Published:Updated:

என் ஊர் : கடவூர்

முயல் வேட்டையும் கறி விருந்தும்!

என் ஊர் : கடவூர்

முயல் வேட்டையும் கறி விருந்தும்!

Published:Updated:
##~##

''நான்கு பகுதிகளும் மலைகளால் சூழப்பட்டு, அதன்  நடுவில் இருப்பது கடவூர். கடவு என்றால் வழி. இந்த ஊர், மலைகளுக்குச் செல்லும் பாதையில் அமைந்து இருப்பதால் இந்தப் பெயர் பெற்றது'’- அழகாகத் தன் ஊரான கடவூரின் கதைசொல்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான கடவூர் மணிமாறன்.    

 ''மலைகளுக்கு நடுவே கூண்டுக் கிளி போல அடை பட்டு இருக்கும் எங்கள் ஊர், 34 சிற்றூர்களின் தலை நகராகும். மலை வளமும் மண் வளமும்கொண்டது எங்கள் ஊர். சோழப் பேரரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இந்த ஊரை 1630-ல் நாயக்கர்கள் கைப்பற்றி ஆண்டு வந்தனர். வெள்ளைக்காரர்கள் இங்கு வந்த பிறகுகூட, கடவூரை ஆண்ட குறுநில மன்னர்கள் வெள்ளைக்காரர்களை ஆதரித்த காரணத்தால், அவர்களே இங்கு அதிகார பீடத் தில் இருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1957-ல்தான் முதன்முதலாக எங்கள் ஊரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 1963-ல் அது உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த் தப்பட்டது. அந்த வருடம் அங்கு பயின்ற 16 பேரில் நானும் ஒருவன். அப்போது பொதுத்தேர்வு என்றால் இங்கு இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மணப்பாறை சென்றுதான் எழுத வேண்டும். மாட்டுவண்டிப் பயணம்தான். வண்டிக் காரர் மாட்டை ஓட்டிக் கொண்டே வர, நாங்கள் படித்துக்கொண்டே போவோம்.

என் ஊர் : கடவூர்

இங்கு இருக்கும் கருணைகிரி பெருமாள் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. மாசி மாதம் இங்கு நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு, சுத்துப்பட்டு ஊர்க்காரர்கள் அனைவரும் வந்து குவிந்துவிடுவார்கள். எங்கள் ஊரில் வசிக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தத் திருவிழாவில்கலந்து கொள்வார்கள். முள்ளிப்பாடியில் இருக்கும் காளி கோயிலில் கிடா வெட்டுவைத்தால், தொழில் பெருகும் என்பது எங்கள் மக்களின் நம்பிக்கை. இதுக்காக கரூர், குளித்தலையில் இருந்து எல்லாம் வந்து கிடா, சேவல்களைப் பலிகொடுத்து சாமி கும்பிட்டுவிட்டுப் போவார்கள்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவும் ஆடி 18-க்கு முந்தைய நாள் இரவும் முயல் வேட்டைக்குச் செல் வது எங்கள் ஊர் மக்களின் வழக்கம். வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எல்லாம் முயல் வேட்டைக்காகவே பழக்கப்படுத்தின வேட்டை நாயைக் கூட்டிக்கிட்டு மலைப் பகுதிக்குக் கிளம்பிவிடுவார்கள். ராத்திரி 3 மணி வரைக்கும் அலைஞ்சு எப்படியும் ஆளுக்கு ரெண்டு முயலாவது வேட் டையாடிட்டுதான் திரும்புவாங்க. அதை வீட்டுக்கு வந்திருக்கிற சொந்தபந்தங்கள், விருந்தாளிகளுக்குச் சமைத்துப் போடுவாங்க. எங்கள் ஊரில் இன்னும் சுடுகாய், கிட்டிப்புள், பச்சைக் குதிரை, தட்டாங்காய், பல்லாங்குழி போன்ற கிராமிய விளையாட்டுக்களே நடைமுறையில் இருக்கு.  

எங்கள் ஊரின் சிறப்பே விவசாயம்தான். மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் மழைக்கும் பஞ்சம் இல்லை. கம்பு, சோளம், நிலக்கடலை, வெங்காயம், மிளகாய் இதெல்லாம் எங்க ஊரில் அபாரமாக விளைகிறது. பல மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் ஆகிறது. எங்கள் ஊர் மலையில் கனிம வளங்கள் அதிகம். இங்கே தோண்டி எடுக்கப்படும் கற்கள் ஜப்பான் நாட்டுக்கு ஏற்றுமதி ஆகுது.

என் ஊர் : கடவூர்

எங்க பகுதியில் காவல் நிலையம் இருக்கு. ஆனா, பெரும்பாலும் யாரும் போலீஸ் ஸ்டே ஷன், கோர்ட்டுனு போறதே இல்லை. வீட்டுப் பெரியவங்களை நடுவராவெச்சே பிரச்னை களைப் பேசி சுமுகமாத் தீர்த்துக்குவாங்க.

ரயில் போக்குவரத்து எங்கள் ஊருக்கு இல்லை இதுதான் எங்கள் மக்களின் நீண்டநாள் கனவு. எங்கள் கனவு ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்!''

- ஞா.அண்ணாமலை ராஜா, படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism