக் கலையரங்கில் வரதட்சணைக்கு எதிராக ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் பங்கேற்பாளர்களை 'வரதட் சணை வாங்க மாட்டோம்’ என்று உறுதி மொழியை ஏற்கச் செய்வோம்.' என்கிறார் இந்த அமைப்பின் தலைவரான ஜாபர் செரீஃப்.

1984-ல் தோன்றி வெள்ளிவிழா கண்ட இந்த அமைப்பைத் தோற்று வித்தவர் கூத்தாநல்லூரைச் சேர்ந்த அப்துல் அலீம் என்கிற முன்னாள் மாணவர். தன் சொந்த ஊரில் மணப்பெண்ணிடம் மணமகன் வீட்டார் கிலோக் கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் பணம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கேட்கும் காரணத்தால், பெண்ணைப் பெற்றவர்கள் அல்லல்படுவதைக் கண்டு மனம் பொறுக்காத அந்த மாணவரின் மனதில் கிளம்பிய சிறு பொறிதான் 'கைக்கூலி கைவிட்டோர் கழகம்’.

திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!
திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!

84-ல் வெறும் 10 இளைஞர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இப்போது 800 பேர் உறுப்பினர்கள். இந்த அமைப்பின் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லூரியிலும் இந்த அமைப்பின் கிளையைத் தொடங்கி வரதட்சணை எனும் சமூகக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். ரமணா பட 'ஏ.சி.எஃப்’ அமைப்பு போல, இந்த 'ஏ.டி.எஃப்’ அமைப்பினர் தமிழகம் முழுவதும் வியாபித்து இருக்கிறார்கள்.  

''வரதட்சணை வாங்காமல் நடைபெறும் திருமணங்களுக்குக் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் நேரில் சென்று வாழ்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க ஏதோ எங்களால் ஆன சிறுமுயற்சி'' என்று அடக்கத்துடன் சொல்கிறார் கல்லூரி முதல்வரான காதர் முகைதீன்.

''எங்கள் அமைப்பில் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர், பின்னாளில் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்வதாக அறிந்தால், அவ ருக்கு  முகத்தில் அறைவது போன்ற வாசகங்களுடன் கடிதம் எழுதுவோம். வரதட்சணை வாங்காத திருமண ஜோடிகளுக்கு நேரில் சென்றுப் பரிசு வழங்கி கௌரவிப்போம்'' என்கின்றனர் இந்த அமைப்பின் நிர்வாகிகள்.

வரதட்சணைக்கு எதிரான இவர்களுடைய முயற்சி தமிழகம் முழுக்கப் பரவட்டும்!  

திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!
திருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை!

- அ.சாதிக்பாட்சா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு