Published:Updated:

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் வீடுதிரும்பல் மோகன்குமார்

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் வீடுதிரும்பல் மோகன்குமார்

Published:Updated:
##~##

அம்மா, அக்கா, அண்ணிகளால் வளர்க்கப்பட்டவன் நான். அலுவலகத்திலும் பெண் பாஸ்களுடன் பணிபுரிந்தது பல்வேறு வித்தியாச அனுபவங்களைக் கற்றுத்தந்தது.

பெண்மை போற்றுவோம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றையப் பெண்களின் உழைப்பு, பிரமிக்கவைக்கிறது. அலுவலக வேலையுடன், வீட்டில் சமையல், குழந்தைகளுக்குப் பாடம், வயதானவர்களுக்கான கவனிப்பு என, ஒருநாளில் பல வடிவம் எடுக்கிறார்கள். அதீதப் பணிச் சுமை குறித்து எந்தக் குறையும் இன்றி, மகிழ்வுடன் இந்தப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்கள், ஒவ்வொருவரும் போற்றப்பட வேண்டியவர்களே.

'செய்வன திருந்தச் செய்வது’ பெண்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. பெண்கள் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் ஓர் ஒழுங்கும் முழுமையும், அழகுணர்ச்சியும் மிளிர்வதைக் காண முடியும். பிரச்னைகளை அணுகுவதிலும் அவர்களுடைய தைரியமும் தெளிவும் ஆண்களுக்குப் பெரும் பலமாக உள்ளது. நான் சந்தித்த சில வித்தியாசமான பெண்களும் அவர்களிடம் நான் கற்றதும் பெற்றதும் இதோ...

வழக்கறிஞர் அருள்மொழி

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக, பேச்சாளராக

பெண்மை போற்றுவோம் !

அனைவராலும் அறியப்பட்டவர். இவரிடம் ஜூனியர் வழக்கறிஞராக நான் இருந்தேன். பொதுவாக தொடக்கக் காலத்தில் ஜூனியர்களை 'வழக்கைத் தள்ளிப்போட’ (அட்ஜார்ன்மென்ட்) மட்டுமே சீனியர்கள் அனுப்புவார்கள். ஆனால் இவரோ, தான் வர முடியாத சமயங்களில்  மிகக் குறுகிய அனுபவம் இருந்தபோதும், என்னை வாதிட அனுமதித்தார். அந்த வழக்கு குறித்து தெளிவாக எடுத்துச்சொல்லி, என்னென்ன பாயின்ட்கள் பேச வேண்டும் என்று பயிற்சி தந்து அனுப்புவார். இது என்னுள் நிறைய தன்னம்பிக்கையைத் தந்தது.

லட்சுமி மேனன்

பெண்மை போற்றுவோம் !

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களில் மிகச் சிறந்த நிர்வாக இயக்குநருக்கான விருது பெற்ற லட்சுமி மேனனிடம் வேலைசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டுசெல்லும் திறமை பெற்றவர். எப்போதும் புது ஆர்டர்கள் வாங்குவது, அதைத் திறம்படச் செய்வது குறித்தே யோசிப்பார்; பேசுவார். நிமிடத்தில் கோபம் வந்து, சட்டென்று அதை மறந்து, அன்பைப் பொழிவார். அனைவரும் ஓர் அம்மாவைப் போலத்தான் இவரைப் பார்ப்பார்கள். ஒருமுறை எனக்கு வேறு நல்ல வேலை கிடைத்தது. 'இவங்களை விட்டுட்டுப் போகப் போறியா?’ என, மனம் கேள்வி எழுப்பியது. தயங்கியபடியே அவரிடம் சொன்னேன். 'புதிய வேலை இன்னும் பல வாய்ப்புகளைத் தரும்’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

சாரா ஆரோக்கியசாமி  

சென்னை மண்டல கம்பெனி செகரட்டரி இன்ஸ்டிடியூட்டின் இணை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர். படிப்பிலும் தொழிலிலும் எனக்கு மட்டுமல்லாது, என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு வழிகாட்டியாக இருப்பவர். எளிமைதான் இவருடைய சிறப்பு.

சென்னையின் அனைத்து கம்பெனி செகரட்டரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்த பல்வேறு தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். தினமும் உடற்பயிற்சி, டயட் உணவு என்று 15 வருடத்துக்கு முன்பு பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருக்கிறார்.

வேலை நிமித்தம் இத்தகையப் பெண்களிடம் பழகியதில், அத்தனை பேரிடமும் ஓர் ஒற்றுமை. அவர்கள் சென்சிடிவ் ஆனவர்கள். தங்கள் வேலையை இன்னொருவர் குறை சொல்கிற மாதிரி சந்தர்ப்பமே வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவும் சரி, அவர்கள் செய்யும் பரிந்துரைகளும் சரி அத்தனை துல்லியமாக இருக்கும். யாரேனும் கேள்வி கேட்டால், அதற்கு மிகத் தெளிவான விளக்கமான பதில் கிடைக்கும்.

பெண்களிடம் வீட்டில் மட்டுமல்ல... அலுவலகத்திலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism