Published:Updated:

மணியாரம்பட்டி அவரை எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி..!

மணப்பாறை சந்தை ரவுண்ட்-அப்- ஆ.அலெக்ஸ் பாண்டியன் படங்கள்: ர.அருண் பாண்டியன்

மணியாரம்பட்டி அவரை எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி..!

மணப்பாறை சந்தை ரவுண்ட்-அப்- ஆ.அலெக்ஸ் பாண்டியன் படங்கள்: ர.அருண் பாண்டியன்

Published:Updated:
##~##

புதன் தோறும் கூடும் மணப்பாறை வாரச் சந்தை ஸ்பாட், ரொம்பவே அழகானது, ஆச்சர்யமானது!

சந்தைக்குள் நுழைந்ததும்... மலைபோல் குவிந்துள்ள போண்டாக்களும், வடைகளும்தான் வரவேற்கின்றன. ''ஒண்ணு ஒரு ரூவா'' என்று கூவிக்கூவி அழைக்க... ''பத்து ரூவாக்கு இதுல ஒண்ணு, அதுல ஒண்ணாக் கலந்து கட்டு' என்று பொட்டலம் கட்டி வாங்கி, உள்ளே தள்ளியபடிதான் பர்ச்சேஸ் நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமையல் சாமான் தொடங்கி குட்டிக்குட்டி கவுன்கள் வரை சகலமும் கிடைக்கின்றன. வீட்டு உபயோகப் பொருள்கள், கருவாடு, காய்கறி, பழங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஃபேன்ஸி ஐட்டங்கள், ஸ்வீட், காரம் என ஒவ்வொன்றும் தனித் தனி செக்ஷன்களாக வியாபாரம் களைகட்டுகிறது.

''கிலோவே பத்து ரூவாதான்'',  ''வா... வா... வா...'', ''எடுத்துப் பார்த்து நீயே விலை சொல்லு...'' என்று காய்கறிக் குவியல்களில் இருந்து விதவிதமான குரல்கள்.

மணியாரம்பட்டி அவரை எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி..!

'நமக்குப் பக்கத்துல இருக்கிற ராயம்பட்டிதான் தம்பி. கத்திரி, வெண்டை, புடலைனு நம்ம மண்ணுக்கு எல்லாமே நல்லா வரும். அதை இங்கேயே கொண்டாந்து வித்துருவோம்'' என, சுருக்கமாகச் சொல்லிவிட்டு வியாபாரத்தில் மூழ்குகிறார் மாணிக்கம்.

''நான் ரொம்ப வருஷமா யாவாரம் பாக்குறேன். என் பையனை ஐ.டி.ஐ. படிக்கவெச்சுட்டேன். என் பொண்ணை நர்ஸ் ஆக்கிட்டேன்...'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு பெண்மணி காய்களைப் பொறுக்க... ''எல்லாமே நல்ல காய்தாம்மா... அப்படியே எடுமா'' என்று அதட்டுகிறார் அந்தோணியம்மாள்.

''மணியாரம்பட்டி அவரை, எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி'' என்று ஊர் பெயரைச் சொல்லியே கூவுகிறார்கள். இது எந்த ஊர் காய் என்று விசாரித்தே பலரும் வாங்குகிறார்கள். ''அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு சிறப்பு இருக்குல்ல'' என்கிறார்கள் பெருமையுடன்.

மணியாரம்பட்டி அவரை எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி..!

'எனக்கு அம்பது வயசு ஆகுது. வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தவறாம சந்தைக்கு வந்துடுவேன். ஒரு வாரம் காய்கறி, ஒரு வாரம் மளிகை சாமான்னு வாங்குவேன். வாங்குற வேலை இல்லைனாகூட சும்மாவாச்சும் வருவேன். 100 ரூவாத் தாள் ஒண்ணு போதும்... ஒரு வாரத்து காய்கறிச் செலவுக்கு'' - காய்கறி விலை பேசியபடியே சொல்கிறார் பெரியகுளத்துபட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்.

அப்படியே மாட்டுச் சந்தை பக்கம் நகர்ந்தால்...

''சுத்து வட்டாரம் மட்டும் இல்லாம, தமிழ்நாடு பூரா இருந்தும் மாடு ஓட்டிட்டுப்போக வருவாங்க. மணப்பாறை மாடுகளுக்குன்னு தனி மவுசு இருக்கில்ல? பசு, கன்னு, காளை, எருமைனு இங்கே கொண்டாருவாங்க. எங்க தாத்தா காலத்துல இருந்து இங்க நான் வர்றேன். மாடு என்னா கண்டிஷன்னு கரெக்டா சொல்லிப்புடுவேன்'' -மாட்டின் பல்லைப் பார்த்து தரம் பிரிக்கிறார் நல்லதம்பி.

மணியாரம்பட்டி அவரை எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி..!

பரந்து விரிந்துகிடக்கிறது சந்தைத் திடல். காலை விடிவதற்கு முன்பே ஆரம்பித்துவிடும் சந்தை, மெள்ள மெள்ளச் சூடு பிடிக்க ஆரம்பித்து மாலை நான்கு, ஐந்துக்கு எல்லாம் ஜே... ஜே... என்று களைகட்ட ஆரம்பிக்கிறது. வேடிக்கை பார்ப்பது என்றாலே சந்தையைச் சுற்றி வர குறைந்தது மூன்று மணி நேரம் பிடிக்கிறது.

எவ்வளவு பொருள்கள் வாங்கினாலும் பர்ஸ் காலியாவது இல்லை. அன்று ஒருநாள் மட்டும் தங்களுடைய வேலைகளை விரைவிலேயே முடித்துக்கொள்ளும் மணப்பாறை சுற்றுவட்டார ஊர்க்காரர்கள், தவறாமல் சந்தையில் ஆஜர் ஆகிவிடுகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism