Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை
##~##

''வாத்தியாரு புல்லட்டைவிட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா... பரீட்சை பேப்பர வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு... எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு... இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும்டோய்ய்ய்ய்!'' -அலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்குக் காலையில வராம எஸ்கேப் ஆகிடுவான். வூட்டுக்குப் போயிடலாமானு ஒரு நினைப்பு வந்துடும்! ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டுத் திரும்ப வூட்டுக்குப் போவணும்னா ஒண்ணு யாராச்சும் தலைவருங்க உலகத்தைவிட்டே எஸ்ஸாகி இருக்கணும். இல்லாங்காட்டி ஊர்ல இருக்கிற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சு இருக்கணும். அதான் டீலு! அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி வர்றது வரட்டும்னு, நல்லா ஜம்முனு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணி வெச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூடுக்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா, பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர் கட்டோட என்ட்ரி போடுவாரு. அந்த டைமிங்ல கடைசி நேரத்துல கிளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாக அமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட, வாத்தியாரு வந்துப்புடுவாரு! 'வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது... அந்த கேப்லகூட 'ஹெச்.எம். அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருனா... ஹெச்.எம். பேசிப் பேசியே நேரத்தை இழுத்துட்டாருனா... அடுத்த பிரீயடுக்கு வாத்தியார் வந்துட்டாருனா... பேப்பர் இன்னிக்குக் கொடுக்கலைனா...’,  இப்படிப் பல (வி)'னா’க்களுக்குக் கனா கண்டுக்கிட்டிருந்தாலும் விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும்! [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]

வலையோசை

சரி, இனி நடப்பது நடந்தே தீரும் அப்படினு மனசைத் தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிஷமே ஒரு டெரரான நினைப்பு வந்து குந்தும் பாருங்க! 'அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்கோமே... அப்புறம் என்னடா தம்பி பயம். அநேகமா நாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம்’ அப்படினு திரும்பவும் ஒரு குட்டி கனவு!

''சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37. பட் பாஸ் மார்க்கு 35 தான். குட். வெரிகுட். இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார்'' அப்படினு அன்பா அனுப்பிவைத்த அந்த வாத்தியாரு, இன்னும் கண்ணுல நிக்கிறாரு... தெய்வம்!

கீழநாஞ்சில் நாட்டு நினைவுகள்!

கீழநாஞ்சில் நாடு... இதுதான் நான் வாழ்ந்து வளர்ந்த இடம். எந்த மாவட்டம்னு கேட்காதீங்க? இது மயிலாடுதுறையில் உள்ள 500 மீட்டருக்கும் குறைவான கல்லுக்காரத் தெரு (கல்லிடா ஸ்டீரிட் அப்படின்னா முடிவு உள்ள தெரு. அதாவது முட்டு சந்துன்னு பேரு. இங்கிலீஷ்காரனிடம் இருந்து உருவி பின்னாடி மருவி கல்லுக்காரத் தெருவாகிப் போச்சு!

வலையோசை

அந்த நாட்லதான் எங்க வீடு. ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட நான்கு அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்ட குட்டித் திண்ணையில் இருந்து ஆரம்பிக்கும் வீட்டின் நுழைவாயில். பெரிய கதவினைத் திறந்து, சின்ன வராண்டாவில் நுழைந்து, பெரிய முற்றத்தினைக் கடந்தால்... அருகே பெரிய ஹாலும், அதை ஒட்டியே ஒரு பெரிய ரூமும் அமைந்து இருக்கும். முற்றத்தினைக் கடந்து பின்புறம் சென்றால்... சமையலறை அருகில் பெரிய கொல்லைப்புற கதவு. கொல்லை எம்மாம் பெருசு. இங்கனதான் எனக்கு எப்போதுமே பிடித்துப்போயிருந்த அந்தக் கிணறும் இருந்தது. சரி விடுங்க! அதெல்லாம் போயே போச்சு! வீட்டுக்குச் சொந்தக்காரர் திடீரென்று ஒருநாள் வீடு காலி பண்ணச் சொல்லிவிட்டார். அந்த நாளில் இருந்து அவர் மேல எனக்கு அத்தனை வெறுப்பு. வீட்டை இடித்துவிட்டு வேறு புதிய வீடு கட்டப்போவதாக, என்னதான் காரணம் சொன்னாலும் எனக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. விளையாட்டுப் பருவத்தில் என்னை அடிக்கடி அடிக்கும் பக்கத்து வீட்டு எருமை (அப்ப இப்படித்தான் கூப்பிடுவேனாக்கும்), அண்ணனின் நண்பனாக இருந்தாலும், என்னையும் விளையாட அழைக்கும் நண்பர்கள் எனப் பல நட்புகள் அந்த வீடு மாறுதலில் பிரிந்துபோனது மறக்க முடியவில்லை!

இப்போதும் அந்த பக்கம் போகையில் என் வீடு இருந்த பக்கம் ஒரு சோகப் பார்வையையும், அந்த ஓனர் வீடு இருந்த பக்கம் ஒரு கோபப் பார்வையையும் செலுத்தாமல் போகமாட்டேன். இன்று அந்த வீட்டில் இருந்திருந்தால், எப்போதும் மாடியில்தான் இருக்கவேண்டும். அப்பதானே ஏ.வி.சி. இன்ஜினீயரிங் - ஆர்ட்ஸ், தருமபுரம் காலேஜ் பஸ்களுக்கு டாட்டா காமிக்கலாம்!? (யாருக்குன்னு கேட்காதீங்க... யாருக்கோ!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism