Published:Updated:

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

Published:Updated:
வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

பாலிருக்கும்... பழமிருக்கும்... ஆனா?

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோகம் முப்பதுநாள் அப்பிடினாங்க... சரி. ஆசை அறுபது நாள்னாங்க... சரி. மலரினும் மெலிது காமம்... ஓ.கே. இன்னும் என்னன்னவோ சொல்றாங்க. எல்லாம் ஓ.கே! ஆனால், திருமணம் ஆன முதல் இரவில் பாலும், பழமும் வைக்கிறாங்களே... பாலைக்கூட அருந்த வாய்ப்பு உண்டு. இந்தப் பழம்? நான் அறிந்த வரை அந்த நேரத்தில் யாரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள (ஜென்மத்துக்கும் அது மட்டும் முடியாது... அது தனி மேட்டர்) பேசிக்கொண்டு இருப்பதைவிடுத்து, பழம் வெட்டித் தின்றுகொண்டு இருப்பார்கள் எனத் தோன்ற வில்லை. காரணம்... நான் அவ்வாறு செய்யவில்லை. இதை எவன் ஆரம்பிச்சு வெச்சான்னு தெரியல. தேவை இல்லாம இந்த ஒரு விஷயம் மட்டும் காலத் துக்கும் தொடருது. மற்ற பழமாவது பரவாயில்லை... நம்பாளு சில நேரம் அன்னாசிப் பழம்வெச்சு இருப்பான். அதை எப்ப சீவி, எப்ப வெட்டி, எப்பத் தின்னு.... கொடுமை. இதுக்கு நம்பாளு பாட்டு வேற போட்டு இருக்கான். ''பாலிருக்கும்... பழமிருக்கும்...'' ஆமா... இப்பிடியே பாடிக்கிட்டு மட்டும் இருந்தா... பாலிருக்கும்; பழமிருக்கும்; ஆனா, வாரிசுதான் இருக்காது. அடப்போங்கப்பா!

              எம் பேரு என்னா?

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

மனில் உள்ள மஸ்கட் விமான நிலையத்தில், 'சென்னை செல்லும் பயணி இஸ்மாயிலைக் காணவில்லை. அவர் எங்கிருந்தாலும் மேடை அருகில் உள்ள விழா அமைப்பாளரை ச்சேய்... போர்டிங் கௌன்டரை அணுகவும்’னு தொடர்ந்து அறிவிப்பு வந்துகொண்டே இருந்தது. அப்ப நான், ஸ்மோக்கிங் லாஞ்சில் உட்கார்ந்து பொறுமையா சிகரெட் குடிச்சுக்கிட்டு இருந்தேன். இதற்கிடையே விமான நிறுவனப் பணியாளர் ஒருத்தர் கோட்டெல்லாம் போட்டுக்கிட்டு கையில் வாக்கிடாக்கியோடு வந்து, ''நீங்கதான் இஸ்மாயிலா?'' என்று என்னையும் அருகில் தம்மடித்துக்கொண்டு இருந்த வேறு சிலரையும் கேட்டார். நாங்க யாருமே இல்லை என்றவுடன் டென்ஷனாக நகர்ந்துவிட்டார். ஞானோதயம் மாதிரி திடீர்னு அப்பத்தான் தோணுச்சு... ''சென்னை செல்லும் பயணின்னா நாமளும் சென்னை செல்லும் பயணிதான? அவரைக் காணோம்னு தேடுற மாதிரிதான நம்பளையும் இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சுத் தேடுவாங்க? சரி! அதுக்குள்ள நாம நல்ல புள்ளையா போய்டுவோம். அவங்க இஸ்மாயிலைப் பொறுமையாத் தேடட்டும்’னு கௌன்டருக்கு வந்துவிட்டேன். என் டிக்கெட்டைப் பார்த்துவிட்டு கௌன்டரில் இருந்த ஆள், ''யோவ்... எத்தன வாட்டியா கத்துறது ஒம்பேரச் சொல்லி? செவிடாய்யா நீ?'' என்றார் கடுப்பாக. ''என்னா...து? எம் பேரச் சொன்னியா... எப்போ?'' என்றேன் நான். ''அம்மாந் தடவை கூவுனேனேயா இஸ்மாயிலு... இஸ்மாயிலுனு? அது நீதான?'' என்று அந்த ஆள் சொன்னப்பதான் எனக்கு வெளங்குச்சு. ஃபர்ஸ்ட் நேமில் உள்ள எங்கப்பா பேரைச் சொல்லிக் கூப்பிட்டு இருக்காங்கன்னு.

''ஆமா... அது நாந்தான்! ஆனா, நான் இல்லை!''

காதல்... காதல்... காதல்!

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா

ண்ணாப்புல இருந்து நம்ப கூடவே படிக்கிற புள்ளைக மேல பெரும்பாலும் நமக்கு ஒரு இது வராது. இடையில நம்ப பள்ளிக்கூடத்துல வந்து சேந்த புள்ள மேலயோ... இல்லாட்டி, இடையில நம்ப போய்ச் சேந்த பள்ளிகூடத்துல உள்ள புள்ள மேலயோதான் ஒரு இது வரும். இதத்தான் சொன்னாய்ங்களோ, 'எங்கிருந்தோ வருவதுதான் காதல்’னு. பழக்கப்பட்ட மாடு, வண்டிக்காரன் தூங்குனாலும் கரெக்ட்டா அந்த இடத்துக்குப் போற மாதிரி, இன்ட்ரவல் மணி அடிச்சவுடன நம்ப காலு அவ வர்ற இடத்துக்கு கரெக்டாப் போயி நிக்கும். அந்தப் புள்ள நம்பளத் தாண்டி போனவுடன அப்பிடியே திரும்பிப் பாப்பாளானு கெடந்து அடிச் சுக்கும் பாரு மனசு. 'காதல் வரும் வழி அறிந்தது... செல்லும் வலி மிகுந்தது’னு நம்ப பய தமிழுக்குச் சேவை செய்ய ஆரம்பிக்கிறது அப்பத்தான்.

நம்ப பார்க்கிற புள்ளையோடவே ஒரு புள்ள கூடவே பள்ளிக்கூடத்துக்கு வரும், போகும். அந்தப் புள்ள லேசா நம்பளப் பார்த்தாக்கூட  நம்ம டாவே நம்பளப் பார்த்த மாதிரி வருமேய்யா ஒரு ஃபீலு! பெரும்பாலும் நம்ம டீல் வுடுற ஜாரி, நம்ம செக்ஷன்ல படிக்காம வேற செக்ஷன்ல இருக்கும். அட்டன்டென்ஸ் கொண்டுவர்ற பியூனைப் பார்க்கிறப்ப எல்லாம் தோணும்... ''பாவிப் பய... இவனுக்கெல்லாம் மணிக்கொரு வாட்டி அவளப் பார்க்கக் கொடுத்துவெச்சுருக்கேய்யா!'' - இது ஆரம்பத்துல. ''அந்த நாயா பொறந்து இருந்தாலும் அவ வீட்ல இருந்து அவ கையில கொஞ்சிக்கிடக்கிற பாக்கியம் கிடைச்சு இருக்குமே.'' இது முத்துன ஸ்டேஜ். ''நாய் மாதிரி கத்திக்கிட்டே இருக்காப் பாரு'' - இது கல்யாணம் பண்ணி தெளிஞ்ச பிறகு.

காதல்... காதல்... காதல்! கல்யாணம் மட்டும் பண்ணிட்ட... ம்மவனே ஆல்சோ ம்மவளே... சாதல்... சாதல்... சாதல்!

வலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism